போய், சொல்லுங்கள் 60-0417M 1. …அங்கே பின்னாலுள்ள அந்த வாலிப சகோதரி சாட்சி பகரந்தபோது, அது அந்த பாடலையே வெளிப்படுத்துகிறது என்றே நான் நினைக்கிறேன்: ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும், தூய்மையுமாயுள்ளது! எவ்வளவு ஆழமற்றதும், வலிமையானதுமாயுள்ளது! இது நமக்கான என்னே ஒரு நாளாக இருக்கிறது. நாம் அமைதியாக, இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, ஜெபத்திற்கு முன்பாக கர்த்தரிடத்தில் அந்த பாடலை பாடுவோமாக. டெடி, நீங்கள் விரும்பினால், சற்று, அந்த சிறு சுருதியை எங்களுக்குக் கொடுங்கள். ஜெபத்திற்கு சற்று முன்பு, நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடும், நம்முடைய கண்கள் மூடியிருப்பதோடும்…நாம் அதைப் பாடுவோமாக. ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும், தூய்மையுமாயுள்ளது! எவ்வளவு அளவிடமுடியாததும் வலிமையானதுமாயுள்ளது! அது என்றென்றுமாயிருக்கு…[ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 2 மையாக, தண்ணீர் முழுவதும் மையாக மாறியிருந்தாலும், முழு ஆகாயத்தையும் தோல் காகிதமாக்கியிருந்தாலும், பூமியில் உள்ள ஒவ்வொரு தண்டையும் இறகாக்கி, ஒவ்வொரு மனிதனையும் எழுதும் தொழிலில் அமர்த்தினாலும், அதனால் இன்னமும் ஆதாமின் விழுந்துபோன வம்சத்திற்கு தேவனுடைய அன்பை வெளிப்படுத்த முடியாது. பிதாவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அந்த விலையேற்றப் பெற்ற இரத்தத்திற்காகவும், அந்த உயிர்த்தெழுதலின் காலை நினைவுக்காகவும், பரிசுத்த ஆவியினால், இன்று எங்களுடைய இதயங்களில் ஊற்றப்பட்டுள்ள உம்முடைய மீட்பின் அன்பிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தெயவீகமானவரே, சிருஷ்டிகரே, அவரோடு ஒரு ஐக்கியத்திற்குள்ளாக எங்களைக் கொண்டு வாரும். ஒரு சகோதரத்துவத்திற்குள்ளாக எங்களைக் கொண்டு வாரும், பூமியிலே, அதற்கு மிஞ்சினதேயிருந்ததில்லை. மறுபடியும் பிறந்த ஒரு புருஷர் மற்றும் ஸ்திரீகளின் சகோதரத்துவத்தோடு ஒப்பிடக்கூடிய எந்த விடுதியோ, எந்த பொருத்தனையோ ஒருபோதும் இருக்கவே முடியாது. மேலும் என்றென்றும் பரிசுத்தவான்கள் மற்றும் தூதர்தளின் கீதமுமாகவே இருக்கும்! 3 நீர் எங்களுக்காக செய்துள்ளவற்றிற்காக, எங்கள் இதயத்தில் உள்ள எங்களுடைய—எங்களுடைய நன்றியுணர்வை, நாங்கள் வெளிப்படுத்திக் கூற முயற்சிக்கும் யாவற்றையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்றே இன்றைக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். மரியாளும், மகதலேனா மரியாளும், சீஷருடைய இருதயங்களும் அந்தக் காலை மகிழ்ச்சி அடைந்தன என்பதை மாத்திரம் அறிந்துகொள்ளாமல், நாங்களும் கூட, இன்றைய உம்முடைய சீஷர்களான, எங்களுடைய இருதயங்களும், அவர் மரித்துவிடவில்லை, ஆனால் உயிரோடிருக்கிறார் என்பதை நாங்கள் கண்டறிகிற வேளையிலே மகிழ்ச்சியடைகின்றன. அவர் எப்போதும் எங்கள் இருதயங்களிலும், எங்கள் மத்தியிலும் உயிருள்ளவராகவே தரித்திருப்பாராக. நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். உயிர்த்தெழுதலை எவருமே ஒருபோதும் வெளிப்படுத்த முடியாதே! 4 இப்பொழுது, இந்த உயிர்த்தெழுதலின் காலையில், இப்பொழுது சிறு நிகழ்வுகள் சபையில் நடப்பதற்கான ஒரு அற்புதமான நேரமாய் இது உள்ளது, அதாவது, தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் பிரதிஷ்டை செய்தல். இது புதிதான ஒன்றாயுள்ளது, அவர்களுடைய குடும்பத்தில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆசிர்வாதம் அவர்களுக்கு வந்துள்ளது. அவர்கள் அதை தேவனுக்கு, திரும்ப அளிக்க, விரும்புகின்றனர். 5 அதன்பின்னர்—காலை செய்திக்குப் பிறகு, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம், அதாவது உங்களுடைய சுகவீனத்திலிருந்து உங்களுடைய புதிய ஆரோக்கியத்திற்குள்ளாக நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுவீர்கள். அதன்பின்னர் உடனடியாக, ஞானஸ்நானம்பண்ணப் படாதவர்களுக்கு, அதைக் குறித்த ஒரு உயிர்த்தெழுதலை நாங்கள் அளிக்கப்போகிறோம்; புதிய ஜீவனுக்கு உயிரோடெழும்ப, தண்ணீரில் அடக்கம்பண்ணப் போகிறோம். இது இக்காலை முற்றிலுமாக உயிர்த்தெழுதலாய் உள்ளது, உயிர்த்தெழுதலே! இந்த ஆச்சரியமான உயிர்த்தெழுந்த காலையைக் குறித்து, நாங்கள் பாடல்களை பாடி, மற்றவருடைய சாட்சிகளைக் கேட்கையில், எங்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியாக்கப்பட்டு இலகுவானதாயுள்ளன. நாங்கள் வெளியே நோக்கிப் பார்த்து, தேவன் அதைக் குறித்து மகிழ்ச்சியாயிருப்பதையும், மரங்கள் உயிர்த்தெழுந்து கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கிறோம். 6 கொஞ்ச காலத்திற்கு முன்பு, கென்டக்கியில், திரு. உட்டும் நானும் அணில் வேட்டைக்காக ஒரு மனிதனுடைய இடத்திற்கு சென்றிருந்தோம். எனக்குத் தெரிந்தவரை, அந்த மனிதன் இப்பொழுது இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கலாம், அவர் ஒரு நாத்திகனாக இருந்திருக்க வேண்டும். சகோதரன் உட் அவரிடம் கேட்டார், “நான் உங்களுடைய இடத்தில் அணில் வேட்டையாடலாமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “சரி, உட், நீர் அணில் வேட்டையாடலாம். போய் வேட்டையாடுங்கள்” என்றார். அப்பொழுது இவர், “பாருங்கள், நான் என்னுடைய போதகரை கூட அழைத்து வந்துள்ளேன்” என்றார். 7 அதற்கு அவரோ, “உம்மோடு எப்பொழுதும் ஒரு பிரசங்கியாரை அழைத்துச் செல்லும் அளவுக்கு, நீர் அவ்வளவு தாழ்ந்தவராகிவிட்டீர் என்று என்னிடம் பொருட்படுத்தாமல் சொல்லுகிறிரோ!” என்றார். 8 எனவே அவர் என்னை அறிமுகப்படுத்த—அங்கே அழைத்தார். அவர் ஒருவிதமான கடினமான நபர் என்று இந்த நபர் கூறியிருந்தார். அதாவது, அவரை விசுவாசிக்கச் செய்யும்படியான எந்த காரியத்தையும், அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மற்றவர்களாலும் அவர் சொல்லப்பட்டார். 9 அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து நான் ஒரு ஆப்பிளை எடுத்தேன். அது ஆகஸ்ட் மாதமாயிருந்தது. அப்பொழுது நான் அந்த மனிதரிடம் கூறினேன், நான், “அந்த மரம் எவ்வளவு வயதானது?” என்று கேட்டேன். 10 அதற்கு அவர், “சுமார் முப்பது வருடங்கள்” என்று கூறினார், ஏதோ ஒன்றை அல்லது வேறொன்றை. அவர் அதை நட்டிருந்தார். 11 அப்பொழுது நான், “அது ஆப்பிள் பழங்களை கொடுத்துக்கொண்டு வருவது முதற்கொண்டே நீர் அதை புசித்து வந்துள்ளீரா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம், ஐயா” என்றார். 12 மேலும் நான், “அந்த மரத்திற்கு என்ன சம்பவிக்கிறது? நீங்கள் அதை நோக்கிப் பார்த்தால், அது இப்பொழுது ஆகஸ்ட் மாதம், வெப்பமான வானிலையே நிலவிவருகிறது; ஆனால் இப்பொழுது அந்த மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன, மரத்தின் சத்தோ கிளைகளிலிருந்து வெளியேறி, வேர்களுக்குள் சென்று கொண்டிருக்கிறது. அது குளிர் காலம் முழுவதிலும் இங்கேயே தரித்திருக்க வேண்டுமானால், மரமானது உயிரோடு இருக்காது; ஆனால் அதுதானே குளிர்ந்த தென்றல் காற்றிலிருந்து தன்னை மறைத்துக்கொள்ள, கீழே புழுதிக்குள் செல்கிறது. அது இங்கு மேலேயே தரித்திருந்தால், அது மரித்துப் போகும், அது ஒருபோதும் ஆப்பிள் பழங்களைக் கொடுக்காது. ஆனால் அது அடுத்த வருடம் திரும்பி வந்து, எங்கிருந்தோ உங்களுக்கு சில இலைகளை தோன்றச் செய்து, சில ஆப்பிள்களைக் கொண்டு வரும்படி, தன்னை மறைத்துக்கொள்ள கீழே வேர்களுக்குள் செல்கிறது” என்றேன். 13 நான் தொடர்ந்து, “இப்பொழுது, ஐயா, எந்த ஞானம் குளிர் காலநிலைக்கு முன் அந்த சத்து இலைகளை விட்டு, கீழே வேர்களுக்குள் சென்று மறைந்ததுகொள்ளும்படிச் செய்கிறது என்று நீர் என்னிடம் கூற வேண்டும் என்று நான்—நான் கேட்டுக்கொள்கிறேன்? எது அதைச் செய்கிறது என்பதை உம்மால் என்னிடத்தில் கூற முடியுமானால், எது அதை செய்கிறது என்பதை எனக்கு விளக்க முடியுமானால், அப்பொழுது நான் உம்மை தேவன் பேரில் குற்றஞ்சாட்ட அனுமதிப்பேன்” என்றேன். மேலும் நான், “நீங்கள் ஒரு கம்பத்தின் மேல் தண்ணீரை ஊற்றி அது அதை செய்யுமா என்றும், அது பருவகால மாற்றத்தில் அதைச் செய்யுமா என்றும் பாருங்கள். ஏதோ ஒரு மகத்தான ஞானமே அந்த சத்தினை மரத்தின் வேருக்குள் செல்லவைத்து, பின்னர் அதனை மீண்டும் புதிய ஜீவனோடு திரும்பக் கொண்டு வருகிறது. அது தேவனே” என்றேன். 14 அப்பொழுது அவர், “நான் ஒருபோதும் எந்த சபைக்கும் சென்றதேயில்லை” என்றார். மேலும் அவர், “ஆனால் ஒருமுறை இங்கே ஆக்டனுக்கு ஒரு பிரசங்கியார் வந்திருந்தார், ஒரு குறிப்பிட்ட பெண்மணி, அந்த மலையின் மேல் வாழ்ந்து வந்தாள் என்றும், அன்றிரவு அந்த கூட்டத்தில் இருந்த அவளுடைய சகோதரியிடம், புற்று நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு சகோதரிக்காக அவள் ஜெபித்துக்கொண்டிருந்ததாகவும்” கூறினார். மேலும் “மனைவியும் நானும் அவளுக்கு உதவி செய்ய அங்கு சென்றிருந்தோம்” என்றும் கூறினார். மேலும், “அவர்கள் அவளை ஒரு படுக்கை விரிப்பில் திருப்பிப் படுக்க வைக்கும் அளவிற்கு அவள் வயிற்றுப் புற்று நோயினால், மிக மோசமாக இருந்தாள் என்றும், அவளுடைய சகோதரி அந்தக் கைக்குட்டையைத் திரும்பக் கொண்டுவந்தாள்” என்றும், “அவளுடைய நிலைமைகளையும் மற்றுமுள்ள யாவற்றையும் அந்த மனிதன் அவளிடத்தில் கூறியப் பிறகு, ‘அந்தக் கைக்குட்டையை அவள் மேல் வைத்தாள்’” என்றும் கூறினார். மேலும், “அவள் இன்றைக்கு சுகமாய் இருக்கிறாள்” என்றும் கூறினார். 15 “அதுவே காண்பிக்கும்படிச் செல்கிறது.” நான், “மரத்திலுள்ள அந்த சத்தினிடம், உங்கள் கண்களுக்கு முன்பாக, வருடாவருடம் வேர்களுக்கு கீழாக சென்று மறைந்துகொள்ளும்படிச் செய்யக் கூறின, அதே ஞானமே அந்த ஸ்திரீயின் மீது வைக்கும்போது அவள் சுகமடைவாள்…என்றும் கூறினதே” என்றேன். மேலும் நான், “அது மிக—மிக மறைபொருளாய் இருக்கவில்லையே. வருடா வருடம் உங்களுடைய முன் முற்றத்தில் நின்றுகொண்டிருக்கிற அந்த மரமானது, ஒரு சிறந்த போதகரைக் காட்டிலும் அதை உங்களுக்குச் சொல்லுகிறதே,” என்றேன். 16 நாம் சற்று சுற்றும் முற்றும் நோக்கிப் பார்ப்போமானால், நாம் தேவனை எங்கும் காணலாம். அவர் ஒவ்வொரு மரத்திலும், ஒவ்வொரு புல்லின் அமைப்பிலும் இருக்கிறார். தேவனைத் தவிர வேறு எதுவுமே அதை உருவாக்க முடியாது. அதை போன்று காணப்படுகிறது ஏதோ ஒன்றை நம்மால் உருவாக்க முடியும்; ஆனால் அந்த ஜீவனை அல்ல, அது தேவனாயுள்ளது. 17 இப்பொழுது, இங்குள்ள சில வீடுகளில் ஒரு சிறிய புல்லின் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது, நாம் இந்த சிறு குழந்தைகளை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்ய விரும்புகிறோம். டெடி, நாம் இங்கே பாடுகிற ஒரு சிறு பாடல் நமக்கு உண்டு, அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், என்ற பாடலை, தங்களுடைய குழந்தைகள் பிரதிஷ்டை செய்யப்பட விரும்புகிற தாய்மார்களும் தகப்பன் மார்களும், தங்களுடைய சிறுவர்களை இங்கே பீடத்தண்டை அவர்கள் கொண்டு வருகையில் இப்பாடலை வாசியுங்கள். 18 இந்தக் காலையில் பீடத்தின் மேல் இங்கே ஏராளமான சிறு ஈஸ்டர் மலர்களை நாம் பெற்றுள்ளோம், நாம் பெற்றிருக்கவில்லையா? என்னே, என்னே! குட்டி மரியாளுடையதும், ரூத்தினுடையதும், ரெபேக்காவினுடையதும், குட்டி ஜேம்ஸ், பால் மற்றும் ஜான் என இங்குள்ள எல்லாருடையதுமே உள்ளன என்று நான் நினைக்கிறேன், மற்றொரு தலைமுறைக்கான சிறு ஈஸ்டர் மலர்கள். 19 பரவாயில்லை, அங்கேயே இருக்கட்டும். இந்த—இந்த குட்டி நபர் இங்கு நின்று கொண்டிருக்கிற இந்த புகைப்படத்தை சகோதரன் பீலர் பெற்றுக்கொள்ள விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன், இது—இது சகோதரன் உட்டினுடைய பேரப்பிள்ளை, சகோதரி உட் இங்கே இருக்கிறார். மற்றவர்களும் இப்பொழுது தங்களுடைய சிறுவர்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள். சபையோரே, மேலே வாருங்கள். பரவாயில்லை. சகோதரன் நெவில். 20 பரிசுத்த விவாகத்தின் ஐக்கியம் மகத்தானது, அது தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த விவாகத்தின் மூலமாகவே இந்த அருமையான சிறு குழந்தைகள் பிறக்கின்றனர். 21 நீங்கள் இப்பொழுது இங்கே அதனுடைய பெயரை எனக்கு சொல்ல வேண்டும். பிரெண்டா சூ. நான் உன்னை முதலில் பார்த்ததைக் காட்டிலும் இப்பொழுது நீ நிறைய வித்தியாசமாய் காணப்படுகிற குழந்தையாயிருக்கிறாய். பாருங்கள், இங்குள்ள குட்டி பிரெண்டா சூ உட், உண்மையாகவே நம் எல்லோருக்கும் ஒரு சிறு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக இருக்கிறாள், குறிப்பாக இந்த இளம் வாலிப தாயாருக்கும் மற்றும் தகப்பனாருக்குமே. 22 மேலும் வேதாகம காலங்களில். அநேக ஜனங்கள் இந்த சிறு குழந்தைகளுக்கு தெளிக்கின்றனர்; ஆனால் நம்மால் முடிந்த அளவு நெருக்கமாக நாம் வேதாகம போக்கையே பின்பற்ற முயற்சிக்கிறோம். வேதாகமத்தில் அவர்கள் எப்போதாவது எங்கேயாவது தெளித்ததாக நாம் ஒருபோதும் கண்டதேயில்லை, ஆனால் அவர்கள் கர்த்தராகிய இயேசுவிடம் அவர்களை கொண்டு வந்தபோது, அவர் அவர்களை ஆசீர்வதித்தார். நாம் அவருடைய ஊழியக்காரர்கள் என்ற முறையில், அவர்களை எடுத்து, அவரிடத்திற்கு அவர்களை உயர்த்துவோம். 23 பாட்டனார் எவ்வளவு பெருமைப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன், உங்களுக்குத் தெரியும். எனவே நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் வணங்குவோமாக. 24 கர்த்தராகிய இயேசுவே, தேவனுடைய பிள்ளையே, எங்களுடைய குற்றத்திற்காக ஒப்பு கொடுக்கப்பட்டவரே. சிறு பிள்ளைகள் உம்மிடம் கொண்டு வரப்படுவதைக் காண்பது அத்தகைய ஒரு விலையேற்றப் பெற்ற காரியமாக உள்ளது, தாய்மார்களும் தகப்பன்மார்களும் அவர்களுடைய சிறுவர்களை உம்மிடம் கொண்டுவந்தபோது, அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைவுகூரும் விதமாகவே. நாங்கள் இன்றைக்கு உமக்கு முன்பாக, குட்டி பிரெண்டா சூ உட்டை, விசுவாச கரங்களில் பிடித்திருக்கிறோம், என்னுடைய சகோதரன் டேவிட் மற்றும் அவருடைய விலையேற்றப்பெற்ற மனைவியின் குடும்பத்திற்கு அவள் அனுப்பப்பட்டிருக்கிறாள். பிதாவாகிய தேவனே, இந்தக் குழந்தையை ஆசீர்வதியும். 25 அவர்களுடைய ஐக்கியத்திற்கான அவர்களுடையடைய குழந்தையை அளிக்கையில், அவர்கள் உம்மில் உள்ள தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய இருதயங்கள் பரிசுத்த ஆவியினால் எச்சரிக்கப்பட்டு, இந்த குழந்தை கிறிஸ்தவ வீட்டில் வளர்க்கப்படும்படியான, அத்தகைய தேவ பக்தியோடு, அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியமாக வாழவும், இதுவோ தேவனுடைய போதனையில் வளர்க்கப்பட்டு, இங்கே பூமியிலே நீடூடி வாழ்ந்து, மகிழ்ச்சியான ஜீவியம் செய்து, அதனுடைய ஜீவிய நாட்கள் முழுவதும் உம்மை சேவிப்பதாக. மகிமையில், குடும்பங்கள் ஒன்று கூடும்போது, இந்த குட்டி பிரெண்டா சூ மற்றும் அவளுடைய தகப்பனும் தாயும் மற்றும் அவளுடைய ஜனங்கள் யாவரும், கிறிஸ்துவின் கிருபையினால் மீட்கப்பட்டு, தேவனுடைய சிங்காசனத்தை சுற்றிலும் ஒன்றுகூடும்படியாக, நாம் இப்பொழுது அவளை அவரிடத்திற்கு உயர்த்துகிறோம். 26 என்னுடைய குட்டி சகோதரியே, நான் இப்போது உன்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஜீவியம் முழுவதும் சேவை செய்யும்படி, உன்னை அவரிடத்தில் அளிக்கிறேன், தேவ குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 27 மார்லின், டேவிட், அதிக மகிழ்ச்சியும், வெற்றியோடும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த சிறுவர் தேவனுடைய இராஜ்யத்திற்கென ஜீவிப்பார்களாக. 28 இப்பொழுது, இங்கே ஒரு அருமையான பையன் இருக்கிறான், அவனுடைய முகத்திலோ ஒரு மகத்தான பெரிய புன்னகை காணப்படுகிறது. அவன் பெயர்? [தாயார் பதிலளிக்கிறார். ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] சாரோன் ரோஸ்…[தாயார், “சாரோன் டால்டன்” என்று கூறுகிறார்.—ஆசி.] டால்டன். டால்டன். இது சகோதரன் எடியினுடைய குழந்தையா? பாருங்கள், ஏறக்குறைய, சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் என்னுடைய கரங்களிலிருந்து ஒரு குட்டி சாரோன் ரோஸை எடுத்துக்கொண்டார், இன்றைக்கு, அவள் பரலோகத்தில் இருக்கிறாள். இப்பொழுது, குட்டி சாரோன் ரோஸ் டால்டன், அவரிடத்தில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறாள். இங்குள்ள, நம்முடைய விலையேறப்பெற்ற நண்பர்களான, சகோதரன் எட் மற்றும் சகோதரி டால்டனை நாம் அறிவோம். என்ன ஒரு அருமையான குழந்தை! எங்கள் பரலோக பிதாவே, நாங்கள் இந்த குட்டி சாரோன் ரோஸை உம்மிடம் கொண்டு வருகிறோம். புவியின் மீது நின்ற மகத்தான கர்த்தராகிய இயேசுவின் நினைவாக, அவர்கள் சிறு பெண் பிள்ளைகளை இந்த விதமாக அவரிடம் கொண்டு வந்தனர், கர்த்தாவே, நான் இந்த குழந்தைக்காக ஜெபிக்கிறேன். அது பலமுள்ளதாயும், ஆரோக்கியமுள்ளதாயும் ஜீவிப்பதாக. அது தேவனுடைய மகிமைக்கென்று ஜீவிப்பதாக. அதனுடைய தகப்பனையும் தாயையும் ஆசீர்வதியும். அது தேவனுடைய போதனையில் வளர்க்கப்படுவதாக. அவர்கள் தங்களுடைய குழந்தையை உம்மிடத்தில் அளிக்கையில், அவர்கள் உம்மில் உள்ள தங்களுடைய விசுவாசத்தை அறிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நீர் குட்டி சாரோன் ரோஸ் டால்டனுடைய ஜீவியத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்றே இப்பொழுது நாங்கள் அவளை உம்மிடத்தில் அளிக்கிறோம். நான் அவளை அவளுடைய தாய் மற்றும் தகப்பனுடைய கரங்களிலிருந்து உம்மிடத்தில், என்னுடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில், உம்முடைய மகிமைக்காக அவளை அளிக்கிறேன். ஆமென். சகோதரியே, சகோதரனே, உம்மை, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே! சுகவீனமான, ஒரு குட்டிப் பையன். அவனுடைய தொல்லை என்ன? [தாயாரோ, “அவனுடைய தலை மிகவும் பெரிதாகி கொண்டே வருகிறது” என்று கூறுகிறாள். ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …சற்று வித்தியாசமானது. நான் அவரை விசுவாசிக்கிறேன். தேவனாகிய கர்த்தாவே, நான் குட்டி மேசனை உம்மண்டை பிடித்துள்ளேன். கர்த்தராகிய இயேசுவே, நான் இங்கே என்னுடைய கரங்களில் பிடித்துள்ள இந்த பையனை எடுத்து, உம்மண்டை அவனை பிரதிஷ்டை செய்யும்படி ஜெபிக்கிறேன். அவன் மீதுள்ள இந்தத் துன்பத்தை நான் சபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், கர்த்தாவே, குட்டி மேசனை உம்முடைய கரங்களுக்குள் வைப்போமாக, அந்தத் துன்பம் அவனை விட்டு நீங்குவதாக. அந்தக் குழந்தை தேவனுடைய கனத்துக்கும், மகிமைக்குமென்று ஜீவிப்பதாக. பெற்றோர் அவனைக் கொண்டு வருகையில் அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நீர் அந்தக் குழந்தையை குணமாக்கி, அவனை சுகப்படுத்துவீராக. அவன் உம்மை சேவிக்கும்படி, தேவனுடைய மகிமைக்கென்று ஜீவிப்பானாக. தேவனாகிய கர்த்தாவே, நான் குட்டி மேசனை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவனுடைய ஜீவியத்திற்காகவும், அவனுடைய ஆரோக்கியத்திற்காகவும் உம்மிடத்தில் அளிக்கிறேன். ஆமென். [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். ஓ, ஒரு குட்டி பெண்ணும் கூடவா? பாருங்கள், அது அருமையாயுள்ளது. குட்டி நபரே, இங்கே வா. இங்கே எழும்பி நில். உங்களுடைய பெயர்…? [தகப்பனார், “சம்னர்” என்று கூறுகிறார்.—ஆசி.] சம்னர். சகோதரன் மற்றும் சகோதரி சம்னர். நீங்கள் ஜார்ஜியாவிலிருந்து வருகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் அங்கிருந்தே வருகிறீர்களா? நான் ஜெபத்தை நினைவுகூர்ந்தேன் என்று நான் நினைத்தேன். அங்கே கீழே அநேக ஜனங்கள் உள்ளனர். இது…[“லாட்ரெல்.”] லாட்ரெல். [“ட்வைட்.”] ட்வைட். [“டேவிட்.”] டேவிட். நீங்கள் அவர்களுடைய பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். தேவன் அவர்களுடைய பெயர்களை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதுவாராக. எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த சிறிய அருமையானவர்களை இந்தக் காலை உம்மண்டைக் கொண்டு வருகிறோம், நான் என்னுடைய கரத்தை அவர்களுடைய தலையின் குறுக்கே உள்ள சிறிய பின்னல்கள் மேலும், இந்த பையன்களின் மென்மையான சிறு முடியின் மீதும் வைக்கிறேன். ஓ, கர்த்தாவே, அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அளிப்பதன் மூலம் உம்மில் உள்ள அவர்களுடைய விசுவாசத்தையும் அவர்களுடைய அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் காலையில் இங்கே இந்த பீடத்தின் மேல் நிற்கும்படியாக, அவர்கள் பெற்றோரின் கரங்களிலிருந்து எடுக்கப்படும் போது, தேவனுக்கென்று அவர்களுடைய ஜீவியங்களை அர்ப்பணிக்கும்படி, நாங்கள் அவர்களை உம்மிடம் பிரதிஷ்டை செய்கிறோம். பிதாவே, அவர்களை ஆசீர்வதியும். நீர் அவர்களை மகிழ்ச்சியாய் ஜீவிக்கச் செய்யும்படி அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஜீவிய நாட்களெல்லாம், வரப்போகும் உலகத்தில் நித்திய ஜீவனோடிருக்கும்படிச் செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் ஒரு கிறிஸ்தவ வீட்டில், தேவனுடைய போதனையில் வளர்க்கப்படுவார்களாக. இப்பொழுது, அவர் செய்துள்ளபடியே அவருடைய ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரியான, இயேசு கிறிஸ்துவின் கட்டளையினால், நான் அவர்களை உம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறேன். ஆமென். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] சூரிய ஒளி பிரகாசமாயுள்ள ஜார்ஜியா மாநிலத்திலிருந்து, இந்தக் குழந்தை இங்கே அவளுடைய அன்பார்ந்த தகப்பன் மற்றும் அவளுடைய தாயின் மூலமாக, இந்த ஞாபகர்த்தமான காலையிலே உம்மிடம் பிரதிஷ்டை செய்யும் படியாக கொண்டுவரப்பட்டது. இது அவர்களுடைய குடும்பத்தில் உம்முடைய கிருபையின் ஒரு வெற்றிச் சின்னமாக உள்ளது. நீர் குட்டி ரீனியையும், அவளுடைய தாயையும் தகப்பனையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இந்தக் குழந்தையின் மேல் உம்முடைய ஆசிர்வாதங்கள் இருக்க வேண்டும் என்றே, இதைக் கொண்டு வருவதன் மூலம், உம்மில் உள்ள அவர்களுடைய விசுவாசத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அவளுடைய ஜீவிய நாட்கள் முழுவதும், ஒரு பலமுள்ள, மகிழ்ச்சியான கிறிஸ்தவளாக அவள் ஜீவிப்பாளாக. வரப்போகும் நாட்களிலும், வரப்போகும் உலகத்திலும் நித்திய ஜீவனை உடையவளாயிருப்பாளாக. பிதாவே, இதை அருளும். நீர் உம்முடைய சொந்தக் கரங்களில், அத்தகைய இனிமையான சிறுவர்களை எடுத்தது போன்று, இந்தப் பிள்ளைகளை இந்த காலையில், உம்முடைய ஊழியக்காரர்களிடத்தில் அவர்களை கொண்டு வருவதன் மூலம், அந்த குடும்பங்கள் உம்மில் உள்ள அவர்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நாங்கள் குட்டி ரீனீயை ஆசீர்வதித்து, அவளை உம்மிடத்தில் அளிக்கிறோம்; அவளுடைய பெற்றோரின் கரங்களிலிருந்து, உம்மிடத்தில் அளிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீர் அவளை ஆசீர்வதிப்பாராக. ஆமென். சகோதரனே, உம்மை ஆசீர்வதிப்பாராக. ரீனீ, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நாம் அதனுடைய ஒரு சிறு வரியைப் பாடுவோமாக. அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவக் களங்களிலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறுவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். 29 ஓ, நான் எப்படி வரிசையில் நின்று, குட்டி நபர்களாகிய அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பேச விரும்பினேன், ஆனால் நான் மிகவும் மெதுவாக செயல்படுகிறேன், எப்படியிருந்தாலும், ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். சகோதரன் உட் என்னிடம் இந்தக் காலை, நின்றுகொண்டிருந்ததால், அவருடைய முதுகு வலித்துக் கொண்டிருந்ததாகக் கூறினார். நீங்கள் நின்றுகொண்டு காத்துக் கொண்டிருப்பதை நான் எவ்வளவாய் பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களே! என்னால் முடிந்த அளவு துரிதமாக செய்தியைக் கொடுக்க உள்ளேன். நீங்கள் உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். 30 இக்காலை ஆராதனைக்கு இல்லை இக்காலை இந்த செய்தியை ஆயத்தப்படுத்த எனக்கு நேரமே இல்லாதிருந்தது, சற்று நேரம். நான் ஒரு பாடப் பொருளை எடுத்தேன், அது சற்று வித்தியாசமனதாயிருந்தது. 31 கடந்த ஈஸ்டரில் நான்: “ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார். மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம்பண்ணப்படும்போது, அவர் என் பாவங்களை அதிக தூரம் கொண்டு போய்விட்டார். உயிர்த்தெழுந்தபோது, அவர் என்றென்றைக்குமாய் இலவசமாக நீதிமானாக்கினார். என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள்!” என்ற பொருளின் பேரில் பிரசங்கித்தேன். அதன்பின்னர் இந்த காலையில்: நான் அறிந்திருக்கிறேன், என்ற பொருளில் பேரில் பிரசிங்கித்தேன். 32 இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், நான் பரிசுத்த மாற்குவின் அதிகாரத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் இப்பொழுது என்னோடு ஜெபம் செய்யுங்கள். 33 இதற்குப் பிறகு உடனடியாக சுகமளிக்கும் ஆராதனை இருக்கும். அதன்பின்னர் சுகமளிக்கும் ஆராதனைக்கு பிறகு ஞானஸ்நான ஆராதனை இருக்கும். அதன்பின்னர் ஆராதனைகள் இன்றிரவு ஏழு முப்பது மணிக்கு இருக்கும். 34 இப்பொழுது மாற்கு 16. ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், இயேசுவின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கூறினார்கள்…அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள். வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள், அவன்…துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 35 நீங்கள் பாருங்கள், அவர்களும்கூட சாம்பல் குவியலில் மேல் இருந்தார்கள். அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை. 36 தேவனுடைய வார்த்தைகள் எவ்வளவு மறைபொருளாயிருக்கின்றனவே! அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். …போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதயக்— கடின-…கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். 37 நான் இரண்டு வார்த்தைகளிலி ருந்து ஒரு பாடப் பொருளை எடுக்க விரும்புகிறேன்: போய், சொல்லுங்கள். 38 உங்களுக்குத் தெரியும், நீங்கள் சொல்வதற்கு ஏதோ ஒரு காரியத்தை பெற்றிருக்கவில்லையென்றால், அது செல்வதற்கு அதிக நன்மையை செய்கிறதில்லை. அதுவே இன்றைய அதிகமான முழு பிரச்சினையாயிருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். நாம் சொல்லப் போகிறோம், சொல்வதற்கு ஒன்றுமே இல்லாமல் நாம் செல்கிறோம், அதனால் எந்த நன்மையும் இல்லை, அதனால் ஜனங்களுக்கு எந்த உதவியும் இல்லை. 39 ஆனால் கட்டளையைப் பெற்றிருந்த இந்த சீஷர்களைப் போலவே, நாம் வழிமுறைகளை பின்பற்றுவோமானால், நமக்கும் அதே கட்டளை உள்ளது. “நான் மரித்தோரிலிருந்து எழுந்தேன் என்று போய், என்னுடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்.” போய், அதைச் சொல்லுங்கள்! 40 அதன்பின்னர் அவர், “போய், அதைப் பிரசங்கித்து, நான் மரித்தோரிலிருந்து எழுந்து உயிரோடிருக்கிறேன் என்ற இந்த அடையாளங்களை காண்பியுங்கள்” என்று கூறுகிறார். என்னே ஒரு செய்தி! “போய், சொல்லுங்கள், மேலும் போய், நான் மரித்துவிடவில்லை, ஆனால் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டிருக்கிற இந்தக் காரியங்களை என்னுடைய சீஷர்களுக்குக் காண்பியுங்கள்.” 41 இந்தக் காலை காலை செய்தியில், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய சாம்பல் குவியல் தொல்லைகள் மற்றும் சோதனைகள் இருப்பதைக் கண்டு அதன்பேரில் நாம் அமர்ந்து, கொஞ்ச காலமாக, ஆறுதலுக்காக காத்திருக்கிறோம். மகத்தான கோத்திரப்பிதாவாகிய யோபுக்கு ஒரு தரிசனம் உண்டானது என்பதை நாம் கண்டிறிந்தோம், ஏனென்றால் அவர்களுக்கு அதுவரையிலும் ஈஸ்டர் இல்லாதிருந்தது, ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த காலையைக் கண்டான். அவன் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய துன்பத்தில் ஈஸ்டரைக் கண்டு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்! என்றும், கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார், என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழிகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” என்று கூச்சலிட்டான். 42 இப்பொழுது, ஈஸ்டருக்குப் பிறகு, “போய், சொல்லுங்கள்! நீங்கள் சொன்னால், இது உங்களைப் பின் தொடரும். போய் சொல்லுங்கள்!” என்ற ஒரு கட்டளையை தேவன் மனிதனுக்கு கொடுத்தார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். 43 இப்பொழுது, நான் கூறியுள்ளது போல, நீங்கள் போய், போய் சொல்வதற்கு எதையாவது பெற்றிருந்தாலொழிய, அது எந்த நன்மையும் செய்கிறதில்லை. நீங்கள் சொல்லும்படிக்கு தவறான செய்தியைப் பெற்றிருந்தால், அப்பொழுது அது எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் சொல்லும்படி இரகசியம் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். 44 கொஞ்சம் காலத்திற்கு முன்னர் ஒரு போட்டியில் ஈடுபட்டிருந்த…ஒரு சிறு பையனைக் குறித்து, ஒரு புத்தகத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த போட்டியில் அவன் தனக்கு ஒரு புகழ்வாய்ந்த பெயரை உருவாக்கிகொள்ளவிருந்தான். இந்த சிறு பையனும், அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை சென்றடையும் வரை அந்த கடவுச்சொல்லை தன்னுடைய சிந்தையில் வைத்திருந்து, அவன் இந்த கடவுச்சொல்லைக் கூறுவானானால், அப்பொழுது அந்த வாயிற்காப்போன் அவனை அதனூடாக செல்ல அனுமதிப்பார். அது குழந்தையின் நுண்ணறிவை சோதிக்கும்படியானதாயிருந்தது. அவன் அந்த இடத்தை அடைந்தவுடன் அவனுக்கு கொடுக்கப்பட்ட கடவுச்சொற்களை கூற, அந்த வாசல் திறக்க அவன் ஒரு மகத்தான கனத்தைப் பெற்றுக் கொள்வான். 45 மிக வேகமாக ஓடக்கூடியவனாயிருந்த, ஒரு சிறு பையன், போட்டியில் இருந்த மற்ற எல்லாப் பையன்களைக் காட்டிலும் அவனால் நன்றாக வேகமாக ஓட முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தான் அல்லது அவனால் முடியும் என்றே அவன் எண்ணினான். அவன் நாளுக்கு நாள் ஓடி, பயிற்சி எடுத்துக்கொண்டான். அவனுடைய சிறு நுரையீரல்கள் எப்படி அவனுக்குத் துடித்தாலும், அவன் ஓடும்போது களைப்படையாதபடிக்கு, அவன் தனது சரீரத்தை சீராக வைத்திருந்தான், அவன் தன்னுடைய கால்களையும், மற்ற பையன்களை காட்டிலும் தன்னுடைய தலையை எவ்வாறு முன்னோக்கி வைத்து ஓடத் துவங்க வேண்டும் என்றும் அவன் பயிற்சியெடுத்தான். அவன் தன்னுடைய ஓட்ட நேரத்தில் எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்பதையும், அவனுடைய இருதயம் மெதுவாக செயல்படும்படாதபடிக்கு, அவனை உந்தித் தள்ள, தன்னுடைய சரிதத்தில் அவனுக்கு உண்டான பிராணவாயுவை எப்படி அடக்கிக் கொள்வது என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவன் அதை தன்னால் முடிந்த ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஆய்ந்துப் பார்த்தான். 46 போட்டியோ காலையில் துவங்கியது, ஒரு குறிப்பிட்ட வயதில், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறு பையன்கள் வரிசையில் இருந்தனர். இந்த சிறு பையனோ தன்னுடைய வயதிற்கேற்ப ஒரு நல்ல தேக அமைப்புடையவனாயிருந்தான். அவன் தன்னுடைய பயிற்சி எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டான். அவன் ஆயத்தமாயி ருந்தான். அவர்கள் வரிசையில் நின்று, தங்களுடைய சிறிய முகங்களை அந்த—அந்த கயிற்றிற்கு நேராக நீட்டினர், அவர்களுடைய சிறிய மூக்குகள் அதை எதிர்நோக்கியவாறு இருந்தன. அதனுடைய விதிமுறைகள் எல்லாவற்றையும் அவன் ஆய்ந்து படித்து தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான். 47 அப்பொழுது துப்பாக்கி சுடப்பட, வரிசை கலைக்கப்பட, சிறு பையன்கள் முன்னோக்கி ஓடினர். இந்த சிறு பையன் மற்றவர்களுக்கு முன்பே பாய்ந்தோடும்படி அவ்வளவு சீரான தேக அமைப்புடையவனாய் இருந்தான். போட்டியில் இருந்த மற்ற ஒவ்வொரு பையனைக் காட்டிலும் அவன் வேகமாக ஓடக்கூடிய அளவிற்கு நன்கு பயிற்சி பெற்றிருந்தபடியால் அவன் அந்த பாதையில் ஒரு பயங்கரமான வேகத்தோடு ஒடினான். மற்ற மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் அந்த இடத்தை சென்றடைவதற்கு முன்னமே, ஓ, சற்று நேரத்திற்கு முன்பு ஒருகால் ஒரு நிமிடமோ அல்லது அதற்கு முன்பு அவன் அங்கு இருந்தான். 48 ஆனால் தன்னுடைய சரீரப் பிரகாரமான பயிற்சியையெல்லாம் பெற்றிருந்தும், அவன் அந்த கடவுச்சொல்லை மறந்து போய் விட்டிருந்தான். அவனை அந்த வாசலில் உள்ளே அனுமதிக்கும்படி அவன் கூற வேண்டியிருந்த அந்த காரியத்தையே அவன் மறந்து போய்விட்டிருந்தான். அவன் முன்னும் பின்னும் வேகமாக நடந்து, அதை யோசித்துப் பார்த்து, தன்னுடைய சிந்தையில் ஆராய்ந்து பார்த்தான். அவன் அந்த முக்கியமான காரியத்தை மறந்து போய்விடுமளவிற்கு தன்னுடைய இயற்கையான, இயற்கையான சரீர நிலைகளில், அவன் மிகவும் ஆர்வமாயிருந்துவிட்டான். அந்த வரிசையில் சில பையன்கள் மிக வேகமாக ஓடாமலிருந்தும், அந்தக் கடவுச்சொல்லை ஞாபகத்தில் வைத்திருந்து, உள்ளே நுழைந்துவிட்டனர். 49 அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளதே! நாம் பெரிய ஆலய கட்டிடங்களிலும், சபைகளிலும் மற்றும் கட்டிடங்கள் போன்றவைகளிலுமே மிகவும் ஆர்வம் கொண்டுள்ளோம், மேலும் நம்முடைய சபைகளை நல்ல சீரான முறையில் வைத்திருக்கவும், அருமையான கட்டங்கள், நல்ல பட்டு இருக்கைகள் மற்றும் அருமையான இசைப்பேழைகளைக் கொண்டு சீரான முறையில் வைத்திருக்கவே மிகவும் ஆர்வம் கொண்டுள்ளோம். நம்முடைய ஊழியர்களோ மிக நன்கு பயிற்றுவிக்கப்பட்டு…அவர்கள் வேத பாண்டித்திய டி.எல்., பி.எச்.டி., எல்எல்.டி. பட்டங்களைப் பெற்றுள்ளனர், ஆனால் நாம் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதையே நாம் மறந்துவிட்டோம். அதுதான் தொல்லையே. “நான் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டேன் என்றும், நான் அவர்களை கலிலேயாவில் சந்திப்பேன் என்றும் போய், என் சீஷர்களுக்குச் சொல்லுங்கள்.” நாம் அந்த முக்கிய சொல்லை மறந்துவிட்டோம். நாம் அந்த முக்கிய சொல்லை மறக்குமளவிற்கு மற்ற காரியங்களோடும், பெரிய சபைகளை உருவாக்குவதிலும், பெரிய ஸ்தாபனங்களைக் கட்டுவதிலும் மிகவும் பரபரப்பாய் இருந்து வருகிறோம். 50 வருகின்ற நிகழ்வுகளுக்கான ஆயத்தத்தின் நிமித்தமாக அநேக உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. கொஞ்ச காலத்துக்கு முன்னர், அது பிளாரிடாவில், எனக்குக் கூறப்பட்டது, செயதியறிவிப்பாளரால், ஒரு பெரிய புயல் வரப்போவதாக வானிலை பணியகம் ஒரு செய்தி ஒளிபரப்பை அனுப்பியது. ஒரு மனிதன் கோழி வளர்ப்பவனாயிருந்தான், அவன் தன்னுடைய அண்டை வீட்டாரிடம் சென்று புயல் வரப்போவதை அவனிடம் கூறினான். அவனோ புறக்கணித்து, “முட்டாள்தனம்!” என்றான். மேலும் அவன் அப்படியே ஒன்றும் செய்யாதிருந்தான். அவன் தன்னுடைய கோழிகளை ஒருபோதும் பாதுகாப்பளிக்கவேயில்லை. அவன் ஒருபோதும் பதுகுழிக்குள்ளும் செல்லவில்லை. அவன் எந்த ஏற்பாடுகளையும் செய்யவேயில்லை. அவனுடைய அண்டை வீட்டானோ ஏற்பாடுகளை செய்துகொண்டான். ஆனால் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாமலிருந்த அந்த ஒருவனுடைய எல்லா கோழிக்குஞ்சுகளும் வீசியெறியப்பட்டு கொல்லப்பட்டன, அவனுடைய வீடும் சின்னாபின்னமாக்கப்பட்டு, அவனுடைய சேகரிப்பும் இழக்கப்பட, அவனோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். எல்லாவற்றிற்கும் காரணம், அவன் கவனமாய் எச்சரிக்கையைக் ஏற்றுக்கொள்ளாததே! செய்தி கொடுக்கப்பட்டதை அவன் அறிந்திருந்தான், ஆனால் அவன் செய்தியை கவனிக்கத் தவறிப்போனான். 51 அந்தவிதமாகவே அது இன்றைக்கு நம்முடைய அநேக ஜனங்களோடும், நம்முடைய அநேக சபைகளோடும் வந்துள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் போதிக்கிறது என்பதை நாம் அறிவோம். வேதம் போதிக்கிறது என்று நாம் அறிவோம், இயேசு பரிசுத்த யோவான் 14:12-ல், “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்று கூறினார். இப்பொழுது நாம் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், கவனம் செலுத்தாமல், மற்ற காரியங்களில் ஆர்வம் கொண்டவர்களாய் இருந்து வருகிறோம். நாம் ஓடியுள்ளோம், ஆனால் செய்தியை கவனிக்கவில்லை. நாம் சென்றுள்ளோம், ஆனால் நாம் அங்கு வரும்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. 52 ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த உலகத்தின் சபைகள், கிறிஸ்தவ சபைகள் ஒரு வெட்கத்தையும் ஒரு அவமானத்தையும் கொண்டுவந்தபோது, கனத்துக்குரிய குறிப்பிடத்தக்க தேவ பயத்துக்குரிய ஊழியக்காரர் பில்லி கிரகாம் வேதாகமத்தோடு நேருக்கு நேர் கொண்டுவரப்பட்டபோது, அவரோ ஓடியிருந்தார், ஆனால் செய்தியையோ மறந்துவிட்டிருந்தார்; அந்த முகமதியன் அவருடைய முகத்திற்கு எதிரே நின்று அவரிடத்தில், “இது தேவனுடைய வார்த்தையாயிருந்தால், நீர் அதை வெளிப்படுத்துகிறதை நாங்கள் காணட்டும்” என்று கூறினான். அவர் மகத்தான எழுப்புதல் கூட்டங்கள், பெரிய காரியங்கள் என நன்றாக ஓடியிருந்தார். ஆனால் அது அந்த இடத்திற்கு வந்த போது, அவர் செய்தியை பெற்றிருக்கவில்லை. 53 “நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டேன். நான் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறேன்.” சரீப்பிரகாரமாக ஓடுதல், அருமையான சபைகள், அனேக அங்கத்தினர்கள், பெரிய ஸ்தாபனங்கள், ஆனால் அது முக்கியமல்ல. என்ன பின்தொடர்ந்தது என்பதைக் கவனியுங்கள், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.” போகிறோம், ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. 54 தேவன் ஒரு மனிதனுக்கு ஏதாவது காரியத்தை கூறும்படி அளித்தாலொழிய, அவர் ஒருபோதும் அவனை அனுப்பினதில்லை. தேவன் எப்பொழுதுமே அவருடைய வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறார். 55 போகிறீர்கள், ஆனால் நீங்கள் அங்கு சென்றடையும்போது எதையும் சொல்ல முடியவில்லை. எவ்வளவு பெரிய எழுப்புதல்களாயிருந்தாலும், உங்களுடைய சபை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அல்லது உங்களுடைய ஸ்தாபனம் மற்றவைகளை எவ்வளவு ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அவர்களிடத்தில் சொல்ல ஏதாவது காரியத்தை பெற்றிருக்கவில்லையென்றால், அப்பொழுது ஒரு விடுதியை போன்று ஒன்று கூட்டப்பட்டுள்ள ஒரு கூட்ட ஜனங்களைத் தவிர வேறெதை நீங்கள் பெற்றுள்ளீர்கள்? 56 “இயேசு உயிரோடிருக்கிறாரே! அவர் மரித்துவிடவில்லையே!” என்று உலகத்திற்கு சொல்ல நாம் ஒரு செய்தியைப் பெற்றிருக்கிறோம். அந்த செய்தியைக் கவனியுங்கள்! 57 நாம் இப்போது இருக்கிற இந்த தேசத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இதனுடைய எல்லாக் குழப்பத்திலும், இதனுடைய மோசமான எல்லாவற்றிலும் இதனுடைய எல்லா மோசமான செய்தி கூறுகளிலும், இது இன்னமும் உலகத்தில் மகத்தான தேசமாயிருக்கிறது, ஏனெனில் ஆரம்பத்தில், அது சரியாக அமைக்கப்பட்டிருந்தது. அது செய்தியைக் கொண்டு செல்லவில்லை. 58 அநேக ஆண்டுகளுக்கு முன்பு, இது அதனுடைய ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது, இந்த தேசத்தின் குடியுரிமையை பிரிட்டிஷ் கைப்பற்றப்போவதாயிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. அப்போது கடமையிலிருந்த ஒரு கூட்ட மனிதர்கள் ஒன்றாக கூடி, அதை கவனித்துக் கொண்டிருந்தனர். கட்டப்பட்ட ஒரு குதிரை அங்கே நின்றுகொண்டிருந்தது, சவாரி செய்யும் ஒருவன் எந்த நிமிடத்திலும் அதன்மேல் ஏறும்படி ஆயத்தமாக இருந்தது. அவனுக்கு முதலில் கிடைத்தது பிரிட்டிஷ் வந்து கொண்டிருந்தது என்பதற்கான ஒரு அடையாளமாகும், முலாவதாக அவன் தன்னுடைய கால்களை அகலமாக்கி குதிரையின் மீது ஏறினான். அவன் தன்னுடைய குதிரையைத் தூண்டுவதனால் என்ன நன்மை? குதிரையை அடித்து அந்த சபையிலிருந்து பாஸ்டனுக்கு தன்னுடைய வழியில் செல்ல முயற்சிப்பதனால் அவனுக்கு என்ன நன்மை, ஜனங்களுக்கு சொல்வதற்கு ஒரு செய்தி அவனிடம் இல்லையென்றால், அது அவனுக்கு என்ன நன்மையைச் செய்திருக்கும்? அவர்கள் எப்படி தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது என்று அறிந்திருப்பார்கள்? 59 நம்முடைய நவீன பால் ரீவர் நன்றாக ஓடியுள்ளார், ஆனால், அவர்கள் ஓடிக்கொண்டேயி ருக்கின்றனர், செய்தியோ இல்லை. இங்கு வேளையோ வந்துவிட்டது, ஒரு நெருக்கடி வந்துவிட்டதே! உலகம் முடிவிலேயே இருக்கிறதே! சபைகள் தங்களுடைய உச்சகட்டத்தை சந்தித்துள்ளன. தேசங்கள் தங்களுடைய உச்சகட்டத்தை சந்தித்துள்ளன. மானிட ஜீவியம் அதனுடைய உச்சகட்டத்தை சந்தித்துள்ளது. விஞ்ஞானம் அதனுடைய உச்சகட்டத்தை சந்தித்துள்ளது. நாம் ஒருங்கிணைந்து பெரிய சபைகளை உருவாக்கி, நம்முடைய பிரசங்கிமார்களை மெருகேற்றி, சரீரப்பிரகாரமாக அவர்களை ஒன்று சேர்த்துள்ளோம், அவர்களுக்கு தங்களுடைய வினைச்சொற்களை, வினையுரிச்சொற்களை எவ்வாறு பயன்படுத்துவது என்றும், அவைகளின் ஒலிகள் மற்றும்—மற்றும் அவற்றின் எல்லா உயிரெழுத்துகளையும், உளவியலில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும், ஜனங்களிடம் தொடர்புகொள்வதற்கும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இயேசுவானவர் கூறியது அதுவல்லவே! 60 “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சாவுக்கேதுவான ஒரு சர்ப்பம் அவர்களைக் கடித்தால், அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” எதையாவது சொல்ல, ஒரு செய்தியோடு கூடிய ஒரு செய்தியாளனே உலகத்திற்கு தேவைப்படுகிறது, மேலும் செய்தி எங்கிருந்து வருகிறது என்றும், அது யாரிடமிருந்து வருகிறது என்றும் அறிந்துகொள்ளுங்கள். 61 பால் ரீவர், அவன் தன்னுடைய குதிரையின்மேல் ஏறினபோது, தீரமான மனிதன், சரித்திரத்தில் ஒரு தேசம் இருக்கும் வரை அந்த சரித்திரத்தில் இருக்கும் ஒரு மனிதன். அவர் ஒவ்வொருவரையும் எச்சரிக்கும் ஒரு செய்தியோடு ஏழை முதல் பணக்காரர் வரை, விவசாயி முதல் வர்த்தக புருஷன் வரை, “பிரிட்டிஷார் வந்து கொண்டிருக்கிறார்கள்!” என்று கூறி சபை படிக்கட்டுகளில் குறிப்பிடத்தக்க சவாரி செய்தார். புரட்சிகால நாட்டுப் படைவீரர்கள் தாக்குதலுக்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். இந்த பெரிய தேசம் காப்பாற்றப்பட்டது. 62 இது தேவனுடைய சுதந்திரமாயிருந்தால், ஆனால் இந்த ஜனங்களுக்காக தேவன் மரித்திருந்தால், அவருடைய நாமத்தினால் இந்த சபை அழைக்கப்பட்டிருந்தால், இது எப்போதுமே இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றால், இந்த நாளில் சவாலை சந்திக்க, சிங்காசனத்தில் இருந்து வந்த ஒரு செய்தியோடு கூடிய ஒரு செய்தியாளனை நாம் பெற்றிருக்க வேண்டும். ஒரு கோலியாத் இருக்கிறான், ஆனால் தேவன் நிச்சயமாக எங்கோ ஒரு தாவீதை உடையவராயிருப்பார். நாம் அந்த தொடர்பை சந்திக்க வேண்டும். நாம் ஒரு…பெற்றிருக்க வேண்டும். நாம் ஒரு செய்தியைப் பெற்றிருக்க வேண்டும். 63 நாம் போய்க்கொண்டேயிருக்கிறோம். ஆனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை மறுதலிக்கும் ஜனங்களிடம் அல்லது ஒரு தேசத்தில் உள்ள ஒரு இடத்திற்கு நாம் வந்து, இன்றைய நம்முடைய பெரும்பாலான சவாலிடும் ஊழியர்களுக்கு முன்பாக நிற்கும்போது, அது இதை நிரூபிக்கிறது. அதன்பின்னர் நம்முடைய பெரிய சபை சங்கத்தில் சுமார் முப்பது கம்யூனிஸ்டுகள் இருபது அல்லது முப்பது வருடங்களாக கம்யூனிச செய்தித்தாள்களை கொண்டு வருகிறார்கள், அவர்கள் நம்முடைய ஐக்கிய நாடுகளின் சபைகளில் உள்ள கம்யூனிச குழுவின் அங்கத்தினர்களாயிருக்கிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஒரு செய்தி இல்லாமல் ஓடியிருக்கிறார்கள் என்பதையே அது காண்பிக்கிறது; தேசத்தின் பிறப்புரிமைகளை விற்கின்றனர், வழக்கமான சபையின் பிறப்புரிமைகளையும் விற்கின்றனர். 64 இவையாவும் ஒரு பலப்பரீட்சைக்கு வரவேண்டும். இது செய்தியை விசுவாசித்த அந்த சிறு சபை என்ற இடத்திற்கு வந்து இரு கால்களிலும் நின்று, அவர்களுடைய கண்களால் சிலுவையை மையமாகக்கொண்டிருக்க, அவர்களுடைய இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் எரிந்துகொண்டிருக்குமே! அது தேசங்கள் அதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய ஒரு இடத்திற்கு வந்துள்ளது. இது ஒரு பலப்பரீட்சியாய் உள்ளது. சபைகள் அவ்வாறு இருப்பதில் வியப்பொன்றுமில்லை…சபைகளின் சங்கம், அது கம்யூனிசத்தோடு தேன்கூடுபோலாகியிருக்கும்போது, அவர்களால் இயற்கைக்கு மேம்பட்டதை விசுவாசிக்க முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. அவர்களால் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்க முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை; அவர்களுடைய இருதயத்தில் அவர்கள் எந்த செய்தியையுமே பெற்றிருக்கவில்லை, அவர்கள் எவ்வளவுதான் கடினமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. 65 பரிசுத்த ஆவி ஒரு மனிதனுடைய இதயத்திற்குள் வருமேயானால், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்று அவன் விசுவாசிப்பான், செய்ய வேண்டியதை, அவர் வந்து செய்ய விரும்புவதை செய்ய; மனுஷனுடைய ஜீவியத்தினூடாக தேவனுடைய சித்தத்தை செய்ய அவர் அவனுக்குள் உயிரோடிருக்கிறார். 66 ஆனால், தொல்லையோ, நாம் ஓடுகிறோம், நாம் ஒரு செய்தி இல்லாமல் செல்கிறோம். நான் வேத சாஸ்திரத்தோடு செல்கிறோம். வேத வாக்கியங்களுக்கு ஒரு விதமான சபை வியாக்கியானத்தோடு செல்கிறோம். 67 நாம் உயிர்த்தெழுதலோடு செல்ல வேண்டுமே! “நான் ஒரு புதிய சபையை ஸ்தாபிப்பேன் என்று போய், என் சீஷர்களுக்கு சொல்லுங்கள் என்பதா”? இல்லை, ஐயா! “நான் உயிர்த்தெழுவேன் என்று நான் சொன்னபடியே, நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டேன் என்று போய் என் சீஷர்களுக்குச் சொல்லுங்கள்.” இயேசு மரித்துப் போய்விடவில்லை என்பதே, இந்தக் காலை சபைக்கான செய்தியாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார், அவர் எப்போதும் இருந்தது போலவே இன்றைக்கும் மகத்தான மற்றும் வல்லமையுள்ளவராக இருக்கிறார். 68 நாம் ஆயத்தமாக, அநேக எச்சரிப்புகளின் செய்திகளை பெற்று வந்துள்ளோம், பால் ரீவர், மற்ற மகத்தான மனிதர், மகத்தான ஆயுதங்கள் மற்றும் புயல்கள் இன்னும் மற்ற காரியங்கள். 69 அதன்பின்னர், தேவன் ஒரு ஆறுதலின் செய்தியைக்கூட அனுப்புகிறார். இது ஒரு ஆறுதலின் செய்தியாக இருந்தது. 70 கொஞ்ச காலத்திற்கு முன்னர், அவர்கள் தெற்கில் அடிமைத்தனத்தை உடையவராயிருந்தபோது, தென்னாப்பிரிக்க டச்சுக்காரர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து அங்கு பிறந்தவர்களை கொண்டுவந்தனர், இன்றைக்கு, நாமோ அவர்களை “கருப்பு நிற மனிதன்” என்று அழைக்கிறோம். அவர்கள் இவர்களைக் கொண்டுவந்து தென்னாப்பிரிக்காவில் உள்ள இவர்களை அடிமைகளாக்க அமெரிக்கர்களுக்கு விற்றுவிடுவார்கள். 71 இன்றைக்கு ஆப்பிரிக்காவில் இதைக் குறித்து பெரும் எழுச்சி, படுகொலைகள் முலானவை நடந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக சண்டையிடுவதற்கு அவர்களுக்கு ஒரு உரிமை உண்டு. தேவன் மனிதனை உண்டாக்கினார்; மனிதன் அடிமைகளை உண்டாக்கினான். இது ஒருபோதும் நோக்கமாயிருந்ததில்லை. 72 சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு பெரிய அரங்கத்தில், சரியாகக் கூறினால், ஒரு பெரிய அருங்காட்சியகத்தில் இருந்தேன். நான் சுற்றி நடந்துகொண்டே பல்வேறுபட்ட புகைப்படங்களையும் மற்ற காரியங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன், ஏனென்றால் நான் கலையை ரசிக்கிறேன். தேவன் கலையில் இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நான் மேலே நடந்தேன், அங்கே ஒரு வயோதிக கருப்பரின மனிதன், அவர் உண்மையாகவே வயோதிகராய், அவருடைய தோல் பட்டைகள் தொங்கினவராயிருப்பதை நான் கவனித்தேன், அவருடைய தலையின் பின்புற ஓரத்தில் பின்பக்கமாக சிறு விளிம்புபோல கொஞ்சம் முடி இருந்தது. அவர் தன்னுடைய தொப்பியை அணிந்திருந்தார். அவர் சுற்றி நடந்து வந்துகொண்டே, அதற்குள்ளே இருந்த ஒரு காரியத்தை அந்த விதமான முறையில், சுற்றிப் பார்த்தார், அவர் அந்த அருங்காட்சியகத்தில் ஏதோ ஒரு காரியத்தை கவனித்துக்கொண்டு அல்லது தேடிக்கொண்டிருப்பது போல இருந்தது. நான் பின்னால் நின்று சற்று நேரம் அவரை கவனித்தேன். 73 சிறிது நேரம் கழித்து அவர் அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட சிறு பெட்டியண்டை அங்கே வந்தார். அவர் அதற்குள் நோக்கிப் பார்த்தார், அப்பொழுது அவர் திடுக்கிட, அவருடைய கண்களோ பிரகாசமடைந்தன. அவர் அந்த பெட்டியினிடத்திலிருந்து ஒரு நிமிடம் பின்னாக குதித்து, தன்னுடைய சிறு மூடிபோன்ற தொப்பியைக் கழற்றி அதைத் தன் கையிலே வைத்துக் கொண்டார். நான் அவரைக் கவனித்தேன். அந்த வயோதிக கருப்பு நிறத்தவர் தன்னுடைய தலையைத் தாழ்த்தினபோது, கண்ணீர் அவருடைய கன்னங்களிலிருந்து வடியத் தொடங்கியது. நான் சற்று நேரம், அவரை ஆச்சரியத்துடன் கவனித்தேன். 74 அப்பொழுது நான், “எதைக் குறித்து அந்த வயோதிக நபர் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டார் என்பதை நான் கண்டறிவேன்” என்று எண்ணினேன். நான் இந்தப் பக்கமாக சுற்றி நடந்து சென்றேன், அப்போது அங்கே உள்ளே ஒரு ஆடை வைக்கப்பட்டிருந்தது போன்று எனக்கு தோன்றியது. 75 மேலும் அவர் அங்கே நின்று கொண்டிருந்ததைப் நான் நோக்கி பார்த்தேன். நான் அங்கு நடந்து சென்று, “மாமா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்றார். 76 அப்பொழுது நான், “நான் ஒரு ஊழியக்காரன். இந்த இடத்திலே நீங்கள் ஜெபம் செய்வதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்” என்றேன். நான், “நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றேன். அதற்கு அவர், “ஐயா, நான் கிறிஸ்தவன் தான்” என்றார். மேலும் நான், “உங்களை அவ்வளவு உணர்ச்சிவசப்பட வைத்தது எது?” என்று கேட்டேன். 77 அப்பொழுது அவர், “இங்கே வாருங்கள்” என்றார். நான் அந்த வயோதிக நபரிடத்திற்கு அங்கே நடந்து சென்றேன். அப்பொழுது அவர், “நீங்கள் அந்த ஆடையை பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், ஐயா” என்றேன். அப்பொழுது அவர், “அங்குள்ள அந்தக் கறையை நீங்கள் பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், ஐயா” என்றேன். அவர், “உங்கள் கரத்தை என் பக்கத்தில் இங்கு வையுங்கள்” என்றேன். அப்பொழுது நான், “அந்த சொற சொறப்பான பகுதி என்ன?” என்றேன். 78 அப்பொழுது அவர், “ஒரு நாள், ஒரு அடிமைப் பட்டை கசையடி அங்கே சுற்றிலும் அடிக்கப்பட்டது. மேலும் அது ஆபிரகாம் லிங்கனுடைய இரத்தமாயுள்ளது” என்றார். மேலும் அவர், “அவருடைய இரத்தமே என்னிடத்திலிருந்து அந்த அடிமைப் பட்டையை எடுத்துப்போட்டது” என்று கூறிவிட்டு, “அது உங்களையும் கூட உணர்ச்சிவசப்பட செய்யவில்லையா?” என்று கேட்டார். 79 நான் அங்கே ஆச்சரியத்தோடு நின்றேன். அப்பொழுது நான், “ஆபிரகாம் லிங்கனுடைய இரத்தம், ஒரு அடிமையினிடத்திலிருந்து ஒரு அடிமைப் பட்டையை எடுத்துப் போட்டதற்காக அவனை உணர்ச்சிவசப்படச்—உணர்ச்சிவசப்படச் செய்யுமானால், குடிப்பழக்கத்திற்கு ஒரு அடிமையாயிருந்த இங்குள்ள ரோசல்லா போன்ற ஜனங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்ன செய்ய வேண்டும்; மரித்துக்கொண்டிருந்த, பரிதபிக்கத்தக்க ஒரு இழிஞனான எனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று எண்ணினேன். அவர் என் இருதயத்திலிருந்து பாவத்தின் அடிமைப் பட்டையை எடுத்துப்போட்டார். அது ஒரு மனிதனை உணர்ச்சிவசப்பட செய்ய வேண்டியதில்லையா? அது அவனை வித்தியாசமாக உணரச்செய்ய வேண்டுமல்லவா? அவன் அதைக் குறித்து எண்ணிப் பார்க்கும்போது அது அவனுக்கு பயபக்தியை உண்டாக்க வேண்டுமல்லவா? இயேசு அந்த மரத்திலே உங்களுடைய ஜீவனை மீட்டுக்கொண்டார் என்பதை அறிந்து, உங்களுடைய தலைகளை வணங்காமல், உங்களால் ஒரு மரத்தைப் பார்க்க முடியாது. 80 நாம் தொடர்ந்து பார்க்கையில், சற்று நேரம், அடிமைகளோடு நம்முடைய சிந்தனையையும் பார்ப்போம். ஒரு பிரகடனம் இருந்தது, ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்து அடிமைகள் சுதந்திரமாக இருக்க போகிறார்கள் என்று விடுதலையின் பிரகடனம் கையொப்பமிடப்பட்டது. உங்களுக்கு தெரியாது, ஓ, நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை சந்தித்திருக்கவில்லையென்றால், அந்த அடிமைகள் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை நீங்கள் ஒருபோதும் அறியவேமாட்டீர்கள். “நீங்கள் இன்ன-இன்ன ஒரு நாளிலே, பகலிலே, விடுதலை அடையப் போகிறீர்கள் என்ற அந்த செய்தியானது தேசம் முழுவதும் சென்றது. நீங்கள் சுதந்திரமாக இருக்க போகிறீர்கள். நீங்கள் இனிமேல் அடிமைப்பட்டத் தழும்புகளை பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை, நீங்கள் இனிமேல் சவுக்கடிகளையே பெறமாட்டீர்கள். ஆனால் நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள், இந்த பெரிய ஐக்கிய நாடுகளின் ஒரு குடிமகனாக இருக்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட-குறிப்பிட்ட காலை பகல் வெளிச்சத்திற்கு பிறகு, நீங்கள் ஒருபோதும் ஒரு அடிமை அல்ல.” ஓ, பெரிய எதிர்பார்ப்புகளுடன் அவர்கள் காத்திருந்தனர். 81 பாவியால் அதை மாத்திரம் புரிந்துகொள்ள முடிந்தால் நலமாயிருக்குமே! பாவியால் உண்மையான சுவிசேஷத்தை மாத்திரம் கேட்க முடிந்தால் நலமாயிருக்குமே! ஒரு சபையில் சேர்ந்துகொள்வதல்ல, ஆனால் நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக முடியும் என்றும், நீங்கள் உங்களுடைய சுகவீனத்திலிருந்து விடுபட முடியும் என்ற சுவிசேஷப் பிரசங்கத்தை கேட்பதனாலேயாகும். “ஒரு குறிப்பிட்ட-குறிப்பிட்ட நேரத்தில்,” அதுவே நீங்கள் நம்புகிற நேரம். 82 உங்களுக்கு தெரியுமா, அந்த அடிமைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அத்தகைய எதிர்பார்ப்பின் கீழ், அவர்களின் விடுதலையாக போகும் அந்த வேளைக்காக காத்துக் கொண்டிருந்தனர், அவர்கள் ஒரு மலையின் கீழே கூடி வந்தனர் என்றே அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள், தாய்மார்களும் சிறு பிள்ளைகளும் மற்றும் வயோதிகர் சிலரும் ஒன்று கூடினர். அவர் கிட்டத்தட்ட நள்ளிரவிலேயே மலையின் உச்சிக்கு ஏறினார்கள். பொழுது விடிந்தது சூரியன் உதயமாகிறபோதே, அவர்கள் விடுதலையாயிருப்பார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மலையுச்சியிலிருந்து சூரியன் பிரகாசிக்க அரை நிமிடம் கூட ஆகாது, ஆனால் அவர்களில் சிலர் மலை உச்சியிலே, பார்த்துக்கொண்டு, பார்த்துக்கொண்டிருந்தனர். “ஓ, சூரியன் உதயமாகிறபோது நாங்கள் விடுதலையாகிறோம்.” அது கு-மா-ர-னா-ய்…இல்லை சூ-ரி-ய-னா-ய் இருந்தது. 83 ஆனால் இந்த நாட்களில் ஒன்றில் கு-மா-ர-ன் எழும்புகிறபோதே! கு-மா-ர-ன் ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்த்தெழுந்தபோது, அவர் ஒவ்வொரு அடிமைப் பட்டையையும் உடைத்தெறிந்து, சிறைபிடிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் விடுதலையாக்கினார். அவர் ஒவ்வொரு வியாதியையும் சுகப்படுத்தினார், அடிமைத்தனத்தில் இருப்பவர்களுக்கு அவர் விடுதலையை அளித்தார். நாம் எப்படி ஏறிச் சென்று கவனிக்க வேண்டும்! 84 சூரியன் உதயமாகும்போதே, முதலாவது, மிக உயரத்தில் இருந்த மனிதன், அதைக் கண்டு, அவன் தனக்கடுத்திருந்த மனிதனிடத்தில், “நாம் விடுதலையாகிவிட்டோம்!” என்று சத்தமிட்டான். அதற்கடுத்த மனிதன் மலையின் கீழே இன்னும் சற்று தூரத்தில் இந்த மனிதனிடத்தில், “நாம் விடுதலை யாகிவிட்டோமே!” என்று சத்தமிட்டான். அது முகாமை வந்தடையும் வரை “நாம் விடுதலையாகிவிட்டோமே!” என்றே சத்தமிட்டனர். ஏனென்றால், சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது, அவர்கள் காத்துக்கொண்டு, காத்துக்கொண்டு, அந்த வேளைக்காக காத்துக் கொண்டிருந்தனர். 85 தேவ கு-மா-ர-னுக்காக, இன்றைக்கு, நாம் எவ்வளவு அதிகமாக காத்திருக்க வேண்டும். நாம் பாவத்திலிருந்து விடுதலையடைந்திருக்கிறோம். நாம் தடைகளிலிருந்து விடுதலையாயிருக்கிறோம். நாம் கெட்ட பழக்கத்திலிருந்து விடுதலையாயிருக்கிறோம். நாம் புகைபிடித்தல், குடித்தல், வெறியாட்டத்திலிருந்து விடுதலையாயிருக்கிறோம், ஏனென்றால் தேவ கு-மா-ர-ன் கல்லறையில் இருந்து எழுந்து ஒவ்வொரு விலங்கையும் உடைத்துவிட்டார். எல்லா ஆக்கினைத்தீர்ப்பும் போய்விட்டதே! கடன் செலுத்தப்பட்டாயிற்று. அபராதம் செலுத்தப்பட்டாயிற்று. பாவங்கள் கழுவப்பட்டு, நாம் விடுதலையாயிருக்கிறோம். ஓ, ஜனங்களே, நாம் விடுதலையாயிருக்கிறோமே! அடிமைத்தனமா? தேவ குமாரன் சுகமளிக்கும் தம்முடைய செட்டைகளோடு உதிக்கிறபோதே, விடுதலை! 86 என்றோ ஒருநாள் சிங்காசனத்தில் இருந்து எழும்பி, பூமிக்கு திரும்பி வருவார். அப்பொழுது நாம் எல்லா வலிகளிலிருந்தும், எல்லா சோதனைகளிலிருந்தும் விடுதலையாயிருப்போம், அவரோடு என்றென்றைக்கும் ஜெபிக்கும்படி, எல்லா மரண வலிகளிலிருந்தும் மற்றும் மரண வாழ்க்கையோடு செல்லுகிற எல்லாவற்றிலிருந்தும் விடுதலையாயிருப்போம். நாம் விடுதலையாயிருப்போம். “போய், சொல்லுங்கள்,” அதுதான் செய்யவேண்டிய காரியமாயுள்ளது. 87 வேதாகம காலத்தில், ஒரு யூபிலி வருடம் வந்தது. ஜனங்கள் செலுத்த வேண்டியிருந்த கடன்களுக்காக அவர்களே விற்கப்பட்டனர். அவர்கள் ஒரு கடனை வாங்கினர், ஆனால் அவர்களால் அதை செலுத்த முடியவில்லை, எனவே அவர்கள் சென்று தங்களையே அடிமைகளாக விற்றுவிட்டனர். எனவே இவர்கள் அவர்களுடைய அடிமைகளாக இருக்க வேண்டியதாயிருந்தது, இவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும், ஒரு கிருபையின் நாள் வந்தபோது, அது ஒரு யூபிலி வருடமாக அறியப்பட்டது. யூபிலி வருடம் வந்தபோது, அங்கே ஒரு ஆசாரியன் வெளியே சென்று, ஒரு எக்காளத்தை ஊதினான். அந்த எக்காளம் ஒவ்வொரு அடிமையும் குறித்ததாயிருந்தது, அவன் எவ்வளவு காலம் சேவித்துக்கொண்டிருந்தாலும், அவன் எவ்வளவு காலம் சேவிக்க வேண்டியதாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அந்த எக்காளம் முழங்கினபோது, அந்த அடிமை விடுதலையாக்கப்பட்டான். அவன் மண்வெட்டியை கீழே வைத்து விட்டு, தன்னுடைய பிள்ளைகளிடத்திற்கு வீட்டுக்குச் செல்ல முடியும். அவன் இனி வேலை செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் அந்த யூபிலி எக்காளம் ஒலித்த போது, அவன் விடுதலையாகி விட்டான். அந்த எக்காளம் விளங்காத சத்தத்தை கொடுக்கவில்லை, ஆனால் அது விளங்குகிற ஒரு சத்தத்தையே கொடுத்தது. எனவே அந்த மனிதனால் தன்னுடைய கருவியை கீழே வைத்துவிட்டு, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி வீட்டிற்கு செல்ல முடிந்தது. 88 இந்த காலையில், வேதம், “எக்காளம் விளங்காத சத்தமிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை யார் அறிவார்?” என்று கூறியுள்ளது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துள்ளார் என்றும், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் வேதம் பிரசங்கித்திருக்கும்போது, நாம் கேட்டுக்கொண்டிருக்கிற எக்காளங்கள் இன்றைக்கு, “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, தெய்வீக சுகமளித்தல் என்ற அத்தகைய ஒரு காரியமே கிடையாது என்று ஒலிக்குமானால்,” தங்களை எப்படி ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை யார் அறிந்துகொள்வார்? 89 இன்றைக்கு நமக்கு தேவையெனில் தேவனிடத்திலிருந்து வருகிற அபிஷேகிக்கப்பட்ட செய்தியாளர்களே! “அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளாரே! அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் இருக்கிறாரே!” அதுவே இந்நாளின் செய்தியாக இருக்கிறது. 90 ஓ, மகத்தான செய்திகள் இருந்து வந்துள்ளன, ஆனால் ஈஸ்டர் எல்லாவற்றையும் மூடிவிட்டதே! மகத்தான செய்திகள்; அதைக் குறித்து யாவும் ஈஸ்டராக இருந்ததே! மரணமே…கடைசி சத்துருவாக சந்திக்க ஆயத்தமாக்கப்பட்டிருந்தது…பழைய ஏற்பாட்டில் சுகவீனங்கள் சுகமாக்கப்பட்டதை நாம் கண்டிருந்தோம். பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள் நிகழ்ந்தை நாம் கண்டிருந்தோம். தரிசனங்கள் பழைய ஏற்பாட்டில் தோன்றியிருந்தன. ஆனால் ஒவ்வொரு மனிதனும் கல்லறைக்குச் சென்றபோது, அவன் எப்போதாவது மீண்டும் எழுந்திருப்பானா என்றே வியப்புற்றான். ஆனால் ஈஸ்டர் காலையிலே எந்த மனிதனும் பெற்றுக்கொண்ட செய்தியைப் பார்க்கிலும் மகத்தான செய்தியை இந்த சீஷர்கள் பெற்றுக்கொண்டபோது, அவர்கள் என்ன பெற்றுக்கொண்டனர்? “நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துள்ளேன் என்று போய், என் சீஷர்களுக்குச் சொல்லுங்கள்!” மரணம் ஜெயிக்கப்பட்டதாயிருந்ததே! 91 பூமியின் மீதிருந்த எவருமே, எந்த தீர்க்கதரிசியுமே, எந்த மகத்தான மனிதனுமே, எந்த பரிசுத்த நபருமே எப்போதும் ஜெயங்கொள்ள முடியாததாயிருந்தது…அவர்களால் தேவனுடைய ஆவியினாலே சுகவீனத்தை ஜெயங்கொள்ள முடிந்தது. அவர்களால் காலத்தை தேவனுடைய ஆவியால் ஜெயங்கொள்ள முடிந்து, வரவிருந்த காரியங்களை முன்னரே காணமுடிந்தது. அவர்களால் அதை ஜெயங்கொள்ள முடிந்தது. ஆனால் தேவனிடத்திலிருந்து வந்த அப்படிப்பட்ட அபிஷேகத்தோடு, இந்த வாக்குமூலத்தை, “என்னுடைய ஜீவனை என்னால் கொடுக்க முடியும், நான் அதை மீண்டும் எடுத்துக் கொள்வேன். இந்த சரீரத்தை அழித்துப்போடுங்கள், நான் அதை மூன்றாம் நாளில் எழுப்புவேன்” என்று கூற முடிந்த ஒரு மனிதன் ஒருபோதும் இருந்ததில்லை. அதைப் போன்ற ஒரு வாக்குமூலத்தை கூற முடிந்த ஒரு மனிதன் இருந்ததே இல்லை. இது உண்மையாயிருக்குமா அல்லது இல்லையா என்று அவர்களுடைய இருதயங்களில் யோசனைய் இருந்து கொண்டிருந்தது. 92 ஆனால் இன்று காலையில் அவர்கள், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். நான் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளேன். இதோ, நான் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான், விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்ற ஒரு செய்தியைப் பெற்றுக்கொண்டனர். ஈஸ்டர் செய்தியானது, இது மிகச்சிறந்த செய்திகளில் முதன்மையான ஒன்றாக உள்ளது. மரணம் ஜெயிக்கப்பட்டுவிட்டதே! 93 ஒரு ஜெயங்கொள்பவனைக் குறித்து நாம் எண்ணிப் பார்ப்போம். நெப்போலியன், முப்பத்தி மூன்று வயதிலேயே, உலகத்தை ஜெயித்து விட்டிருந்தான். உலகத்தை ஜெயித்துவிட்டான், சாட்டையடி கொடுக்க வேண்டிய ஒவ்வொரு தேசத்திற்கும் அவன் சாட்டையடி கொடுத்துவிட்டான். சண்டையிட வேறு யாருமே இல்லாத காரணத்தால் அவன் மனத்தளர்வடைந்தான், அவன் அமர்ந்து அழுதான். சண்டையிட வேறு யாருமே இல்லாதிருந்தனர், ஆனால் அவன் விளையாட்டின் விதிகளை நியாயமற்ற முறையில் விளையாடினான். பல்லாயிரக்கணக்கான விபச்சாரிகள் அவனுடைய இராணுவத்தைப் பின்தொடர்ந்தனர், அவன் ஒரு துப்பாக்கியோடும் ஒரு பட்டயத்தோடும் புறப்பட்டுச் சென்றான். முப்பத்தி மூன்று வயதிலேயே அவன் உலகத்தை ஜெயித்துவிட்டிருந்தான். ஆனால் அவன் ஒரு காலத்தில் மதுவிலக்கிற்கு ஆதரவாக இருந்தும், ஒரு மட்டுமீறிய குடிகாரனாக மரித்துப்போனான், ஏனென்றால் அவன் விளையாட்டின் விதிகளை நியாயமற்ற முறையில் விளையாடியிருந்தான். அவன் செய்தியை மறந்துபோய்விட்டிருந்தான். அவன் ஜெயங்கொண்டிருந்தான், ஆனாலும் அவன் செய்தியை மறந்து போய்விட்டிருந்தான். அவன் புறப்பட்டுச் சென்றான், ஆனால் எதற்காக போய்க் கொண்டிருந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். 94 அந்த சிறு பையன் ஓட்டப்பந்தயத்தில் ஓடினது போன்றே, சபையும் இன்றைக்கு அவ்வாறே ஓடிக்கொண்டிருக்கிறது, அந்தவிதமாக ஜனங்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், தேசமும் ஓடிக்கொண்டிருக்கிறதே! நம்முடைய அடைக்கலம் அணுகுண்டுகள் அல்ல, நம்முடைய அடைக்கலம் இயேசு கிறிஸ்துவாய், அவருடைய உயிர்த்தெழுதலாய் உள்ளது. 95 நெப்போலியன் முக்கியமான காரியத்தை மறந்துபோய் விட்டிருந்தான். அவனுக்கு என்ன நேர்ந்தது? அவன் குடிபோதையில் மதிமயங்கின ஒருவனாய், முற்றிலுமாய் தோற்கடிக்கப்பட்டு மரித்துப்போனான். ஏன்? அவன் மாம்சப்பிரகாரமாக, உலகத்தை ஜெயித்திருந்த போதிலும், அவன் விளையாட்டை சரியாக விளையாடவில்லை. அவன் ஒரு இராணுவத்தை ஆயத்தம் செய்திருந்தான். அவன் ஒரு இராணுவ மேதையாயிருந்தான், அவன் ஒவ்வொரு தேசத்தையும் கைப்பற்றி செய்த காரியங்களை, (அதாவது அவன்) எந்த மனிதனும் எப்போதும் செய்ய முடியாததாயும் அல்லது அவனைப் போல், எப்போதும் செய்யாததாயுமிருந்தது, ஆனால் உண்மையான செய்தி என்னவாயிருந்தது என்பதை அவன் மறந்துபோய்விட்டிருந்தான். அவன் அதைக் கைப்பற்றிவிட்டிருந்தான், தன்னுடைய இராணுவ பலத்தையும் பெற்றிருந்தான், ஆனால் கர்த்தருடைய பலத்தையோ அவன் மறந்து போய்விட்டிருந்தான். 96 கர்த்தருடைய பெலன் நம்முடைய ஆறுதலாய் உள்ளது. நமக்கு வேறெந்த பெலனும் கிடையாது. எனக்கு வேறு எந்த அடைக்கலமும் கிடையாது, வேறொன்றும் இல்லையே! தேவனே இரக்கமாயிரும்! என் ஜீவனை ஏற்றுக்கொள்ளும், ஆனால் என் பெலன் எங்கிருந்து வருகிறது என்று நான் ஒருபோதும் மறந்து போகாதிருக்கட்டும். அது கர்த்தரிடத்திலிருந்து வருகிறதே! உலகத்தின் அருமையான காரியங்களை நான் விரும்புகிறதில்லை. எனக்கு இயேசு வேண்டும், எனக்கு அவருடைய உயிர்த்தெழுதல் என்னுடைய ஜீவியத்தில் எரிந்துகொண்டிருக்க வேண்டும். 97 இயேசு கிறிஸ்து முப்பத்தி மூன்று வயதிலிருந்து எவ்வளவு வித்தியாசமாயிருந்தார்! முப்பத்தி மூன்று வயதிலேயே, இயேசு எல்லாவற்றையும் சொந்தமாகக் கொண்டிருந்தார்; அவர் உலகத்தை உண்டாக்கினார். அவர் உலகத்தில் இருந்தார், உலகமோ அவரை அறியவில்லை. அவர் ஒருபோதும் தனக்கென்று எந்த புகழையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர் எந்த இராணுவ மனிதரையும் சேர்த்து சேர்த்துக்கொள்ளவில்லை. அவர் எந்த சபைகளையும் ஒருபோதும் ஸ்தாபிக்கவில்லை. அவர் தனக்காக எந்த பெரிய பெயர்களையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவர் ஒருபோதும் எந்த கோட்பாட்டு பட்டங்களோடும், வேதசாஸ்திரம், போன்றவற்றோடு பெருமை பாராட்டிக்கொண்டு வரவில்லை, அவர் எந்த ஒரு வேதசாஸ்திர பள்ளிக்கும் எப்போதும் சென்றதாக அவரைக் குறித்து ஒருபோதும் பதிவு ஏதும் இல்லை. ஆனால் அவர் தேவனை உடையவராயிருந்தார். அவர் தேவனை உடையவராயிருந்தார். முப்பத்தி மூன்று வயதிலே, நரகத்திலிருந்து வெளியே வந்து மாட்டிக்கொண்ட ஒவ்வொரு பிசாசையும் அவர் ஜெயித்தார். அவர் சுகவீனத்தை ஜெயித்தார். அவர் மூடநம்பிக்கைகளை ஜெயித்தார். அவர் பிசாசுகளை ஜெயித்தார். அவர் மரணத்தை ஜெயித்துவிட்டிருந்தார். அவர் சிலுவையில் மரித்தபோது, அவர் நரகத்தின் பாதாள குழிக்குள் இறங்கி, நரகத்தை ஜெயித்தார். 98 ஈஸ்டர் காலையிலே அவர் கல்லறையை ஜெயித்தார். ஏன்? அவர் செய்தியோடு ஓடி, விளையாட்டின் விதிகளை சரியாக விளையாடினார். அவர் அவ்வாறிருந்து, அவர் போய்விட்டாரே! “போங்கள்.” தேவன் அவரை அனுப்பினார், அவர்களுக்கு சொல்லும்படி அவர் ஒரு செய்தியை உடையவராய் இருந்தார். தேவன் அவருக்கு அளித்த செய்தியோடு, அவர் சாத்தானின் வல்லமைகளை ஜெயங்கொண்டார். அவர் சுகவீனத்தை ஜெயங்கொண்டார். அவர் மரணத்தை ஜெயித்தார். அவர் நரகத்தை ஜெயித்தார். அவர் கல்லறையை ஜெயித்தார். ஏன்? அவர் சென்றுவிட்டாரே! “போய், சொல்லுங்கள்!” “பிதாவானவர் செய்யும்படி எனக்கு காண்பிக்கிறதையே நான் எப்பொழுதும் செய்கிறேன். அவர் என்னை செய்யும்படி சொல்கிறதைத்தவிர வேறு எதையும் நான் செய்கிறதில்லை.” 99 அதன்பின்னர் அவர் மரிப்பதற்கு முன்பு, அவர், “பிதா என்னை அனுப்பியிருக்கிறதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்” என்று இதைக் கூறினார். இராணுவ பலத்தால் மனிதர்களை சேர்க்கக்கூடாது; யார் ஜனாதிபதியாக இருப்பார் என்பதில் உங்களுடைய நேரத்தை செலவழிக்கக் கூடாது. அது அவசியமாக இருக்கலாம், ஆனால் இதில் அது அவசியமல்ல. உலகம் போய்விட்டது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரா யிருக்கிறார் என்ற ஒரு செய்தியை நாம் பெற்றிருக்கிறோம். 100 நேற்று, ஒரு சிறிய நீதிமன்ற அறையில், சரியில்லாத ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் என்னிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “நான் ஒரு வஞ்சகன் அல்ல.” நான், “நான்—நான்—நான் நேர்மையானவன். உண்மையைத் தவிர வேறெதையும் உங்களால் இனிமேல் என்னிடம் கூறமுடியாது” என்றேன். 101 ஒரு குறிப்பிட்ட மனிதன் என்னோடு இருந்தான், அவன், “ஒரு மனிதன் அவ்விதமாக என்னிடத்தில் பேசினால், நான் ஒரு புத்தகத்தை அவனிடத்தில் வீசுவது போல உணருவேன்” என்றான். 102 அப்பொழுது நான், “இல்லை, ஜயா. இல்லை, அது சரியல்ல. அதை அணுகுவதற்கான வழி அது அல்ல. அது சரியல்ல” என்றேன். 103 அதற்கு அவர், “பாருங்கள், இந்தக் காரியங்கள் ஏன் தொடர்ந்து நடக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் இதை அங்கு செய்யவில்லை?” என்று கேட்டார். அப்பொழுது நான், “இயேசு கிறிஸ்துவைச் சேவிப்பதில் நான் என் நேரத்தை செலவிடுகிறேன்” என்றேன். 104 ஓ தேவனே, ஓ, ஜனங்கள் குருடாயிருக்கிறபடியால் அதைக் காண முடியவில்லையே! “பிதாவானவர் என்னை அனுப்பினதுபோல,” பிதா அவரை அனுப்பினார், அவர் சென்றார். அவர் ஜனங்களிடத்தில் சொல்ல ஒரு செய்தியை உடையவராயிருந்தார். மரண வேளையில், அவர் மரணத்தை ஜெயித்தார், அவர் நரகத்தை ஜெயித்தார், அவர் கல்லறையை ஜெயித்தார். “பிதாவானவர் என்னை செய்தியோடு அனுப்பியதுபோல, நானும் உங்களை செய்தியோடு அனுப்புகிறேன்; சபைகளை, ஸ்தாபனங்களை கட்டுவதல்ல, ஆனால் நீங்கள் உலகமெங்கும் போய் பரிசுத்த ஆவியின் வல்லமையை கிரியை மூலம் காண்பியுங்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள்.” நம்முடைய சரீரங்கள் கல்லறைக்கு செல்லும்போது, அவர் செய்தது போலவே, அவர் மரணத்தையும், நரகத்தையும் இரண்டையுமே, கல்லறையும் ஜெயித்துள்ளார். அவர் வல்லமையுள்ள ஜெயவீரராய் இருக்கிறார். 105 அவர் நம்மை அவருடைய செய்தியோடு அனுப்புகிறார். நாம் அந்த செய்தியோடு, சொல்லும்படியான ஏதோவொன்றோடு செல்வோமாக. போய், சொல்லுங்கள்! ஓடி, அதன்பின் சொல்ல முடியாமல் இருப்பது அல்ல; நாம் அதை முதலாவது நம்முடைய சொந்த இருதயத்தில் பெற்றுக் கொள்வோமாக. 106 இந்தக் காலையில், நீங்கள் ஜெபிக்கப்பட வரும்போது, ஒரு தற்செயலான முறையில் வரவேண்டாம். “நான் மரித்தேன், மீண்டும் உயிரோடு இருக்கிறேன், என்று உங்கள் இதயத்தில் உள்ள செய்தியோடு வாருங்கள். ‘விசுவாசிக்கிறவர்கள் நடக்கும் அடையாளங்களாவன’ என்ற செய்தியை கொடுக்கிறவர் நான்தான்.” சர்வவல்லமையுள்ள தேவன் கோணலான கண்களைக் கொண்ட ஒரு சிறு குழந்தையை எடுத்து அதனுடைய பார்வையை இயல்பு நிலைக்கு திரும்ப அளிக்க முடியுமானால்; தேவனால் ஒரு குழந்தையை, அதனுடைய ஜீவியத்தில் ஒருபோதும் பார்வையில்லாமல் பிறந்த ஒரு ஆண் குழந்தையை எடுத்து, பதினாறு வயதுடைய, அவனுக்கு மீண்டும் திரும்ப பார்வையை அளிக்கக் கூடுமானால்; தேவனால் ஒரு பரிதாபமான புற்று நோயினால் தின்றுவிடப்பட்ட மோசமான ஒரு நபரையும் எடுத்து… 107 ஏனென்றால் செய்தி சரியானதாக உள்ளது, ஏனென்றால் தேவன் செய்தியை அனுப்பினார், தேவன் செய்தியாளரை அனுப்பியதால், நரகத்திலுள்ள ஒவ்வொரு துப்பாக்கியும் அவரைச் சூடும் என்பதில் சந்தேகமில்லை. அது உண்மை, அவர் தடுமாறி விழுந்து, எழுந்து தன்னுடைய தலையை அசைத்து, தொடர்ந்து செல்வார். நாம் ஒரு செய்தியை பெற்றுக்கொண்டோம், எதுவுமே அதை நிறுத்த போவதில்லையே! அல்லேலூயா! “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” அவர்கள் விரும்புவதை அவர்கள் கூறலாம், அவர்கள் விரும்புவதை செய்யலாம், பிசாசு கோபமடைந்து அலறலாம். ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார், அவர் இன்றைக்கு நமக்குள்ளாக ஜீவிக்கிறாரே! 108 சில நாட்களுக்கு முன்பு, அராமிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்த மகத்தான வேத பண்டிதர் லாம்சாவினிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். நான் அந்த சிறு அடையாளத்தைக் கண்டேன், அங்கே தேவனுடைய அடையாளம் இருந்தது, அதில் மூன்று சிறு புள்ளிகள் இருந்தன. அப்பொழுது நான், “வேத பண்டிதர் லாம்சா, அது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அது மூன்று தன்மைகளோடுள்ள தேவன்” என்றார். 109 அப்பொழுது நான், “பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்பது போல, தேவன் மூன்று உத்தியோகங்களில் ஜீவிக்கிறார் என்று நீர் பொருட்படுத்தி கூறுகிறீரா?” என்று கேட்டேன். 110 அவர் எழுந்து, என்னைப் பார்த்தபோது, அந்த யூதனுடைய கண்களில் கண்ணீர் வர, அப்போது அவர், “சகோதரன் பிரான்ஹாமே, நீர் அதை விசுவாசிக்கிறீரா?” என்று கேட்டார். அதற்கு நான், “என்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன்” என்றேன். 111 அப்பொழுது அவர் தன்னுடைய கரங்களை என்மேல் சுற்றிப் போட்டுக்கொண்டு, “நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மகத்தான காரியங்களையும் மற்றும் நீங்கள் செய்துகொண்டிருந்த அடையாளங்களையும் நான் கண்டபோது நான் வியப்புற்றேன்” என்று கூறினார். மேலும் அவர், “நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். ஆனால் இப்போது வரை நான் நம்பவில்லை, இப்பொழுது நீர் தீர்க்கதரிசி என்பதை நான் அறிவேன்” என்றார். அவர், “அதுதான்! அதுதான் செய்தி. அந்தக் காரியமே தேவனுடைய ராஜ்யத்தை அசைக்கும்” என்றார். ஆம். அவர், “மகனே, என்றோ ஒரு நாள் நீ அதற்காக மரிப்பாய்” என்றும், “நீ அதே காரியத்தோடு உன்னுடைய சாட்சியை முத்தரிப்பாய்” என்றும் கூறினார். 112 நாம் பெற்றுள்ள மகத்தான மனிதர்களில் ஒருவர், ஐசனோவர் மற்றும் உலகத்தின் பெரிய மனிதர்கள், ஹாலிவுட், எல்லாவிதமான திரைப்பட நட்சத்திரங்களும் மற்றும் அவரை அழைக்கும் ஒவ்வொன்றும் கூட்டத்தில் அங்கே அவரையே சார்ந்திருந்தன. அவர், “நான் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த மொழிபெயர்ப்பில் இருந்து வருகிறேன், வாடிக்கன் கிரேக்க மொழியில் இருந்தல்ல, ஆனால் அராமிய மொழியிலிருந்தே; அராமியிலிருந்தே, அதிலிருந்தே நேரடியாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளேன்” என்றார். மேலும் அவர், “நான் எல்லா நேரத்தையும் அதில் செலவழித்துள்ளேன்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து, “நான் இப்பொழுதுதான் வேதாகமத்தின் தேவன் அசைவாடும் இடத்திற்குள் நடந்து வந்துள்ளேன்” என்றார். மேலும் அவர், “சகோதரன் பிரான்ஹாம், உங்களுக்கு தெரியும், நாங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண முடியும், ஆனால் அந்த அடையாளத்தில் என்ன சத்தம் உள்ளது என்பதை நாங்கள் கவனிக்கிறோம். யூதர்களாகிய நாங்கள், நாங்கள் ஒரு அடையாளத்தை காண்கிறோம், ஆனால் நாங்கள் அந்த அடையாளத்தின் சத்தத்தையே கவனிக்கிறோம்” என்றார். 113 ஓ, அல்லேலூயா, அடையாளத்தின் சத்தமே! தேவன் மோசேயினிடத்தில், “அவர்கள் முந்தின அடையாளத்தின் சத்தத்திற்கு, அந்த சத்தத்திற்கு செவிகொடாவிட்டால், அப்பொழுது அவர்கள் இரண்டாம் அடையாளத்தின் சத்தத்திற்கு செவி கொடுப்பார்கள்” என்றார். அதிகப்படியான அடையாளம் அல்ல, ஆனால் சத்தம் அதனோடு சென்றது. 114 பாருங்கள், அந்த யூதன், அவர் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தார். அவர், “நான் பகுத்தறிதல்களைக் கண்டிருக்கிறேன், நான் அடையாளங்களையும், அற்புதங்களையும், குருடர் சுகமாக்கப்பட்டதையும், மற்றும் பல்வேறு விதமான அடையாளங்களையும் கண்டிருக்கிறேன், ஆனால் நான் யோசித்துப் பார்த்தேன், ஆனால் இப்பொழுது நான் அதன் பின்னால் உள்ள சத்தம் தேவனை மூன்று பாகங்களாக துண்டிக்காமல், ‘அவர் ஒரே தேவன், பிதா, அடுத்தது, குமாரன்,…’ என்று கூறுவதை புரிந்துகொள்கிறேன். அவர், ‘தேவன் தேவனே: தேவனின் மூன்று தன்மைகள்; தேவனின் மூன்று உத்தியோகங்கள்’” என்றே கூறுகிறார். மேலும், “அது இதனை உறுதிப்படுத்துகிறது” என்றார். 115 ஓ, சகோதரனே, நாம் ஒரு செய்தியை பெற்றுக்கொண்டோமே! “போய், என் சீஷர்களுக்கு சொல்லுங்கள்! நான் மரித்துப்போன ஒருவர் அல்ல, கிட்டத்தட்ட மரிக்கக்கூடிய மற்றொருவரும் அல்ல, உயிரோடிருக்கிற இன்னொருவரும் அல்ல. நான் இருந்தவர், இருக்கிறவர், வருபவர்; தாவீதின் வேரும் சந்ததியுமானவர்; பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம்.” ஆம்! 116 நீங்கள் சொல்வதற்கு எதையாகிலும் பெற்றிருக்கவில்லையென்றால், அது போவதற்கு, போவதற்கு அது என்ன நன்மையை செய்கிறது? சொல்வதற்கு எதையாவது பெற்றிருக்க வேண்டும், அது உண்மை: “தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து உங்கள் எல்லோரையும் நேசிக்கிறார். அவர் உங்கள் எல்லோருக்காகவும் மரித்தார். தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் அன்பு.” 117 எத்தனை பேர் எப்போதாவது கூட்டத்திலிருந்து, மகத்தான அடையாளங்களையும் அவருடைய—அவருடைய பிரசன்னமாகுதலின் அதிசயங்களையும், அவர் எப்படி பகுத்தறிந்து, காரியங்களை காண்பிக்கிறார் என்பது குறித்து பார்த்திருக்கிறீர்கள்? அந்த பரலோகத்தின் தேவன் உயிர்த்தெழுந்நதுள்ளார். 118 அதனுடைய எபிரெய அடையாளத்தின் அடையாளத்தை நீங்கள் காண வேண்டும். அது ஒரு அக்னி ஸ்தம்பத்தைப்போல, ஒரு ஒளியாயுள்ளது, அதில் மூன்று சிறிய அடையாளங்கள் உள்ளன, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, மூன்று நபர்களாயிருந்ததில்லை. அது ஜீவனுள்ள தேவன் மூன்று உத்தியோகங்களில் இருந்ததாகும். அதே தேவன்! அல்லேலூயா! தேவன் உங்களுக்கு மேலே, தேவன் உங்களோடு, தேவன் உங்களுக்குள். அதே தேவன் ஜீவிக்கும்படியாக, தம்மை இரக்கத்தோடு காண்பித்து தம்முடைய சபையை சுத்தம் செய்கிறார். நீங்கள் அவரை இங்கே ஒன்று என்றும், இங்கே ஒன்று என்றும், அங்கே ஒன்று என்றும் துண்டுகளாக வெட்டும்போது, அது அஞ்ஞானியைப் போன்றுள்ளது. 119 மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை, நான் விசுவாசிக்கிறேன். “வானங்களிலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் என் கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வானங்களிலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் என் கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்று கூற முடிந்த ஒரே மனிதனாய் அவர் மாத்திரமே இருந்தார். சுவிசேஷம் வார்த்தையினால் மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையினூடாகவும் கிரியையினூடாகவும் வந்தது. நீங்கள் அதை விசுவாசிக்க தேவன் உதவி செய்வாராக, நான் அதை விசுவாசிக்கு தேவன் உதவி செய்வாராக, நாம் என்றோ ஒரு நாளில் இயேசுவைக் காண்போம். வாழ்க்கையின் உழைப்புகள் முடிவுறும்போது, நாம் என்றென்றுமாய் இயேசுவைக் காண்போம்; அவருடைய அழகான சிங்காசனத்தின்மேல் அவர் என்னை வீட்டிற்கு வரவேற்பார், அந்த நாள் முடிந்த பிறகு. (அது சரி.) கலிலேயா கடற்கரையில் இருந்து வந்த அந்த அந்நியரின் அடிச்சுவடுகளில் கால மணல்கள் கழுவப்பட்டிருக்கின்றன. 120 அவர் தன்னை தேவனாக்கிக் கொண்டதால் அவர்கள் அவரைக் கொன்றனர், அவர் தேவனாய் இருந்தார். அவர்கள் அவரைத் தூக்கிலிட்டனர், ஏனென்றால், அவர் மரண தண்டனையின் கீழ் மரித்தார். அந்தக் காரணத்தினால்தான் நான் மரண தண்டனையில் நம்பிக்கை வைக்கிறதில்லை. ரோம மத்திய அரசாங்கத்திடமிருந்து வந்த மரண தண்டனையின்—தண்டனையின் கீழ் இயேசு மரித்தார். மரண தண்டனை, ஒரு சிலுவையில் தொங்குவதாயிருந்தது. அவர் மரண தண்டனையின் கீழ் மரித்தார், அவரிடத்திலிருந்து அவருடைய வஸ்திரங்களை களைந்து, அங்கே தொங்கவிட்டு, அவரை இழிவுப்படுத்தினர், அவர் அந்த நிலையில் மரித்தார். ஆனால் தேவன் அவரை மூன்றாம் நாளில் எழுப்பினாரே! 121 நாம் அவருடைய சாட்சிகளாய் இருக்கிறோம். நாம் அவருக்காக நிற்கவில்லையென்றால், நமக்காக நிற்கப்போகிறது யார்? 122 அன்றொரு நாள் ஒரு மனிதன் என்னை சந்தித்து, “ஓ, சகோதரன் பிரான்ஹாம், நீர் சொல்லாமலிருக்கமாட்டீரா. நீ சொல்வதை விட்டுவிடும். ஸ்திரீகள் குட்டையான தலைமுடியை வைத்திருப்பதைக் குறித்து, நீர்—நீர் அவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துகிறீர், மேலும் அவர்கள் இதைச் செய்வதை, அதை செய்வதை, அதைப் போன்றவற்றைக் குறித்தே கூறுகிறீர்” என்றான். 123 அதற்கு நான், “நான் அவர்களுக்கு கூறவில்லையென்றால், யார் அவர்களுக்குக் கூறப்போகிறது? யார் அதை கூறப்போகிறது?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “பாருங்கள், நீர் பிரசங்கிமார்களை கோபப்படுத்துகிறீர்” என்றார். 124 அவர்களுக்கு அவரைவிட என்னிடத்தில் கோபமிருந்தால் நலமாயிருக்குமே. இது சத்தியமா இருக்கிறது. அது உண்மையே! [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] சரி. யார் அதைக் கூறப்போகிறது? யாராவது அதைக் கூற வேண்டும். 125 இயேசு, “போய், சொல்லுங்கள். போய் சொல்லுங்கள், நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துள்ளேன் என்று என் சீஷர்களுக்கு சொல்லுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். 126 நண்பர்களே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் ஜெபம் செய்வோமாக. 127 ஓ, பிதாவாகிய தேவனே! உண்மையாகவே, “போய், சொல்லுங்கள். நான் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளேன் என்று போய் என்னுடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்.” பிதாவாகிய தேவனே, நீர் உம்முடைய சீஷர்களுக்கு சொன்னது மாத்திரமல்ல, ஆனால் நீர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டீர் என்பதை அவர்களுக்கு நிரூபித்தீர். நீர் உம்மை அவர்களுக்கு காண்பித்து, நீர் மரிப்பதற்கு முன்பு செய்தவிதமாகவே செய்தீர். ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் வந்து போயிருந்தும், கர்த்தாவே, செய்தியோ இன்னமும் கொழுந்துவிட்டு எரிகிறது. அது சீஷர்களோடு இருந்தது போலவே இன்றைக்கு நம்முடைய இருதயங்களில் பிரகாசமாயும் கொழுந்துவிட்டும் எரிந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் உயிர்த்தெழுந்த கர்த்தர் முன்பு, செய்த காரியங்களை நமக்கு மத்தியில் செய்கிறதை நாம் காண்கிறோம். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துள்ளார் என்பதை நாம் அறிவோம். 128 உயிர்த்தெழுதல் எங்களுக்கு அதிகமாகவே பொருள்படுகிறது, ஏனென்றால் நாங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் ஐக்கியத்தில் இணைந்து அநுபவித்துள்ளோம். நாங்கள் கெட்ட குமாரனைப் போல, ஒரு காலத்தில் பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்திருந்தோம், ஆனால் இப்பொழுது நாங்கள் கிருபையை கண்டடைந்துள்ளோம், தேவன் எங்களுடைய பாவங்களை எங்களுக்கும் மன்னித்திருக்கிறார். அவர் பிதாவாகிய ஆபிரகாமுக்கு செய்ததுபோல, அவர் எங்களை ஏற்றுக்கொண்டார் என்பதை உறுதிபடுத்தும்படிக்கு அவர் எங்களுக்கும் கூட முத்திரையை அளித்திருக்கிறார். பிதாவாகிய ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று அவன் கூறினான், ஆனால் அவன் அவரை விசுவாசித்தான் என்பதற்கு ஒரு உறுதிப்படுத்துதலாக அவர் அவனுக்கு விருத்தசேதன முத்திரையை அளித்தார். இப்பொழுது, பிதாவே, இன்றைக்கு நாங்கள் பரிசுத்த ஆவியினால் விருத்தச்சேதனம் பண்ணப்பட்டிருக்கிறோம், உலகத்தில் எல்லா காரியங்களும் கடந்து போய்விட்டன. எங்களுக்கு ஒரு குறிக்கோள் உள்ளது: அது உம்மை சேவிப்பதே. எங்களுக்கு ஒரு வாஞ்சை உண்டு: உம்முடைய சீஷராயிருக்கும்படி, உம்மை நேசிப்பதே. 129 இப்பொழுதும், கர்த்தாவே, இந்த சிறிய கோர்வையற்ற செய்தியை ஒவ்வொரு இருதயத்திற்கும் நீர் உறுதிப்படுத்து வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் இதை தவறவிடாதிருக்கட்டும். நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்றும், நீர் இங்கே இருக்கிறீர் என்றும், நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர் என்றும் அவர்கள் காணட்டும், ஆவியும் சரீரமும் இரண்டாம் வருகையில் மீண்டும் ஒன்றாக இணையும் வரையில்—அவ்வாறே காண்பார்களாக. 130 பிதாவே, இந்தக் காலையில், இங்கே வியாதியாயிருக்கிறவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். நான் இப்பொழுது, இந்த ஈஸ்டர் காலையில், (இல்லை, ஒதுக்கி வைக்கப்படவில்லை, ஆனால் ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்தேன்) நீர் எனக்கு அளித்துள்ள வரங்களை, அத்தைகைய பகுத்தறிதலை ஒரு புறமாக ஒதுக்கி வைத்துள்ளேன். உலகத்தில், தேசங்களினூடாக நான் முன்னும் பின்னும் சென்று வந்திருக்கிறேன், கர்த்தாவே, அவர்கள் யாவரும் அதை அறிந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, இங்கே காடுகளில், நீர் எனக்கு அளித்த செய்திக்காக, இப்பொழுது நான் ஜெபிக்கிறேன், அதாவது, இந்த காலையில் இந்த சபையில் வைக்கப்பட்டிருக்கிற சிருஷ்டிக்கும் வல்லமையின் பேரில், சிருஷ்டிக்கப்பட்ட இந்த ஜனங்கள்மேல், தேவனே, இங்குள்ள என்னுடைய சகோதரர்களோடு, இந்தக் காலை வியாதியஸ்தர்மேல் நான் வந்து என்னுடைய கரங்களை வைக்கும்போது, இரக்கத்தோடு, இந்தக் காலை இந்த சபையின் மேல் நீர் விழுந்து, நீர் இந்த ஜனங்களை சுகமாக்க வேண்டும் என்றும், ஆராதனை முடிவுறும்போது எங்கள் மத்தியில் பலவீனமான ஒரு நபரும் இல்லாதிருப்பார்களாக என்றே நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் ஆசிர்வதிக்கப்பட்டு, சுகமடைவார்களாக. 131 கர்த்தாவே, எங்களுக்காக நாங்கள் கிரியை செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்பதை நாங்கள் உணருகிறோம். அது எளிமையான குழந்தையைப் போன்ற விசுவாசத்தோடு, விசுவாசிப்பதாகும். வியாதியஸ்தரை சுகமாக்கும்படியான வல்லமை சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் புறப்பட்டுச் சென்று, காக்காய் வலிப்புடைய நோயில் தோற்கடிக்கப்பட்டதை நாங்கள் காண முடிகிறது; ஒருவேளை, அவர்கள் மேலும் கீழுமாக குதித்துக்கொண்டும், கூச்சலிட்டுக்கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் அந்த பிசாசை வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவன் இயேசுவை சந்தித்தபோது, ஓ, எவ்வளவு வித்தியாசம். அவர், “பொல்லாத ஆவியே, அவனை விட்டு வெளியே வா” என்றார். என்ன ஒரு வித்தியாசம். ஓ, அது ஒரு அப்போஸ்தலன் அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். அது கர்த்தராகிய அவராயிருந்தது. அந்த ஆவி அந்த பையனை அலைகழித்து தரையிலேயே வீசியது. ஆனால் இயேசு, “அவன் மரிக்க விலை. அவனை அழைத்து சென்று அவனுக்கு கொஞ்சம் ஆகாரம் கொடுங்கள்” என்றார். அந்த பொல்லாத ஆவி போய்விட்டிருந்தது. 132 ஓ, இயேசுவே, தேவ குமாரனாகிய நீர், மீண்டுமாய் வந்து, உம்முடைய சபையை சுதந்திரமாக, முழுமையாக, வல்லமைவாய்ந்ததாக அபிஷேகியும். உயிர்த்தெழுந்த இயேசுவின் ஜீவனுள்ள ஆவியானது இந்தக் காலை எதிர்த்துப் பேசுகிற ஒவ்வொருவரையும் நாங்கள் வெட்கமடையச் செய்யும்படி, இந்த சபையை ஒரு புதிய விசுவாசத்திற்குள்ளாக, வல்லமைக்குள்ளாக, விசுவாசத்தின் வல்லமைக்குள்ளாக உயிர்த்தெழச் செய்வதாக. கர்த்தாவே, இதை அருளும். இந்த ஜனங்களை எல்லாம் உம்மிடத்தில் ஒப்புவித்து, எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினூடாக, நீர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பை அளித்து, அவர்களுடைய சரீரங்களை சுகப்படுத்த வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். 133 நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நான் கேள்வி கேட்கப்போகிறேன். ஒரு கிறிஸ்தவராயில்லாத எவரேனும் இங்கிருந்து, இப்பொழுது ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்பி, “சகோதரன் பிரான்ஹாம் ஜெபியுங்கள்” என்று கூற விரும்புகின்றீர்களா? அங்குள்ள உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது, “நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்ற செய்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் உண்மையாகவே அது எனக்குத் தெரியாது. அவர் என் இருதயத்தில் ஒருபோதும் எழுந்திருக்கவில்லை. எனக்கு திருப்தி இல்லை. நானும் கூட வியாதியாக இருக்கிறேன். நான் ஒரு ஜெப வரிசையினூடாக சென்று, திரும்பி வந்து மற்றொன்றினூடாக சென்று, திரும்பி வந்து மற்றொன்றினூடாக செல்வேன். நான் சபை விட்டு சபைக்கு, இடம்விட்டு இடம் செல்வேன்.” அதுவல்ல இது. இது அவரை விசுவாசிப்பதாயுள்ளது. அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார். அதுவே இதை தீர்க்கிறது. வேறு யாரேனும் உங்களுடைய கரத்தை உயரத்துவீர்களா? சொல்லுங்கள்…தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரேனும், “நான் விசுவாசிக்க விரும்புகிறேன். நான் விசுவாசிக்க விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? 134 எத்தனை பேர் இங்கே சுகவீனமாய் இருக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்தி, “நான் விசுவாசிக்க விரும்புகிறேன். நான் இந்த காலை செய்தியை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. ஆம், மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நல்லது. சரி. 135 இப்பொழுது டெடி “மகத்தான வைத்தியர்” ஒரு நிமிடம், “இப்பொழுது அருகில் இருக்கிறார்” என்ற பாடலை, நீங்கள் விரும்பினால், நீங்கள் வாசிக்கும்படி நான் விரும்புகிறேன். நீங்கள் அதை வாசித்துக் கொண்டிருக்கையில்… 136 அது இப்போது கடினமாக உள்ளது. பாருங்கள், தரிசனங்கள் கட்டிடம் முழுவதும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. ஆம், நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இது ஒரு உயிர்த்தெழுதலாயிருக்கும்படி, சற்று உயர்ந்த, நான் உட்கார்ந்திருக்கிற சாம்பல் குவியலிலிருந்து—சற்று உயரமாக இருக்கும்படி செய்ய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் அதிகமான வெளிப்பாடு தேவை. நான் ஒரு காரியத்தை அறிவேன்; நான் அந்த முதல் ஊழியத்தை பற்றியிருக்கும் வரை, இரண்டாவது வராது, அது வரவில்லை. இப்படி நான் இரண்டாவதை பற்றியிருக்கும் வரை, மூன்றாவது வராது, பாருங்கள். நான் அடியெடுத்து வைக்க வேண்டும், அடியெடுத்து வைத்து, “தேவன் அவ்வண்ணமாய்க் கூறினாரே!” என்று விசுவாசிக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு முன்பு… 137 இப்பொழுது நீங்கள் விரும்பினால் உங்களுடைய தலைகளை நீங்கள் உயர்த்தலாம். நான் உங்களுடைய கரங்களைக் கண்டேன்; தேவனும் அவைகளைக் கண்டார். 138 நான் ஒரு சிறு காரியத்தை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். சகோதரன் எட் டால்டன், அவர் சற்று முன்பு வாசலண்டை வந்தார் என்று நான் நினைக்கிறேன், அருமையான பாப்டிஸ்டு சகோதரன், அவரும் அவருடைய மனைவியும். சகோதரன் ஜெப்ரீஸ் இங்கு எங்கோ இருக்கிறார். ஓத்தெல் ஜெப்ரீஸ். அவர் இங்கிருக்கிறார், அவர் இங்கு எங்கோ இருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஆனபோதிலும், அந்த சகோதரர்கள் நான் செல்லும்படியாக கென்டக்கியில், ஒரு கூட்டத்தை அமைத்திருந்தனர். சகோதரர்கள், விலையேறப்பெற்ற சகோதரர்கள், தங்களுடைய சுற்றுப்புறத்தாரையும் மற்றும் அவர்களுடைய ஜனங்களையும் நேசிக்கிறார்கள். அவர்கள் அரங்கங்களையும் மற்றும் ஆயுத சாலை கட்டடங்களையும் மற்றக் காரியங்களையும், ஒரு இரவு ஆராதனைக்காக ஏற்பாடு செய்தனர், அவர்கள் ஆயுத சாலையை வாடகைக்கு எடுத்திருந்தனர். லிட்டில் ஜே.டி. ஹூவர், எப்போதும் அவருடைய…எல். ஜி. ஹூவர் எலிசபெத் டவுனில் ஒன்றை அமைத்திருந்தார். மேலும் சகோதரனே எட் டால்டன் வில்லோ லேட் இல்லை—இல்லை சம்மர் ஷேட், சோமர்செட்டில், சோமர்செட்டில் அமைத்திருந்தார். சகோதரனும், மற்ற சகோதரனும், நான் பிறந்திருந்த, கிளாஸ்கோவைச் சுற்றியிருந்தனர். நான் பிறந்து வளர்ந்த, கர்த்தருடைய தூதன் எனக்கு முதலில் தோன்றிய இடத்திலிருந்த ஜனங்கள். 139 நான் திரும்பிச் செல்ல விரும்பினேன். ஆனால் நான் ஒரு சிறு அசைவை உணர்ந்தேன். மேலும் நான், “பாருங்கள், சகோதரர்களின் நிமித்தமாக, நான் அந்த கூட்டத்தை அமைப்பேன்” என்றேன். நான் அந்த பள்ளத்தாக்கை அடைந்தவுடன், என் தொண்டை அடைத்துக் கொண்டது, ஒன்பது நாட்கள் வரை என்னால் பேச முடியவில்லை. 140 சகோதரன் ரடல், அவரும் கூட இக்காலை இங்கிருக்கலாம், இந்தக் கூடாரத்திலிருந்து வந்துள்ள சகோதரர்களில் ஒருவர், அவரும் ஜூனி ஜாக்சனும் மற்றவர்களும், நான் அவருக்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டியவனாயிருந்தேன். அப்போது உடனடியாக, என்னுடைய தொண்டை அடைத்துக்கொண்டது. உங்களுக்கு தெரியுமா முதலாவது, எனக்கு கிட்டத்தட்ட நூற்றைந்து பாகை ஜுரம் வந்துவிட்டது. மேலும் நான் கூட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன், முதலாவது, மேலும்—மேலும் மருத்துவர் ஸ்கோன் என்னிடம் சொன்னார்…நான், “என்னுடைய தொண்டை கரகரப்பாய் உள்ளது” என்றேன். 141 அப்பொழுது அவர், “குரல்வளையைத் தளர்த்த நான் உங்களுக்கு ஏதாவது தருகிறேன், நீங்கள் போய் பிரசங்கம் செய்யுங்கள்” என்றார். அவர் எனக்கு கொடுத்த மற்ற ஏதோ ஒன்றை நான் எடுத்துக் கொண்டேன், மேலும், அது என்னவாயிருந்ததென்றால், அது எலும்பு உட்புழை நீர் சேர்க்கையை இழுத்து அதை அடைத்துவிட்டது. அப்பொழுது நான் அதிக அனல்கொண்ட காய்சலோடு, ஒன்பது நாட்களாக படுக்கையில் படுத்திருந்தேன். 142 இங்குள்ள என்னுடைய சகோதரர்களில் அநேகர் என்னிடம் வந்தனர், அநேக பிரபலமான சகோதரர்கள் வந்து எனக்காக ஜெபித்தனர். இதோ சகோதரன் கிரஹாம் ஸ்நெல்லிங் வந்தார், இதோ சகோதரன் ரடல் வந்தார், இந்த எல்லா சகோதரர்களும் இங்கே, ஒன்று கூடி ஜெபித்து, மற்ற எல்லாவற்றையும் செய்தனர். நானும் ஜெபித்தேன், முடிந்தவரை முயற்சித்தேன், மெல்லக்கூட பேச முடியவில்லை. அப்பொழுது நான், “இதெல்லாம் எதைக் குறித்தது?” என்று யோசித்தேன். என்னுடைய அருமையான மனைவி அங்கு அமர்ந்துகொண்டு, அவளும் மற்றவர்களும் எனக்காக ஜெபித்துக்கொண்டிருந்தனர், அப்படியே அதே நிலையில் இருந்து கொண்டிருந்தது. எனவே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 143 இப்பொழுது, நான் உட்கொள்ளும்படி அவர் எனக்கு சில மருந்துகளைக் கொடுத்தார், ஆனால் நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் அது மயக்க மருந்தாக இருந்தது. அதன்பின்னர் நான் அதை அப்படியே விட்டுவிட்டேன். மேலும் நான், “கர்த்தாவே, நிச்சயமாகவே!” என்றே நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். 144 அதன்பின்னர், கூட்டங்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், ஒரு திங்கட்கிழமை (அதாவது, கடைசிக் கூட்டம், சனிக்கிழமையன்று நடக்க வேண்டியதாயிருந்தது), அப்பொழுது (நான் நினைக்கிறேன்) அதன்பின்னர், திங்கட்கிழமை நான் எழுந்திருக்க முயற்சி செய்தேன். நான் மிகவும் பலவீனமாயிருந்தேன், என்னால் அறைக்குள்ளாகக் கூட செல்ல முடியவில்லை. நான் கீழே அமர்ந்துகொண்டேன். 145 உங்களுக்கு தெரியுமா, தேவன் எனக்களித்துள்ள மனைவிக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சகோதரர்களே, நீங்கள் அவ்வாறிருக்கவில்லையா? ஒரு உண்மையான மனைவி, ஒரு உண்மையான துணையாயிற்றே! 146 நான் அமர்ந்துகொண்டேன். பின்னர் நான், அவளிடத்தில் நெருங்கி வரும்படி சைகைக் காட்டினேன். மேலும் நான், “மேடா, சில சமயங்களில் நான் யோசிக்கிறேன்,” என்று கூறி, நான், “இது என்ன காரியம் என்று நான் யோசிக்கிறேன்” என்றேன். நான், “அவர்கள் அங்கே கூட்டங்களில் இருக்க, தேவன் ஏன் என்னை இந்தவிதமாக படுக்க வைத்தார்?” என்று கேட்டேன். மேலும் நான், “அது ஏன்?” என்று கேட்டேன். நான் தொடர்ந்து, “சில நேரங்களில் அவர் என்னையும் கூட அழைத்தாரா என்று நான் யோசிக்கிறேன்” என்றேன். 147 அப்பொழுது அவள், “நீர் உம்மைக் குறித்து வெட்கப்படவில்லையா?” என்று கேட்டாள். பார்த்தீர்களா? மேலும் அவள் என்னிடத்தில் கூறினாள், “பில், தேவன் உம்மோடு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று நீர் அறிந்திருக்கவில்லையா? சற்று, சற்று அமைதியாயிரும்” என்று கூறினாள். 148 அதனால் நான் உள்ளே சென்றேன். அந்தவிதமாக சற்று என்னை கடிந்து கொண்டாள், உங்களுக்கு தெரியுமா. எனவே நான் உள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டேன். அவள் படுக்கை விரிப்புகளை மாற்ற உள்ளே வந்தாள். அவள் தன்னுடைய கரங்களிலிருந்த அந்த—அந்த படுக்கை விரிப்புகளை மாற்றிவிட்டு, வெளியே புறப்பட்டு சென்றபோது, நான் நோக்கி பார்த்தேன், அங்கே ஒரு… 149 நான் ஒரு பழை…ஒரு மகத்தான பெரிய ஆயுத சாலை கட்டிடத்தை கண்டேன், சூரியன் பிரகாசிக்க, தரையின் மேல் வெளிச்சம்பட, ஒளிக்கதிர்கள் சிதறும்படி, சூரியனோ பரலோகத்திலிருந்து பிரகாசித்தது. அங்கே மூன்று ஸ்திரீகளும் ஒரு புருஷனும் வந்திருந்தனர். அவர்கள் மிகச்சிறிய, சிறியதுபோல…ஒருவிதமான சுடுகின்ற சிறிய துப்பாக்கிகள் போன்றவற்றை வைத்திருந்தனர். ஆனால் அவரோ, “அது ஆணிகளை பதிக்கிறது” என்றார். மேலும் அவர், “நாங்கள்…இந்த துண்டுகளை நீர் வைத்துக் கொள்ளும், சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் இந்த ஆயுதக் கிடங்கை உங்களுக்காகத் திரும்பக் கட்டித் தருவோம்” என்றார். அப்பொழுது நான், “சரி, நான் அதை செய்வேன்” என்றேன். 150 ஆனால் ஏதோ ஒன்று, “அதைச் செய்யாதே” என்றது. பாருங்கள், இந்த விதமாக அதைக் கட்டுவதற்கு, இந்த விதமாக ஒரு துண்டை எடுப்பதற்கு கீழே வந்தேன். அப்பொழுது ஒரு சத்தம் என்னிடத்தில் பேசி, “இப்பொழுது உன்னை திரும்ப அழைத்துச் செல்ல அவர்கள் வழியில் வந்து கொண்டிருக்கின்றனர். நீ அதை நம்ப வேண்டாம்” என்றது. மேலும், “அவர்கள் எப்பொழுதுமே மிகவும் உத்தமமானவர்கள், அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு உன்னிடத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தவறாக இருக்கிறார்கள்” என்றது. பார்த்தீர்களா? 151 நான் அதைக் குறித்து அவர்களிடத்தில் கூறினபோது, ஃப்ரெட் சாத்மனும், இங்குள்ளவர்களில் அநேகரும் அங்கிருந்தனர். ஒரு மணி நேரத்திற்குள், அந்த ஜனங்கள் சரியாக என்னுடைய வாசலண்டை வந்தனர். அப்பொழுது நான், “அவர்கள் மூன்று ஸ்தீரிகளும் ஒரு மனிதனும்” என்றேன். “அது முற்றிலும் சரியே.” “அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வந்தார்களா?” “ஆம், ஐயா, அவர்கள்…” 152 அப்பொழுது நான், “உண்மையாகவே, அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை நீ அறிவாய்” என்றேன். உத்தமமாக தவறாயிருந்தார்கள், பாருங்கள். அருமையான ஜனங்கள், ஆனால் உத்தமமாக தவறாயிருந்தனர். பார்த்தீர்களா? 153 அப்பொழுது நான், “பாருங்கள், நான் என்ன செய்யமுடியும்? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று நினைத்தேன். அதன்பிறகு மேடா உள்ளே வந்து, அவள் திரும்பி சென்றுவிட்டாள். மேலும் சகோதரன் ஃபரெடி சென்று, அந்த ஜனங்களிடத்தில் கூறினார். அதன்பிறகு கொஞ்சம் கழித்து, நான் படுக்கையின் மேல்— மேலிருந்து, “ஏன் அந்த விதமாக அது நடக்கிறது? ஏன் என்னால் பேச முடியவில்லை? ஏன் என்னால் யாரிடத்திலும் பேச முடியவில்லை, அல்லது எதையுமே பேச முடியவில்லை?” என்று நான் நினைத்தேன். நான் அங்கே படுத்துக் கொண்டிருந்தேன். மேடா உள்ளே வந்து, அறையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்திருந்தாள். 154 அப்போது நான் பார்த்தபோது, ஏதோவொன்று ஒரு பக்கத்தில் மினுமினுப்பை நான் கண்டேன். நான் நோக்கிப் பார்த்தபோது, இது…என்னுடைய சுவர் திறந்திருக்க, நான் இயேசுவைக் கண்டேன். என்னுடைய வாழ்க்கையில், ஒரு தரிசனத்தில், நான் இயேசுவை இரண்டு முறை கண்டேன் என்று நான் கூறியதை உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? கடைசி நேரத்துக்கு முன்பு, நான் அவரை மீண்டும் காண்பேன், பாருங்கள், அவரை மீண்டும் காண்பேன் என்று நான் விசுவாசித்தேன். இப்பொழுது, நான் நோக்கிப் பார்த்தபோது, அங்கிருந்த ஆகாயங்கள், நான் சுவற்றினூடாக நோக்கிப் பார்ப்பது போன்றே காணப்பட்டன. அங்கே வேதாகமம் இந்த விதமாக நின்றுகொண்டிருந்தது, மகத்தான பெரிய வேதாகமம் ஆகாயங்களில் நின்றுகொண்டிருந்தது. பாருங்கள், வேதாகமத்தை சுற்றிலும் ஏதோ ஒரு வெளிச்சம் பிரகாசித்தது, வேதாகமத்திலிருந்து உண்மையாகவே அழகான பொன்நிறமான ஒரு சிலுவைத் தோன்றியது. மேலும் அது இந்த விதமாக நின்றது, அதைச் சுற்றிலும் வெளிச்சங்கள் தோன்றிக்கொண்டிருந்தன, அந்த சிலுவையிலிருந்து அவர் நடந்து வந்தார். வேதம் சிலுவையைப் பிரதிபலித்தது, சிலுவை அவரைப் பிரதிபலித்தது. அவர் வெளியே நடந்து வந்தார், கீழே நான் இருந்த இடத்திற்கு நடந்து வந்தார். என்னால் அதைத் தெளிவாக பார்க்க முடிந்தது, அந்த சிலுவை அங்கே நின்றுகொண்டிருந்த அவருடைய தலைமுடியை பிரதிபலிப்பதையும், அவருடைய முகத்தின்மேல் அது தொங்குவதையும் என்னால் காண முடிந்தது. 155 அவர் அந்தவிதமாக என்னை நோக்கிப் பார்த்து, அவர் என்னிடம், “உன்னுடைய புதிய ஊழியம் உனக்கு உறுதிபடுத்தப்படுவதற்காக நீ காத்துக்கொண்டிருக்கிறாய்” என்றார். அவர், “நான் அதை ஏற்கனவே உனக்கு உறுதிப்படுத்தியுள்ளேன். அது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். புரிகிறதா? நான் நின்று ஒரு நிமிடம் அவருக்கு செவி கொடுத்தேன். அது என் நினைவிற்கு வந்தது. நான் அதைக் கேட்கவில்லை, அது அப்படியே என் நினைவுக்கு வந்தது. 156 தன்னுடைய ஜீவிய முழுவதும் ஒரு பாவியாயிருந்து வருகிற ஒரு மனிதனைப் போல, ஒரு வேதாகமம் உண்டு என்று அவன் அறிந்திருக்கிறான், தேவன் ஒருவர் உண்டு என்றும் அவன் அறிந்திருக்கிறான். ஆனால் அவன் ஒரு பிரசங்கத்தை கேட்கும்போது, அப்போது ஏதோ ஒன்று, “அது நீ தான்” என்று சொல்கிறது. அதன்பின்னர், அங்கே எல்லா நேரத்திலும் இருந்து வந்த அதே வார்த்தை, அதே சமயத்தில் அது அவனுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது, அப்பொழுது அவன், “கர்த்தாவே, என்னை மன்னியும்” என்று கூறுகிறான். ஆனால் அவன் தன்னுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் வரை அது எந்த ஒரு நன்மையும் செய்யாது, அதன்பின்னர் அவன் வெளியே போய் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறான். அவன் எவ்வளவுதான் அழுதாலும், அவர் எவ்வளவுதான் கெஞ்சினாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 157 அவர் அப்போது என்னிடத்தில், “நீ அதேவிதமாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ இதை விசுவாசிக்க வேண்டும்” என்று கூறினார். 158 தோல்வியைக் குறித்து நான் பயப்படுகிறேன். நான் ஒரு நிந்தையைக் கொண்டு வருவேன் என்றே பயப்படுகிறேன். நான் எப்பொழுதும் அதைக்குறித்து பயப்படுகிறேன், கவனித்துப் பார்க்கிறேன், நான் தவறான காரியத்தை அழைப்பேன் என்று எண்ணுகிறேன். காரணம், நான் வேதாகமத்தின் எச்சரிப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன், எப்படி மோசேக்கு அந்த மகத்தான வல்லமை கொடுக்கப்பட்டபோது, அவன் கன்மலையினிடத்தில் பேசுவதற்கு பதிலாக அதை அடித்துவிட்டான். நான் எலியாவைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன், ஏனென்றால் அவன் மொட்டைத்தலையனாய் சென்றபோது, அவன் மொட்டைத் தலையனாயிருப்பதைக் குறித்து அந்த சிறு பிள்ளைகள் பரிகாசம் செய்தனர்; அப்பொழுது அவன் அந்த பிள்ளைகளின்மேல் ஒரு சாபத்தைக் கூற, அவர்களில் நாற்பத்திரெண்டு பேர் கரடிகளால் கொல்லப்பட்டனர், பாருங்கள். அது பரிசுத்த ஆவியாயிருக்கவில்லை, ஆனால் அது கோபங்கொண்ட, அந்தத் தீர்க்கதரிசியாயிருந்தது. நான்—நான் அந்த எல்லா காரியங்களினூடாகவும் சென்று, அதற்கு வந்துள்ளேன். 159 அவர் அங்கு நின்று, என்னிடத்தில் பேசினார். மேலும் அவர், “ஆனால் நீ அநேகரோடு கூட நடக்கிறாய்” என்றார். அவர், “என்னோடு நடக்க, நீ தனியாக நடக்க வேண்டும்” என்றார். 160 அப்பொழுது எனக்கு புரிந்துவிட்டிருந்தது, நான் ஸ்தாபனங்களிடத்திலும் மற்ற ஒவ்வொரு காரியங்களையும் அதிகமாக பகிர்ந்து கொண்டு வருகிறேன், நீங்கள் பாருங்கள், என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை உனக்கு யாராவது கூற முயற்சிக்கிறார்கள். நீ அவரைப் பின்பற்ற வேண்டும். இப்பொழுது, மீன்களைப் குறித்து அவர் அளித்த தரிசனம் நினைவிருக்கும், உங்களுக்கு தெரியும், நீ பெந்தேகோஸ்தே குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களை எப்படியும் போதிக்க முடியாது. உங்களுக்கு நினைவிருக்கும். அதுதான் காரியமாய் இருந்தது. நான் இந்த புதிய செய்தியின் விளிம்பில் இருக்கிறேன். 161 அந்த தரிசனம் என்னைவிட்டு சென்றவுடனே, நான், “ஆமென், கர்த்தாவே!” என்றேன். அங்கே நின்றுகொண்டிருந்த என்னுடைய மனைவி, கிட்டத்தட்ட மயக்கமடைந்தாள். நான் படுக்கையிலிருந்து குதித்தேன், நான் இப்போது பேசியதுபோல நன்றாக பேச முடிந்தது. ஒரு நொடியிலேயே, ஒரு துளி காய்ச்சலும் எனக்கு இல்லாதபடி போய்விட்டது. 162 நான் மருத்துவர் ஸ்கோனை அழைத்தேன், அப்பொழுது நான், “நீர் என்னை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றேன். அவர், “என்னத்துக்கு?” என்று கேட்டார். 163 நான் அங்கு வந்தபொழுது, அவர் என்னை நோக்கிப் பார்த்து, அவர் எலும்பின் உட்புழை நீர் சேர்க்கையை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “சகோதரன் பிரான்ஹாம், என்ன சம்பவித்தது என்பதை எனக்கு சொல்லுங்கள்” என்றார். அப்பொழுது நான், “நீங்கள் எனக்கு நடந்ததை நம்புவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் எப்படி அதை சந்தேகிக்க முடியும்? அது சம்பவித்துள்ளதே” என்றார். 164 அதுதான் இதுவாகும், பாருங்கள். நண்பனே, அதுதான் இது. உங்களை ஒரு சாம்பல் குவியலின் மேல் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார். அவர் உங்களுக்கு செய்தியை அனுப்பி, பாருங்கள், ஏதோ ஒரு காரியத்தை செய்யும்வரை உங்களுக்கான ஏதோ ஒரு காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். 165 இன்றைக்கு, எவ்வளவு தோல்வி என்று எனக்குத் தெரியாது. அண்மையில் நான் உள்ளே சென்று, ஒரு வானொலி ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு ஊழியக்காரர் முதலாம் கொரிந்தியர் 15-ம் அதிகாரத்திலிருந்து, உயிர்த்தெழுதலின் பேரில் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அவர் உயிர்த்தெழுதலை பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய பிரசங்கத்தை பாதியில் நிறுத்திவிட்டு, “உங்களுக்குத் தெரியுமா, அநேக ஜனங்கள் தோல்வியைக் குறித்து பயமடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார். அவர், “படைப் பெருந்தலைவர் சில வீரர்களை இழந்தபோது,” என்று கூறினார், அப்பொழுது, “அவர்கள் அவரிடத்தில் கூறினர்…அவர் திருப்பி அனுப்பினார், அவருக்கு மேலும் அதிகமான பேர்கள் தேவைப்பட்டது, அவர்கள் அவரிடத்தில் இன்னும் அதிகமான பேர்களை அனுப்பினர். அவர் பெற்றுக்கொண்ட அவர்களும் கொல்லப்பட்டனர். அவர் மேலும் அதிகமான பேரை அனுப்பினார். அவர் மூன்றாவது கூட்டத்தினரை பெற்றுக்கொண்டபோதோ” என்று கூறி, “ஒவ்வொரு முறையும் ஒரு துப்பாக்கி குண்டு வெடிசத்தத்தை ஏற்படுத்தும்போது, அவர்கள் ஒரு தகரத்தின் கீழே ஓடுவார்கள், அல்லது மற்ற ஏதோ ஒன்றின் கீழே ஓடி, பயப்படுவார்கள்” என்றார். 166 அப்பொழுது அவர், “புருஷர்களை எனக்கு அனுப்புங்கள், சிறுபிள்ளைத்தனமானவர்களை அல்ல” என்றார். அவர், “மரிக்க ஆயத்தமாயிருக்கிற புருஷர்களே எனக்கு தேவை. பயப்படுகின்ற யாரோ ஒருவர் எனக்கு வேண்டியதில்லை. நாங்கள் சண்டையிட்டுக் கொண்டி ருக்கிற காரணத்துக்காக மரிக்கத் தகுதியற்றவர்களாயிருந்தால், அப்பொழுது அவர்களை என்னிடத்திலிருந்து விலக்கிவையுங்கள். எனக்கு புருஷர்களே வேண்டும்” என்றார். அவர்களோ, “ஆனால் நீர் இரண்டு அல்லது மூன்று சண்டைகளில் தோற்றுவிட்டீரே” என்றனர். 167 அவரோ, “நான் யுத்தத்தில் தோற்றுப்போகவில்லை. நான் ஒரு சிறு சண்டையிலே தோற்றுள்ளேன்” என்றார். ஏதோ ஒன்று என் இருதயத்தில் பேசியது. 168 ஜசன்ஹவர், “நான் ஒரு துப்பாக்கி குண்டை போட்டு, அவர்கள் துப்பாக்கியில் சூடும்படி கட்டளையிட்டபோது, அவர்கள் அதை வெளியே எடுத்தனர், அது ஒரு குழப்பமாய் இருந்தது, அது கிரியை செய்யவில்லை,” என்று கூறி, “உடனே நான் அமைதியாகி சரணடையவில்லை. நானும் துப்பாக்கி குண்டை வெளியே எடுத்து மற்றொன்றை துப்பாக்கிக்குள் போட்டு, அதை முயன்று பார்த்தேன். அதுவும் கிரியை செய்யாதிருந்தால், நான் மற்றொன்றை உள்ளே போடுவேன், ஒன்று கிரியை செய்யும் வரை முயற்சிப்பேன்” என்றார் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். 169 அந்த விதமாகத்தான் இது செய்யப்பட வேண்டும். அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பிரசங்க பீடத்தில் தேவன் என்னுடைய நியாயாதிபதியாய் இருக்கிறபடியால் எத்தனை குழப்பங்கள், எத்தனை—எத்தனை சண்டைகளில் தோல்வியுறுவேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் யுத்தத்தில் தோற்றுப் போகமாட்டேன். அவர் என்னோடு இருப்பதாகக் கூறினார். அந்த ஊழியம் உறுதிப்படுத்தப்படுவதை நான் காணும் வரை, அது செயல்படுவதை காணும் வரை, நான் அப்படியே தரித்து நிற்பேன். நான் தேவனுடைய கிருபையினால் இந்தக் காலை தொடங்குகிறேன். அது இங்கே கிரியை செய்யுமா, அது வேறு எங்காவது செய்யுமா, எப்படி அது கிரியை செய்யும் அல்லது என்ன சம்பவிக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறியும் வரை, நான் ஜெப வரிசைகளினூடாக நடந்து சென்று, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பேன். அது இரண்டு அல்லது மூன்று முறைகள் சம்பவித்ததை நான் கண்டேன். 170 அது ஹாட்டியினுடைய வீட்டில் நடந்ததை நான் கண்டேன். எத்தனை பேர் அணில்களை குறித்த அந்த சம்பவத்தையும், அந்தப் பெண்ணைக் குறித்தும், அந்த சிறு பெண்மணியை குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? சீஷர்களின் நாட்களிலிருந்து, நாம் அறிந்ததிலிருந்தே முதல் நபருக்கு, நீங்கள் அங்கிருந்தபோது, “உனக்கு விருப்பமானதைக் கேள்” என்று கூறும் சிலாக்கியம் அளிக்கப்பட்டது. நீங்கள் அந்த சம்பவத்தை எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் அந்த ஸ்திரீயை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? எத்தனை பேர் அவளை ஒருபோதும் பார்த்ததில்லை, அது சம்பவித்த அந்த ஸ்திரீயை எத்தனை பேர் காண வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நாங்கள்… ஹேட்டி, நீங்கள் எழும்பி நிற்பீர்களா? அதோ அந்தப் பெண்மணி. 171 அவள் வீட்டில் நின்று கொண்டிருந்தேன். நான் எட்டு அணிகளைப் பார்த்தபிறகு, அது சுற்றிலும் எங்குமே இல்லை, வார்த்தையை பேசு, அவைகள் அங்கே இருக்கும். அது உண்மை. அதாவது, அவைகள் அங்கே இருந்தன. நான், “அந்த அணில்கள் அங்கே வரும்படி செய்தது எது?” என்று கேட்டேன். அவளுடைய மேஜையில் அமர்ந்திருந்தேன். மேலும் அவளுடைய தாயார், சகோதரி ரைட், இங்குள்ள சகோதரர் ரைட், அங்கே அமர்ந்து கொண்டு இருந்தனர். எத்தனை பேர் மேஜையண்டை இருந்தீர்கள், எத்தனை பேர் இந்தக் காலை இங்கே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள், அதோ அவர்கள் இருக்கிறார்கள், கட்டிடம் முழுவதும் இருக்கிறார்கள். பார்த்தீர்களா? சரி, அவர்கள் அங்கே இருந்தனர். நான், “ஒரு நாள்…” என்றேன். அவர்களுடைய சிறிய ஊனமுற்ற சகோதரி அங்கே அமர்ந்திருந்தாள். 172 நான், “அது தரிசனம், போன்றவற்றின் மூலமாக வர வேண்டும், ஆனால் அது என்றோ ஒருநாள் வித்தியாசமாக வரும்” என்றேன். அந்த விதமாக பேசிக்கொண்டிருந்தோம். ஒரே நேரத்தில், ஏதோ அதை அபிஷேகித்து (அதை இந்த ஜனங்களிடத்திற்கு விட்டு விடுகிறேன்), நான் அப்படிப்பட்ட ஒரு அபிஷேகத்தை ஒருபோதும் உணர்ந்தேயில்லை. ஏன்? ஏனென்றால் ஹேட்டி சரியான காரியத்தைக் கூறினாள். 173 அப்பொழுது நான், “அந்த அணில்கள் எங்கிருந்து வந்தன? அங்கே ஒன்றுமே இல்லாதிருந்தது, அவைகளுக்கான ஒரு இடம் கூட இல்லை, ஒரு தொலைபேசி கம்பத்தை போன்ற ஒன்று மாத்திரமே இருந்தது. அது எட்டுமுறை சம்பவித்தை நேராகவே நான் கண்டேன்” என்றேன். மேலும் நான், “அது எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியாது” என்றேன். நான், “எனக்குத் தெரிந்த ஒரே காரியம், ஒருமுறை தேவன் ஆபிரகாமுக்கு ஒரு செய்தியை உறுதிப்படுத்த முயன்றார், ஒரு ஆட்டுக்கடா தோன்றும்படி பேசினார், ஏனென்றால் அதை உறுதிப்படுத்த, அவருக்கு ஒரு ஆட்டுக்கடா தேவைப்பட்டது. என்னுடையதை பேச, ஒரு அணில் தேவைப்பட்டிருந்திருக்க வேண்டும். அவர் நேராக எட்டு முறைகள், இல்லை நேராக ஏழு முறைகள், சரியாகக் கூறினால், நேரடியாக ஏழு முறைகள் அதை செய்தார்.” மேலும் நான் கூறினேன்… 174 மேலும், ஹேட்டி, அந்தப் பெண் என்ன கூறிக்கொண்டிருந்தாள் என்பதை அறியாமல் இருக்கலாம். அது பணக்காரர்களையும் கர்வங்கொண்டவர்களையும் எப்படி கடந்து சென்றது என்பதைப் பாருங்கள். அது எப்படி ஒவ்வொரு காரியத்தையும் கடந்து, அங்கிருந்த ஒரு ஏழ்மையான எளிய பண்டைய நாட்டுப்புற பெண்ணிடம் வந்தது. 175 அந்தப் பெண்ணுக்குத் திருப்பித் தர, என்னுடைய சட்டைப்பையில் இருபது டாலர்கள் என்னிடமிருந்தது, அதாவது, அவள் இந்த புதிய சபையை கட்டியெழுப்புவதற்கு ஐம்பது டாலர்கள் தருவதாக உறுதி அளித்திருந்தாள். மேலும் அவளை சங்கடப்படுத்துவதற்கு நான் இதைக் கூறவில்லை; அதை கொடுக்கும்படி, உண்மையாகவே, அவளால் ஜம்பது சென்டுகள் சம்பாதிக்க முடியாது. ஆனால், அவளுடைய இருதயத்தில் இருந்த செய்தியினால், அவள் அதைச் செய்ய விரும்பினாள். சகோதரன் நெவில், நான் அதை ஏற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன், மீதமுள்ளதை நான் எடுத்துக்கொள்ளமாட்டேன், எனவே அதிலிருந்து இருபது டாலர்கள் அவளுக்கு நான் கொடுக்கவிருந்தேன். நான் என்னுடைய சட்டைப்பையில் இரண்டு பத்து டாலர்கள் காசோலையை வைத்திருந்தேன், மளிகை சாமான்களுக்காக மேடா என்னிடத்தில் கொடுத்திருந்தாள், எனவே நான், “அதை இன்றைக்கு நான் அவளுக்கு திருப்பித் தரப் போகிறேன்” என்றேன். 176 அப்போது நான் நினைத்தேன், ஏதோ என்னிடம் பேசியது, “அந்த விதவை தன்னிடத்திலிருந்த மூன்று காசுகளை போட்டதை இயேசு கண்டார், அவர் அதை எடுத்து ஒருபோதும் அவளுக்கு திரும்ப கொடுக்கவில்லை” என்றது. அவர் ஏதோ ஒன்று அவள் பாதையில் மகத்தானதானதாயிருந்தபடியால் அவர் அவளைப் போட அனுமதித்தார். 177 கணவன் இல்லாத, ஒரு விதவைப் பெண்ணை குறித்து, அதே விதமாக அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அவளுடைய கணவன் கொல்லப்பட்டிருந்தான். அது அதே ஒன்றாய் இருந்தது என்றும் எனக்கு தெரியாதிருந்தது, அப்பொழுது நான், “அப்படியானால் நான் அந்த இருபது டாலர்களை வைத்துக்கொள்வேன், அவளுக்காக நீர் ஏதோ ஒன்றை வைத்திருக்கிறீர்” என்றேன். 178 நான், “யேகோவா இன்னமும் யேகோவா-யீரேவாக இருக்கிறார் என்ற ஒரே காரியத்தையே நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு பலியை அளிக்கக் கூடியவராக இருக்கிறார்” என்றேன். 179 மேலும் ஹேட்டி, அவள் என்ன கூறிக் கொண்டிருந்தாள் என்பதை அறியாமல், எழுந்து நின்று, “சகோதரன் பிரான்ஹாமே, அது உண்மையேயல்லாமல் வேறொன்றுமில்லை” என்று கூறினாள். ஓ, என்னே! அதுவே கூறுவதற்கான சரியான காரியமாய் இருந்தது. அதுவே கூறுவதற்கான சரியான காரியமாக இருந்தது. 180 கிட்டத்தட்ட அந்த நேரத்தில், தேவனுடைய வல்லமை அந்த இடத்தை தாக்கியது; நான் அப்படிப்பட்ட அபிஷேகத்தை ஒருபோதும் உணர்ந்ததே கிடையாது. அது அவ்வாறு தாக்கியபோது, நான், “ஹேட்டி, கர்த்தர் உரைக்கிறதாவது, உனக்கு விருப்பமானதைக் கேள்! அது என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, உன்னுடைய இருதயத்தின் வாஞ்சையை இப்பொழுதே உனக்குத் தரும்படி தேவன் எனக்கு அதிகாரத்தை அளித்திருக்கிறார். நீ பத்து லட்சம் டாலர்களை கேட்டாலும், நீ அதைக் பெற்றுக் கொள்ள முடியும். அந்த ஊனமுற்ற சிறு பெண் எழுந்து நடக்க வேண்டும் என்று கேட்டால், அவள் அதைப் பெற்றுக்கொள்வாள்” என்றேன். அப்பொழுது அவள், “சகோதரன் பிரான்ஹாம், நான் என்ன கேட்பேன்?” என்றாள். 181 நான், “நீ விரும்புகிற எந்த காரியத்தையும் கேள். கர்த்தர் உரைக்கிறதாவது” என்றேன். ஓ, என்னே ஒரு உணர்வு! 182 அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். கிட்டத்தட்ட மரித்தோரிலிருந்து திரும்ப கொண்டு வரப்பட்டிருந்த தலை நரைத்த அவளுடைய வயோதிகத் தந்தை அங்கே அமர்ந்திருந்தார். அவளுடைய வயோதிகத் தாயார் சுகவீனமாய் அங்கு அமர்ந்து இருந்தார். அவளுடைய ஊனமுற்ற சிறிய சகோதரி, அங்கே அமர்ந்திருந்தாள். 183 ஆனால் அவளோ சரியானதாக இருந்ததைத் தெரிந்துகொண்டாள். அவளுக்கு பத்தொன்பது வயதிற்குட்பட்ட இரண்டு பையன்கள் அந்த பொறுப்பற்ற வயதில் இருந்தனர். அவளுடைய கணவரோ மகிமைக்கு சென்றுவிட்டிருந்தார்; அவள் ஒரு கிறிஸ்தவளாய் இருந்து, காத்துக்கொண்டிருந்தாள். ஆனால் அந்த பையன்கள் கிறிஸ்தவர்களாய் இருக்கவில்லை. எனவே அவள், “என்னுடைய இரண்டு பயன்களின் ஆத்துமாவைக் குறித்தே” என்றாள். தேவன் அவளுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. 184 அப்பொழுது நான், “கர்த்தர் உரைக்கிறதாவது, நீ அவர்களை பெற்றுக்கொள்வாய்” என்றேன். 185 இங்கே அவர்கள் விசுவாசத்துக்குள்ளாகி ஞானஸ்நானம்பண்ணப்ப்பட்டனர். அன்று இரவு அவர்கள் என்னிடத்தில், அந்தக் சிறு பையன் பாதம் கழுவும்போது, சகோதரன் நெவிலினுடைய தலையின் மீது தன்னுடைய கரங்களை வைத்து, அவன் பாதங்களைக் கழுவிக்கொண்டிருந்தபோது அவருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 186 அனேகமாக அந்த இரண்டு சிறு பையன்களும் இங்கே கூட்டத்தில் இந்த காலையில் எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அவர்கள் இருக்கிறார்களா, ஹேட்டி, அவர்கள் அங்கே உன்னோடு இருக்கிறார்களா? [சகோதரி ஹேட்டி, “அவர்கள் அங்கே பின்னால் இருக்கிறார்கள்” என்று கூறுகிறாள்.—ஆசி.] பின்னால், பின்னால். பையன்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அந்த இரண்டு பையன்கள் எங்கே? அதோ அங்கே அவர்கள், பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. நீங்கள் அங்கு இருக்கிறீர்கள். 187 இப்பொழுது, என்ன சம்பவித்தது? அதே காரியம், என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவளுக்கு சம்பவித்திருக்கும்…அவள் என்னக் கேட்டிருந்தாலும், அவள் அதைப் பெற்றிருந்திருப்பாள். அவள் அதை பெற்றிருக்க முடியும். 188 இப்பொழுது நான் அது சம்பவிப்பதைக் காண விரும்புகிறேன். அது செய்தியைப் பற்றிய ஜனங்களின் அணுகுமுறையாய் இருக்கப்போகிறது. அவள் எப்படி அதைக் கூறினாள் என்று பார்த்தீர்களா? அவள் சரியான காரியத்தைக் கூறினாள். நீங்கள் என்னக் கூறுகிறீர்களோ, அதுவே இதைச் செய்கிறது. நீங்கள் கூறுவது என்னவோ! 189 சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய அந்த ஸ்திரீ இயேசுவண்டை வந்தபோது, அவளைப் பாருங்கள். அவள், “ஆண்டவரே, என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள். தாவீதின் குமாரனே அவளை குணமாகும்” என்றாள். 190 அவரோ, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல” என்றார். 191 வுயூ! அவர் அதையே நம்மில் சிலரிடம் கூறியிருந்திருப்பாரானால் என்னவாகும்? நாமோ, “என்னை ஒரு நாய் என்று அழைப்பதா? ஊ, எப்படியிருந்தாலும், அவருக்கு ஒன்றுமேயில்லாததாயுள்ளதே! பெரிய சபை சரிதான். அவர் ஒரு பரிசுத்த உருளையேயன்றி வேறு ஏதும் இல்லை. அவர் ஒரு பெயல்செபூலேயல்லாமல் வேறொன்றும் இல்லை” என்று கூறுவோம். நாம் அந்த மனப்பான்மையை உடையவராய் இருப்போம். ஆனால் அவளுடைய மனப்பான்மை அவ்வாறில்லை. 192 அவள், “அது உண்மைதான், ஆண்டவரே. நீர் சரியாக சொன்னீர். ஆனால் பிள்ளைகளின் மேஜையின் கீழே உள்ள துணிக்கைகளை நாய்கள் சாப்பிட விருப்பமாயிருக்கின்றன” என்றாள். 193 அது அவரைத் தொட்டது. அவர், “இதைக் கூறுகிறதினாலே, பிசாசு உன்னுடைய மகளை விட்டு போய்விட்டது. இதைக் கூறுகிறதினாலே!” என்றார். 194 நண்பர்களே, இது உங்களுடைய மனப்பான்மையாயுள்ளது. அவர் அதைக் கூறவில்லையா? நண்பர்களே, நீங்கள் இதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள், என்னை விசுவாசிக்க வேண்டாம், நான் ஒரு மனிதன்; ஆனால் நான் உங்களிடத்தில் கூறிக்கொண்டிருக்கிறதை நீங்கள் விசுவாசியுங்கள், செய்தியை விசுவாசியுங்கள். நீங்கள் செய்தியாளனை விசுவாசிக்கவில்லையென்றாலும், செய்தியை விசுவாசியுங்கள். ஒரு மனிதன், ஒரு தந்தியோடு அங்கு அறைக்குள் நடந்து வந்தால், அது யார், அந்த மனிதன் எப்படி காணப்பட்டார் அல்லது அவர் யாராக இருந்தார், பெரியவரா அல்லது சிறியவரா என்பது முக்கியமல்ல, அந்த மனிதனை அல்ல, தந்தியில் என்ன உள்ளது என்று நீங்கள் விசுவாசியுங்கள். உங்களிடத்தில் சொல்லும்படி தேவன் என்னை அனுப்பினார். என்னிடத்தில் ஒரு செய்தி உண்டு. அவர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார் என்றும், அவர் இந்த காலை இங்கே இருக்கிறார் என்றும் உங்களிடத்திற்கு சொல்லும்படிக்கு தேவன் என்னை அனுப்பினார். அவர் இங்கே இருக்கிறார் என்பதை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் அவர் அதை நிரூபித்திருக்கிறார், நீங்கள் வரும்போது சரியான மனப்பான்மையில் நீங்கள் அதை எடுத்துக்கொள்வீர்களானால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சுகவீனத்திலிருந்து சுகமடைய முடியும். நாம் நம்பிடுவாய் என்று பாடுகையில், நீங்கள் அதைச் செய்யுங்கள். 195 இப்பொழுது ஜெபிக்கப்பட போகிறவர்கள், இங்கே வந்து இங்கே சுற்றிலுமுள்ள வரிசையில் நில்லுங்கள். இப்பொழுது, உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசித்தாலொழிய வர வேண்டாம். 196 விலையேறப்பெற்ற கர்த்தாவே, இதுவே வேளையாய் உள்ளது. நீர் இந்த ஜனங்களை சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இந்த எண்ணெயை பரிசுத்தப்படுத்தும். பிதாவே, உமக்கே மகிமையை எடுத்துக்கொள்ளும். நாங்கள் இவைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். 197 இங்கே இந்தப் பக்கத்தில் நின்று கொண்டிருக்க ஜனங்களை நாம் கேட்க முடியுமா என்று நான் எதிர்பார்க்கிறேன், அவர்கள் இங்கே ஒரு சிறு அறைக்கு செல்லக்கூடிய ஒரு வழியை உண்டாக்கக் கூடுமானால், நீங்கள் அவ்வாறு செய்ய முடிந்தால், நாம் ஜனங்களை பக்கத்தில் நிற்க வைக்கலாம். இங்கே இதனுடாக வந்து, அந்த வழியாக வெளியே போகலாம். ஆகையால் அவர்கள் எல்லோரும் இந்த வழியாக வந்து, வரிசையின் ஊடாக வந்து, அந்த வழியாக வெளியே செல்லும்படி ஒரே வரிசையாக்கிவிடலாம். 198 சகோதரன் நெவில், ஏதோக்காரியம் சம்பவிக்க வேண்டும். [சகோதரன் நெவில், “ஆமென். அது இப்போது சம்பவித்துக்கொண்டிருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இயேசு இங்கே இருக்கிறார். ஆம். அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய வல்லமையினால் சுகமாக்கப்படுகின்றனர்” என்று கூறுகிறார்.—ஆசி.] ஆமென். 199 (என்ன சொல்கிறீர்? சரி…பாருங்கள், இல்லை, அங்கே குறுக்கே இருக்கிறது. சகோதரன் நெவிலும் நானும், ஆம், நாங்கள் அவர்களுக்காக கடைசிவரை ஜெபிக்க போகிறோம். அதனால், அவர்களை இந்த வழியாகச் சுற்றி கொண்டு வர முடியாது, ஏனென்றால் நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் போய்…ஒரு நிமிடம்…?…) 200 இப்போது காத்திருக்கும் கூட்டத்தாரிடம் நான் கூறட்டும்: இது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது, நான் யார்…தேவனுடைய கிருபையினாலும் ஒத்தாசையினாலும், இதனைக் கொண்டே நான் ஜீவித்துள்ளேன், இதன் மூலமே மரிப்பேன். தேவனே என்னுடைய பயபக்திக்குரிய நியாயாதிபதியாய் இருக்கிறார், நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருக்கிறேன். இதற்கு வருகின்ற இந்த எல்லாக் காரியங்களையும், நான் பார்த்து விட்டேன். அங்கே இருந்த அந்த சிறிய மீன் உயிரோடு எழுப்பப்பட்டதிலிருந்து கூட, நீங்கள் அந்த சம்பவத்தை எப்போதாவது கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? அது சம்பவித்தபோது அங்கிருந்த இருவர், அங்கே பின்னால் அந்த மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள்; அது சம்பவித்தற்கு முன்தினமே கூறப்பட்டது. இப்பொழுது, இந்தக் காரியங்களை நான் எப்படி உங்களுக்குச் சொல்ல முடியும்? பாருங்கள், இந்த இரவுகளில் ஒன்றில், நான் எதிர் சமநிலை என்பதன் பேரில் பிரசங்கிக்க விரும்புகிறேன். மனிதன் உங்களுக்கு ஏதோ காரியத்தைச் சொல்ல முடியும், அதே போன்று தொடர்ந்து கட்டியெழுப்ப முடியும், ஆனால் அதை சமநிலைப்படுத்த எந்த வேதவாக்கியமும் இல்லையென்றால், அது முடிவிலே கீழே விழுந்துவிடும். இந்த பகுத்தறிதல், இந்த தரிசனங்கள் மற்றும் நான் உங்களுக்கு கூறியுள்ள காரியங்கள் குறித்தவை, அது சத்தியமாயில்லாதிருந்திருந்தால்; முதலாவது காரியம், இதை ஆதரிக்க ஒரு வேதம் உண்டு, நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருக்கிறேன் என்பதை நிரூபிக்க பரிசுத்த ஆவியானவர் இருந்தார். 201 இப்பொழுது, எனக்கு முன்பாக இருக்கிற ஒவ்வொரு விமர்சகரினூடாக, நான் கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களாக ஊழியக்களத்திலே இருந்து வருகிறேன். படித்தவர், புத்திசாலி, மற்ற ஒவ்வொரு காரியமும், ஒருமுறை கூட அவர்களால் முடியவில்லை… 202 அப்பொழுது அவர்கள் என்ன கூறினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அதை இங்கே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள், “கூட்டத்தில் உள்ள ஜனங்கள் சுற்றிலும் போய், ஜனங்களிடத்தில் பேசுவார்கள்” என்கிறார்கள். முதலாவது அங்கே இவ்வாறு செய்யப்படும்படி என்னுடைய சபையிலிருந்து செல்லுகிற ஜனங்களாய் அது இருந்தது என்று கூறினார்கள். அதன்பின்னர் அவர்கள் அதை புரிந்துகொள்ள முடியவில்லை, அவர்களில் அனேகர் உள்ளனர். 203 அடுத்த காரியமாக, “அது என்னோடு செல்லுகிற, சகோதர்களை போன்றதாக இருக்கும்” என்றும், “அவர்கள் பின்னால் அங்கே நின்று, ‘இந்த மனிதனால் அவருடைய காதுகளில் கேட்க முடிகிறது’” என்று அவர்கள் கூறினார்கள். 204 அதன்பின்னர் அவர்கள், “பில்லி பால், பில்லி பால் வந்து—அங்கே மேலே போய் அட்டையில் உள்ளதை வாசிப்பார் என்றும், ஜனங்கள் என்ன சொல்லுகிறார்களோ, அதாவது அவர்களுடைய காதுகளில் ஏதாவது கோளாறு இருக்குமானால், அப்பொழுது ‘அவர்களுடைய காதுகள்’ அல்லது ‘அவர்களுடைய வயிறு’” என்று அவர் கூறுவார் என்று கூறினர். 205 அப்படியானால் ஜெப அட்டைகள் இல்லாமல் அங்கே வெளியே இருப்பவர்களைக் குறித்து எப்படி? உலகத்தில் நடக்கும் இந்த காரியங்களை எப்படி பிழையின்றி முன்னறிவிக்க முடியும்? அது எப்படி அந்த விதமாக இருக்க முடியும்? அது அப்படி இருக்க முடியாது. தங்களுடைய சரியான சிந்தையில் உள்ள எவரும் அதை அறிந்திருக்கிறார்கள். 206 பிலிப்பு சென்று நாத்தான்வேலை அழைத்து வந்தபோதும், அவர்கள் இயேசுவைக் குறித்து அதேக் காரியத்தைக் கூறினார்கள். “அவன் இயேசுவின் ஒரு சிநேகிதனாயிருந்தான்.” அவர்கள், “நிச்சயமாகவே, அவன் அதைக் குறித்த எல்லாவற்றையும் இயேசுவிடம் கூறவிட்டான். அவன் அவருக்கு பின்னே சென்று கொண்டிருக்கிறான்” என்றனர். 207 அப்பொழுது அந்த சீஷர்கள் கூறினர், இல்லை அந்தப் பெரிய சபையின் சீஷர்கள், “இந்த மனிதன் பெயல்செபூல். அவன் பெயல்செபூல். அவன் ஒரு குறி சொல்லுபவன்” என்றனர். 208 இயேசு, “நான் அதற்காக உங்களை மன்னித்துவிடுவேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இதே காரியத்தை செய்யும்படி ஒரு நாள் வருவார், அதற்கு விரோதமாக பேசப்படும் ஒரு வார்த்தையும் மன்னிக்கப்படாது” என்றார். இப்பொழுது… 209 எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் அறிந்த மட்டில், ஜனங்களாகிய உங்களோடு நான் நேர்மையாக இருந்து வந்திருக்கிறேன். ஓ, சிறிய வேத சாஸ்திரம் மற்றுமுள்ள காரியங்களில் நீங்கள் வைத்துள்ள சில நம்பிக்கைகளுக்கு நான் முரண்பட்டிருந்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யக் காரணம், பவுல், “வானத்திலிருந்து வருகிற தூதனாயிருந்தாலும், வேதம் கூறுவதைத் தவிர வேறெந்த காரியத்தையாவது பிரசங்கித்தால்,” மேலும் அவன் என்ன கற்பித்துள்ளான், “அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். 210 ஆகையால், வேதாகமம் என்ன கூறியுள்ளதோ அதையே நான் பின்பற்ற வேண்டும். வேதம், “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூறியிருந்தால்,” நான் அதை விசுவாசிக்கிறேன். வேதம் என்னவெல்லாம் கூறியுள்ளதோ, அதை அப்படியே சரியாக நான் விசுவாசிக்கிறேன். நான் அதை அந்தவிதமாகவே கூறுகிறேன். நான் எந்த கல்வி அறிவையும் பெற்றிருக்கவில்லை, எந்த பயிற்சியையும் பெற்றிருக்கவில்லை. நான் பரிசுத்த ஆவிக்கும் வேதாகமத்திற்கும் செவி கொடுத்தேன். ஆகையால் முப்பத்தியொரு வருடங்களாக, இந்த ஈஸ்டர் காலை வரையில், அவர் என்னை ஒருபோதும் கைவிட்டதேயில்லை. 211 அந்த வரப்போகும் ஊழியத்தை குறித்து பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறினார் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன், கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக, நான் எங்கும் சபைகளுக்கு சொல்லி வருகிறேன். சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடைய நியாதிபதியாயிருக்கிறார், இங்கே இந்த சேலத்தின் பக்கத்தில், அணில்களே இல்லாத இடத்தில் அணில்கள் தோன்றின. சார்லியுடன் அங்கே கீழே, அங்கே பின்னால் நின்று கொண்டிருந்தபோது, இங்கே கென்டக்கியில் அவைகள் ஏராளமாய் இருந்தன; அது எங்கே இருக்கும் என்று கூறப்பட்டு, அணில்கள் இல்லாத இடத்தில் அவைகள் தோன்றின. அங்கே டோனியும் மற்றவர்களும், பாங்ஸும் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அது சரியாக அங்கே இருந்தது. அது திரும்பவும், பேசப்பட்ட முதல் மானிடர், அங்கே அமர்ந்து கொண்டிருந்த பெண்மணியாயிருந்தது, அதோ அது உள்ளது. மற்றொரு காலை அங்கே, நான் சுகவீனமான நிலையில் இருந்த அந்த தொண்டையோடு இருந்தபோது, எனக்கு முன்பாகவே இயேசுவானவர் நிற்பதை நான் கண்டேன், அப்பொழுது அவர் என்னிடத்தில் ஊழியமானது ஏற்கனவே எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 212 இப்பொழுது என்ன சம்பவிக்க வேண்டும், எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு காரியம், நான் மற்றவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதன் பேரில் அடியெடுத்து வைக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரே வழி அதைச் செய்வதாகும். அது இப்போது தெரியப்படுவதாக. இந்த காலையில் யோபு கூறினதுபோல, இது ஒரு இரும்பு பேனாவினால், ஒரு கன்மலையின்மேல் பொறிக்கப்படுவதாக. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்த ஒரே காரியம் முன்னோக்கி அடி எடுத்து வைப்பதாகும். அவர் என்னிடத்தில் கூறினார். தேவனே என்னுடைய நியாயாதிபதி, அவரே என்னிடத்தில் கூறினார். நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருக்கிறேன். தேவன் உறுதி செய்து உங்களுக்கு கூறியிருந்தால், இங்குள்ள எவருமே ஒருமுறை கூட எந்த ஒரு காரியமும் தவறாக இருந்து வந்துள்ளது என்று அவர்களுடைய கரத்தை வைத்து சுட்டிக் காண்பிக்க முடியாது. அப்படியானால் இதுவும் சரியே. இதுவும் சரியே. 213 இப்பொழுது நான் இங்கிருந்து சென்று வரிசையில் முடிவிலே நிற்க்கும்போது. ஜனங்களை அபிஷேகிப்பதற்கு, எனக்கு மூத்தவரான, அங்கே சகோதரன் நெவில், ஒரு தேவ பக்தியுள்ள மனிதனாய், இங்கே நம்முடைய போதகராய் இருக்கிறார். நான் ஜனங்களின் மீது கைகளை வைக்க போகிறேன், ஏனென்றால் ஈஸ்டருக்குப் பிறகு இயேசுவினுடைய கட்டளை, “போய் வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்பதாயிருந்தது. 214 வரிசையினூடாக அவர் என்னிடத்தில் என்னக் கூறப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. நான் அந்த மேம்பட்ட அபிஷேகத்திற்காக உணரும்படி முயற்சிக்க போகிறேன். என்ன சம்பவிக்கும் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது. அது என்னவாயிருந்தாலும், அவர் எனக்குக் கூறுகிற விதமாகவே நான் செய்வேன். 215 இப்பொழுது வாருங்கள், முழு இருதயத்தோடு வாருங்கள். அவர் உங்களை கடிந்துகொண்டாலும், அவர் உங்களிடத்தில் ஒன்றும் கூறவில்லையென்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை, பாருங்கள், அது என்னவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டே செல்லுங்கள். காரணம், கிரியை செய்து முடிக்கப்பட்டு விட்டபடியால், அது நீங்கள் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக உள்ளது. 216 இப்பொழுது, சகோதரனே, அந்தக் காலோடு, நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர், தொலைபேசியின் மூலம், அந்த வயிற்று தொல்லையை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடக் கூடுமானால், அவர் அந்த காலின் நிலமையை நிச்சயமாகவே உங்களி டத்திலிருந்து இந்தக் காலை எடுத்துப்போடக் கூடுமானால் பாருங்கள். இப்போது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்கள். 217 இருதயக் கோளாறோடுள்ள அந்தக் குழந்தையோடுள்ள பெண்மணியே, இனி சந்தேகப்படாதே. விசுவாசி! விசுவாசி! 218 இப்பொழுது சபையிலுள்ள ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருக்கும்படி நான் விரும்புகிறேன். நான் கீழே ஜெபிக்கப்போகிறேன். நீங்கள் யாவரும் இப்பொழுது தொடர்ந்து ஜெபத்தில் இருங்கள். நான் இந்த ஜெப வரிசையை கொண்டு வருகையில், என்னுடைய கரங்களை அங்கே மேல் வைத்து ஒரு ஆசிர்வாதத்தை கூறி வேண்டிக்கொள்வேன். 219 மேலும், நினைவிருக்கட்டும், உங்களில் எவரேனும் அறிக்கை செய்யப்படாத எந்த பாவத்தையும் உடையவராயிருந்தால், அந்த அறிக்கை செய்யப்படாத பாவத்தோடு உங்களை தேவன் ஒருபோதும் சுகப்படுத்த மாட்டார் என்பது உங்களுக்கு தெரிந்திருப்பதாக. இங்கே வரிசையுடன் வருவதற்கு முன்பே, அதை சரி செய்யுங்கள், ஏனென்றால் அது உங்களை மோசமாக்கிவிடலாம். புரிகிறதா? 220 இப்பொழுது இது பகுத்தறிதல் அல்ல. பகுத்தறிதல், நான் அந்தக் காரியங்களை வெளியே கண்டறிகிறேன். ஆனால், அது பகுத்தறிதல் அல்ல, நான் ஒரு புதிய ஊழியத்திற்காக தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் யாவரும் நன்கு புரிந்து கொள்கிறீர்களா? சரி. இப்போது விசுவாசியுங்கள். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில் இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. 221 பிதாவாகிய தேவனே, என்னுடைய கைரேகைகள் இந்த பிரசங்க பீடத்தின் மேல், அப்படியே பல மணி நேரங்களாக இருக்கின்றன, இப்போது கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அல்லது அதற்கு மேலாக நான் இங்கு நின்றுகொண்டு உலகம் முழுவதும் பிரசங்கித்து வந்திருக்கிறேன். மேலும் நான் பிரசங்கித்துள்ள சுவிசேஷத்தை நீர் உறுதிப்படுத்தியிருக்கிறீர், ஏனென்றால் அந்த செய்தி உம்மிடத்திலிருந்து வந்தது. நான் எந்த வேதபாட பள்ளிகளுக்கும் ஒருபோதும் சென்றதில்லை, உம்மைத் தவிர வேறு எந்த இடத்திலும் ஒருபோதும் கலந்தாலோசித்ததுமில்லை, உம்முடைய வார்த்தையை வாசித்து ஆவியானவர் என்ன செய்யச் சொல்வார் என்று காணும்படிக்கே காத்திருக்கிறேன். 222 இப்பொழுதும், கர்த்தாவே, மாற்கு 11: 23-ன் இந்த ஊழியத்தை குறித்து நீர் அறிந்திருக்கிறீர், வேளையானது சமீபித்துவிட்டது என்பதையும் நீர் அறிவீர், நான் அந்த அணில்களைக் குறித்தும், சகோதரி மற்றும் அவளுடைய பையன்களைக் குறித்தும் உண்மையாக கூறியுள்ளதை அறிந்திருக்கிறீர். இப்பொழுதும், பிதாவே, அன்றொரு காலை, அங்கே படுக்கையிலே எனக்கு அந்த தரிசனம் வந்ததை அறிந்திருக்கிறீர். நான் அந்த வேதாகமத்தையும், அதன்பின்னர் சிலுவையையும், அதன்பின்னர் உம்மையும் கண்டேன். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னுடைய மனதிற்குள்ளாக வெளிப்படுத்தப்பட்டது, ஏனென்றால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 223 இப்பொழுது, கர்த்தாவே, இந்த ஈஸ்டர் காலையிலே இங்கே நிற்கும்படியாக, என் சபையில் நான் இந்தக் காலை முன்நோக்கிச் சென்று, ஜனங்கள் நிமித்தமாக, அதிக வல்லமையுள்ள, அதிக வல்லமையுள்ள, ஒரு புதிய வரத்தை நீர் எனக்கு எழுப்புவீர் என்று ஜெபிக்கிறேன். என்னுடைய இரட்சிப்பின் காரணமாய் அல்ல; ஏனென்றால் கர்த்தாவே, நீர் ஏற்கனவே என்னை இரட்சித்திருக்கிறீர். சுயத்திற்காக அல்ல; உம்மை அறிந்துகொள்வதற்கு, நான் எல்லா பெரிய காரியங்களையும் புறக்கணித்திருக்கிறேன். அங்கே வெளியே அந்த பெரிய ஆலயத்தில், நீர் என்னிடத்தில் அன்றொரு நாள், “நான் உன்னுடைய பங்காயிருக்கிறேன்” என்று கூறினதுபோல. இப்பொழுது, கர்த்தாவே, உம்முடைய ஆவி எனக்குள்ளாக வந்து, நான் உம்மிடத்தில் தயை கண்டடையும்படியாய், கர்த்தாவே நான் உம்முடைய பங்காக இருக்கட்டும். நான் என்னுடைய கரங்களை இந்த விலையேறப்பெற்ற, அவதியுற்றுக் கொண்டிருக்கிற ஜனங்கள் மேல் வைக்கையில், கர்த்தாவே, உம்முடைய ஆவியானது, மீதமுள்ள கிரியையை செய்வதாக. கர்த்தாவே, எனக்குச் செய்யத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். 224 என் கட்டளையை நான் நினைவு கூருகிறேன், நான் “சுகவீனமுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்கும்படி பிறந்தேன். அவர்களை விசுவாசிக்கும்படிச் செய்ய, உத்தமமாயிருக்க, நான் ஜெபிக்கும்போது.” கர்த்தாவே, நான்…இதற்கு மேல் எப்படி உத்தமமாயிருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான்—நான்…அவர்கள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள், கர்த்தாவே. நானும்—நானும் அவதியுற்றிருக்கிறேன். தயவுகூர்ந்து, அன்புள்ள தேவனே, அவர்கள் ஒவ்வொருவரும் சுகம டைய அருள்புரியும். 225 மோசே சிவந்த சமுத்திரத்தை நோக்கி அடியெடுத்து வைத்து சென்றதுபோல, விசுவாசத்தினாலே, கர்த்தாவே, நான் இப்பொழுது முன்நோக்கிச் செல்கிறேன். நான் இந்த புனிதமான பிரசங்க பீடத்திலிருந்து அடியெடுத்து வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த ஜெப வரிசைக்கு கீழே செல்கிறேன். அந்த அணில்களை எனக்குத் தந்த தேவன், சகோதரி ஹேட்டிக்கு அந்த வார்த்தைகளைத் தந்த தேவன், அவர்களிடத்தில் பேசும்படி எனக்கு தந்த தேவன், அவர் என்னோடு செல்வாராக. நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்கிறேன். [சகோதரன் பிரான்ஹாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஒலிப்பெருக்கியை விட்டுச் செல்கிறார், அவருடைய அநேக வார்த்தைகள் புரிந்துகொள்ள முடியாதவைகளாயுள்ளன—ஆசி.] 226 சாத்தானே, அந்த குழந்தையை விட்டுப் போகும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான்…உன்னைக் கடிந்துகொள்கிறேன். அதை விட்டுப் போ, இந்த குழந்தையை விட்டு வெளியே வா; போ, அந்த குழந்தை சுகமாயிருப்பதாக. 227 நான் என்னுடைய சகோதரன் மீது என்னுடைய கரங்களை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய சரீரத்தின் துன்பத்தைக் கடிந்துகொள்கிறேன். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய வேண்டுதல் அவளுக்கு கொடுக்கப்படுவதாக. 228 கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சகோதரி ரூத்துக்கு அவளுடைய சுகமளித்தலைத் தருவீராக. ஆமென். 229 நான் அந்த குழந்தைக்காக ஜெபிப்பேன். ஆனால் நான்—நான் அந்த பிரசங்கப் பீடத்திலிருந்து கீழே வந்து…நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்? [அந்த சகோதரி, “பூளூமிங்டன்,” என்று கூறுகிறார்—ஆசி.] பிளூமிங்டன், இந்தியானாவா? இந்தக் குழந்தையைக் குறித்த ஒரு கடிதத்தை எனக்கு எழுது. இப்பொழுது இங்கே வயிற்றில் உள்ள வீக்கம் யாவும் போய்விடும். பெண்மணியே, அது உண்மை என்று, நீங்கள் விசுவாசிக்கப்போகிறீர்களா? [“அது உண்மையென்று நான் விசுவாசிக்கிறேன்.”] 230 ஆகையால், பிதாவே, நான் என் கரங்களை இந்த குழந்தையின் மேல்…வைத்து, இந்தப் பிசாசைக் கடிந்துகொள்கிறேன். அந்தக் குழந்தையைவிட்டுப் புறப்பட்டுப் போ. மேலும்…?…அது இப்போது இயல்பாகி, அந்தக் குழந்தை சுகமடைவதாக. ஓரிரு நாட்களில், நீ எனக்கு ஒரு கடிதம் எழுது. 231 அந்த கோணலான பார்வை கொண்ட சிறிய குழந்தை அங்கே படுத்திருப்பதை பார்த்தீர்களா? உங்களுக்கு இனி சந்தேகமில்லையென்றால், நீங்கள் அந்த குழந்தையை திரும்ப கொண்டுவந்து, அது இயல்பாகவும், சுகமாயுமிருப்பதைக் காண்பியுங்கள். 232 நான் கரங்களை இந்த சகோதரியின் மேல் வைக்கிறேன். அவள் சிரோபேனிக்கியா ஸ்திரீயின் மனப்பான்மையைப் பெற்றுக்கொள்வாளாக. அவள் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தில் சுகமடைவாளாக…?… இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இருதயம் நன்றாக இருப்பதாக. 233 நான் இந்த வார்த்தைகளைப் பேசுகிறேன். அது நன்றாக இருக்க வேண்டும். அது வேறு எந்தக் காரியமாகவும் இருக்க முடியாது. இயேசு, “நீ விசுவாசித்தால், என்னால் முடியும்” என்றார். அவர் ஒரு சமயம் ஆட்டுக்கடாவைத் தோன்றப்பண்ணினது போல, இப்பொழுது, அவரால் ஒரு அணிலை அந்த விதமாக சரியாக தோன்றப்பண்ணக் கூடுமானால், அவரால் அந்த இருதயம் இயல்பாகவும் நன்றாகவும் இருக்கும்படி செய்ய முடியும். அது இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இருதயம் நன்றாக இருப்பதாக. அதை அருளும். 234 இப்பொழுது, அது எளிமையாய் இருக்கவில்லையா? அது எளிமையாக உள்ளது. தேவன் மிகவும் எளிமையாக இருக்கிறார், எனவே அது நம்மேல் கடந்து செல்கிறது. இப்பொழுது இனி அதைக் குறித்து சிந்திக்கக் கூடாதபடி நீங்கள் போதிய எளிமையுள்ளவர்களாய் இருங்கள். அது சரியாயிருக்கும். 235 கர்த்தாவே, எங்களுடைய சகோதரி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாயிருப்பாளாக. ஆமென். சகோதரியே…?… 236 கர்த்தாவே, இப்போது நான் இந்த வார்த்தைகளைக் கூறியுள்ளேன், என்னால் ஜனங்களுக்கு முன்பாக நேர்மையாக அறிக்கையிட முடியும். நான் அவர்களிடத்தில், “நீங்கள் இந்த மலையைப் பார்த்து ‘பெயர்ந்து போ’ என்று சொல்லி, சந்தேகப்படாமலிருந்தால், நீங்கள் கூறியுள்ளதை பெற்றுக்கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த இன்னலும், உங்களுக்கு உண்டாயிருக்கிற உங்களுடைய எல்லா தொல்லைகளும் அகன்று போவதாக. இப்போது சந்தேகப்படாதீர்கள். இப்பொழுது அவருக்கு நெருக்கமான செல்லுங்கள். 237 கர்த்தாவே, இந்த பயங்கரமான தலைவலியோடு உள்ள இந்த சிறியவர் மீது நான் என்னுடைய கரங்களை வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது சுகமடைவதாக. ஆமென். 238 கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த மலை அவனிடத்திலிருந்து பெயர்ந்து போவதாக, அது சுகமடைவதாக. எங்களுடைய சகோதரன் இப்பொழுது முழுமையாக சுகமடைவாராக…?…ஆமென். 239 செவிடு மற்றும் ஊமை; காதுகேளாத ஊமை. கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! நான் நாளுக்கு நாள், வருடாவருடம் பிரசங்கித்துள்ளேன், நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும், விசுவாசம் வந்து உங்களோடு தொடர்பு கொள்வதை ஒருபோதும் கண்டதில்லை, ஆனால் ஏதோக்காரியம் சம்பவித்திருந்ததே! இப்பொழுது, அவருக்கு அவருடைய காதில் செவிட்டுத்தன்மையும், மற்றும் வயிற்றில் பிளவும் ஏற்பட்டு உள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் சுகமடையட்டும். ஆமென். இப்பொழுது, சந்தேகப்படாதீர்கள். 240 கர்த்தாவே, அவருடைய சரீரத்தில் இன்னல்களை நீர் அறிந்திருக்கிறீர். ஒரு உத்தம இருதயத்தோடு, அவர் மீது கரங்களை வைப்பதினால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் சுகமடையட்டும். ஆமென். 241 மரணம் ஒரு வாசலிலே கிடக்க, அதற்கடுத்து விசுவாசம் உள்ளது. தேவனே, அந்தக் கல்லை உருட்டிவிட விசுவாசம் மேற்கொள்ளட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், புற்றுநோய் அவளை விட்டு நீங்குவதாக. 242 கர்த்தாவே, அவன் சுகமடைவானாக. நான் கரங்களை அவன் மீது வைக்கிறேன். செய்தியானது சுவர்களினூடாக இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவன் சுகமடைவானாக. 243 பிதாவாகிய தேவனே, நான் கரங்களை என்னுடைய சகோதரன் மீது வைக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆவியும் வல்லமையும், அவனுக்கு அவனுடைய வேண்டுகோளைக் கொடுக்கட்டும். அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இருக்கட்டும். ஆமென். அது முடிந்துவிட்டது. அதை இப்பொழுது சிந்தேகிக்காதீர்கள். 244 கர்த்தாவே, எங்களுடைய சகோதரனுடைய வாஞ்சை, அவன் மீதுள்ள இந்த நிபந்தனையோடு, உம்முடைய பிரசன்னத்திற்குள் வர வேண்டும் என்பதாக உள்ளது. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவன் கேட்டுக் கொண்டிருக்கிறதை அவன் பெற்றுக்கொள்ளட்டும். ஆமென். 245 என்ன ஒரு மகத்தான காரியம்! பரிசுத்த ஆவி இந்த குழந்தையின் மீது வரட்டும், தேவனுடைய மகிமைக்காக அவர்கள் அவனை அவனுடைய…?…கொண்டு வருவார்களாக. தேவனுடைய இராஜ்யத்தின் நிமித்தமாக, அவன் அதைப் பெற்றுக்கொள்வானாக. ஆமென். 246 பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது அவ்வண்ணமே இருப்பதாக, அதாவது இயேசுவின் நாமத்தில், எங்களுடைய சகோதரி குணமடைந்து, அவளுடைய வேண்டுகோள் அருளப்படுவதாக. ஆமென். 247 அது செய்யப்படுவதாக. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள். அதிலிருந்து…?…உங்களைத் தடுக்க ஒரு வழியுமே இல்லை. நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமே! நீங்கள் அதை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும், ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். நீங்கள் அதற்கருகில் நிற்கிறீர்கள். அங்கே அந்த சிறிய மேலோட்டை உடைத்தெறியுங்கள். அப்படியே சொல்லுங்கள்…?… 248 பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரியினுடைய வேண்டுகோளை அருளும். ஆமென். 249 பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரியின் வேண்டுகோளை அருளும். அவள் சுகமடைவாளாக. ஆமென். 250 அவர் ஏழு முறை நேரடியாக, ஒரு அணிலை உருவாக்க முடியும். அந்தப் பெண்மணி கேட்டுக்கொண்ட எந்த காரியமாயிருந்தாலும் அவர் அவளுக்கு அதைக் கொடுப்பார்; அவர் அதை உங்களுக்கும் கொடுப்பார்…?… 251 கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரியின் வேண்டுகோள் அருளப்படுவதாக. அது உம்முடைய வார்த்தையாயுள்ளது. உமக்கு நன்றி. பிதாவே, இயேசு கிறிஸ்துவினூடாக, அது அவளுக்கு அருளப்படுவதாக. ஆமென். 252 உங்களுடைய அன்பார்ந்தவர்களா? பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இவைகளை அருளும்…?… 253 கர்த்தாவே, இந்த சிறிய யூத ஸ்திரீ…நீர் ஆபிரகாமின் தேவனாயிருக்கிறீர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இதை, அவளுடைய வேண்டுகோளை அருளும். அது அப்படியே இருப்பதாக! 254 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பரலோகத்தின் தேவன், அவளுடைய வேண்டுகோளை அருள்வாராக. ஆமென். 255 இந்தக் குட்டிப் பெண். நீ அங்கே மேடையின் மேல் வந்தபோது, தேவன் உன்னுடைய வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றையும் என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் அந்த பதட்டத்தை உன்னிடத்திலிருந்து எடுத்துப் போடுவார். 256 கர்த்தாவே, இந்தப் பெண்ணிடத்திலுள்ள அந்த பதட்டத்தை நான் கடிந்துகொள்கிறேன். அது இந்த வேளையில் அவளை விட்டு நீங்கி அவள் இங்கிருந்து மிகவும் சந்தோஷமாய் நடந்து செல்வாளாக. அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இருக்கும். 257 நாங்கள் நினைவுகூருகிற உயிர்த்தெழுதலில், உம்முடைய குமாரன், இயேசுவை, உயிரோடெழுப்பின, பரலோகத்தின் தேவன், அவள் இதை இன்றைக்கு…?…இயேசுவின் நாமத்தில் பெரிதாய் கொண்டாடுவாளாக. ஆமென். 258 தேவனுடைய குமாரனாகிய, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், நான் கரங்களை என்னுடைய சகோதரியின் மேல் வைத்து, இயேசுவின் நாமத்தில் இப்பொழுதே அவள் சுகமடைவாளாக என்று வேண்டிக் கொள்கிறேன். 259 தேவ குமாரனாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்களுடைய சகோதரி சுகமடைவாளாக. ஆமென். இது அவளை தடுக்க முடியாது. அது வெளியேறத்தான் வேண்டும். போ, இது வெளியேறத்தான் வேண்டும். 260 கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்களுடைய சகோதரி சுகமடைவாளாக. ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த, என்னுடைய சகோதரியை சுகப்படுத்துகிறேன். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் என்னுடைய சகோதரியை சுகப்படுத்துகிறேன். ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் என்னுடைய சகோதரியை சுகப்படுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த, என்னுடைய சகோதரியை சுகப்படுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அவளுக்கு அவளுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். ஆமென். 261 கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த எளிய தாயாருக்கு அவளுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அவளுக்கு அவளுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அவளுக்கு அவளுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். 262 சாத்தானே, நான் உன்னை வெளியே துரத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த ஸ்திரீயை விட்டுப் போ. 263 நீ ஒரு நீண்ட காலமாக கட்டப்பட்டிருந்தாய். நீ இப்பொழுது விடுதலையாயிருக்கிறாய். நீங்கள் சுகமடைய போகிறீர்கள். அப்படியானால், அது இப்போது சரியாயிருக்கும். இப்பொழுதே அதை விசுவாசியுங்கள். 264 தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், முடமாகியிருக்கிற, இந்த சகோதரிக்கு, நான் அவளுடைய சுகமளித்தலை அளிக்கிறேன். ஆமென். 265 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த சகோதரிக்கு, அவளுடைய சுகமளித்தலை அளிக்கிறேன். ஆமென். 266 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சகோதரியே, நான் உனக்கு உன்னுடைய சுகமளித்தலை அளிக்கிறேன். ஆமென். அது அவ்வண்ணமே இருப்பதாக! 267 நான் ஒரு தவறை செய்து கொண்டிருக்கவில்லை என்று நான் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். விசுவாசத்தினால் இதை அருளும். அது அவ்வண்ணமே இருப்பதாக! 268 இருதயக் கோளாறை சுகப்படுத்தவுங் கூட தேவன் உங்களுக்கு பெலனைக் கொடுக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் சற்று முன்பு கூறின அந்த சம்பவத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய முழு இருதயத்தோடுமா? அப்படியானால் நான் உங்களுக்கு உங்களுடைய சுகமளித்தலை அளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் உங்களுக்கு உங்களுடைய சுகமளித்தலை அளிக்கிறேன். 269 இங்கே சற்று முன்னர் திரும்பிச் சென்ற இந்த பெண்மணியின் பெயர் என்ன? நீங்கள் இங்கு எங்காவது வசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறாள்.—ஆசி.] நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் நினைவுகூருங்களே! நான் இங்கே நின்றுகொண்டிருப்பதுபோல அது அவ்வளவு உண்மையானது. 270 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, இதை, அவளுடைய சுகமளித்தலை அருளும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 271 பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலை அவள் பெற்றுக்கொள்வாளாக. ஆமென்! 272 நான்—நான்—நான் உனக்குக் கூறுகிறேன்…நான்—நான்—நான்…தேவனுடைய கிருபையினால், ஒரு தெய்வீக வரத்தின் மூலமாக, நான் உன்னுடைய சுகமளித்தலை உனக்கு அளிக்கிறேன்! அந்தப் பிசாசையும் கூடத் துரத்துகிறேன். 273 சகோதரி ரோஸ் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஓ கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, கர்த்தாவே, இந்த சகோதரி ரோஸ் ஆஸ்டினுக்கு இந்த சுகமளித்தலை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிப்பீராக. ஆமென். சகோதரி ரோஸ், அதுதான் இது, போய் இப்பொழுதே விசுவாசியுங்கள். 274 கர்த்தாவே, எங்களுடைய சகோதரிக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய சுகமளித்தலைத் தாரும். ஆமென்…?… 275 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதனுடைய ஒவ்வொரு துணுக்கையும் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நான் உங்களுக்கு, இயேசுவின் நாமத்தில், உங்களுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். தேவன் அவளை சுகப்படுத்துவார். 276 அது அவ்வண்ணமே இருப்பதாக, கர்த்தாவே, அதாவது அவளுடைய சகோதரன் சரீரப்பிரகாரமாகவும், ஆவிக்குரியப்பிரகாரமாகவும் சுகமடைவானாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்! இது அந்த வேளையாயிருப்பதாக…?… 277 அவள் மருத்துவருக்கு அல்லது மருத்துவ விஞ்ஞானத்திலிருந்து எந்த குணப்படுதலுக்கும் பரிபூரண நம்பிக்கையற்ற வளாயிருக்கும்போது, கர்த்தாவே, நான் கரங்களை அவள் மீது வைக்கிறேன். ஆனால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பதிலிருந்து அல்ல. இயேசுவின் நாமத்தில், அவள் சுகமடைவாளாக. ஆமென். …?… 278 கர்த்தாவே, எங்களுடைய சகோதரிக்கு தாரும், அவளுடைய வேண்டுகோளைக் கூர்ந்து கேட்டு, அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் கவனித்துக் கேளும். அது இராஜ்யத்தின் நிமித்தமாக இருப்பதாக. இயேசுவின் நாமத்தில், நீர் அதை அவளுக்கு அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். [ஒரு சகோதரி சகோதரன் பிரான்ஹாமினிடத்தில் பேசுகிறாள்—ஆசி.]…?… 279 கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், அந்தத் தாய் தன்னுடைய குழந்தைக்காக கதறுவதைக் கேட்டு, நான் இதைச் செய்த அந்த பிசாசைக் கடிந்துகொள்கிறேன். 280 இந்த ஸ்திரீயினுடைய விசுவாச அறிக்கையின் பேரில் நான் இந்த பிசாசைத் துரத்துகிறேன். நீ இந்தக் குழந்தையை முடமாக்க முடியாது. இயேசுவின் நாமத்தில் சுகமடைவாயாக. ஆமென். சகோதரியே, அவள் சற்றுமுன் சுகமாக்கப்பட்டிருக்கிறாள். அதை ஒரு இம்மியும், சந்தேகப்பட வேண்டாம். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உங்களுடைய குழந்தையா? அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வானாக! 281 நீங்கள் இந்த குழந்தையைக் எங்காவது அழைத்துச் சென்று, ஒரு சில நிமிடங்கள் அதனிடத்தில் கேட்கமாட்டீர்களா. இந்த குழந்தைக்கு ஏதோக் காரியம் சம்பவித்துள்ளது என்று நான் நம்புகிறேன். நீ அதை பெற்றுக் கொள்வாய். நீ அதை விசுவாசிக்கிறாயா? 282 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களுடைய சகோதரன் அவருடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்வாராக. 283 கர்த்தாவே, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமை அவனுடைய சரீரத்தின் இன்னலைக் கடிந்துகொண்டு, பரிசுத்த ஆவியினால் அவனை நிரப்புவதாக. இதுவே அந்த வேளையும் நேரமுமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அதை அவனுக்கு அளிக்கிறேன். ஆமென். 284 நீரழிவு போய்விட்டது. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு காலமாக இன்னல்பட்டு வந்தீர்கள்…?…உங்களுடைய ஜீவியம் முழுவதும். கிறிஸ்து உங்களை குணமாக்கி இந்த துன்பத்திலிருந்து உங்களை விடுவிப்பார் என்றும்; உங்களை இயல்பு நிலைக்குள்ளாக்குவார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 285 உங்களுடைய குழந்தையா? உங்களுடைய—உங்களுடைய பாதம். நீங்கள் தனியாக வந்துள்ளீர்களா? எனக்கு, எனக்கு—எனக்குள்ளாக வலிமை இருந்திருந்தால், பாருங்கள்! ஆனால் அதற்கான விசுவாசத்தைப் பெற தேவன் எனக்கு உதவி செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் எனக்குள்ளாக இருக்கிற வல்லமையில் ஒவ்வொரு காரியத்தையும் செய்வேன். நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? அந்த அணில்களைக் குறித்த சம்பவத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது சாத்தியமாயிருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அதாவது இந்தக் காலையில், தேவனால் உங்களுடைய சரீரத்தை குணப்படுத்த முடியும், நீங்கள் மீண்டும் நடக்க, முதல் முறையாக நீங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அங்கே உங்களுடைய பிறப்பினூடாக ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளது, ஏதோ ஒரு சிறு காரியம் இடையூறாய் அமைந்துள்ளது, நீங்கள் சரியாக வளரவில்லை. ஒரு மூட்டு மற்றும் மூட்டுக்கு மேலே வளர்வது போல, அது கீழே அதைப் பிடித்துள்ளது. பாருங்கள், அந்த மூட்டு அந்த மற்றொரு மூட்டிலிருந்து வெளியே வர முடிந்தால், அப்பொழுது அது நேராக்கப்பட்டு சரியாயிருக்கும். புரிகிறதா? அது சரிதானே? அது ஒரு சாப மாயுள்ளது. அது ஒரு சாபமாயுள்ளது. அந்த சாபம் நீங்கக் கூடுமானால், அப்போது நீங்கள் சுகமடைவீர்கள். புரிகிறதா? 286 கர்த்தாவே, இது என்னுடைய குழந்தையாயிருந்திருந்தால் என்னவாகும்? இது என்னுடைய சகோதரனாயிருந்திருந்தால் என்னவாகும் என்றே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். விசுவாசத்தினாலே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அந்த சாபத்தை நீக்குகிறேன். ஆமென். 287 கர்த்தாவே, நான் என்னுடைய கரங்களை அவன் மீது வைத்து, அவனுடைய சுகமளித்தலுக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென். 288 பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த வேதனையுற்றுக் கொண்டிருக்கிற ஸ்திரீயின் மேல், அவளுடைய சுகமளித்தலுக்காக, நான் கரங்களை வைக்கிறேன். ஆமென். சகோதரி நாஷ், சில வருடங்களுக்கு முன்னர், தேவன் உங்களை ஒரு புற்று நோயிலிருந்து காப்பாற்றினார். 289 கர்த்தாவே, சகோதரி நாஷுக்கு அவளுடைய வேண்டுகோளை அருளும். உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் அதை வேண்டிக்கொள்கிறேன். அது செய்யப்படும். அதுதான் பதில் சகோதரி நாஷ். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்களுடைய சகோதரிக்கு அவளுடைய வேண்டுகோளைத் தாரும். ஆமென். 290 [ஒரு சகோதரன் மற்றும் சகோதரி சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகின்றனர்—ஆசி.] சகோதரனே, உங்களுக்கு நன்றி, அங்கிருந்த உங்களுடைய ஜனங்களிடத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். தேவன் அதை அருள்வாராக. அப்படிப்பட்ட ஒரு அருமையான நேரம், நான் அங்கிருந்தபோது உங்களுடைய ஜனங்கள் சுற்றி ஒன்று திரண்டனர். நாங்கள் அங்கிருந்தபோது நீர் பம்பாயிலிருந்தீரா? பாருங்கள், அப்படியானால் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிற இந்த காரியங்களை அதாவது நான்…நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 291 கர்த்தாவே, அவர் தன்னுடைய ஜனங்களிடத்தில் கடல் கடந்து திரும்பிச் செல்கையில், அவர் தேவனுடைய வல்லமையினால் நிரப்பப்பட்டு செல்வாராக, அவர் கேட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு வேண்டுகோளிலும் சுகப்படுத்தப்படுவாராக. அவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், போய் அதைப் பெற்றுக் கொள்வாராக. ஆமென். 292 தேவ குமாரனாகிய, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், எங்களுடைய சகோதரி அவளுடைய வேண்டுகோளைப் பெற்றுக்கொள்வாளாக. 293 கர்த்தாவே, எங்களுடைய சகோதரியின் வேண்டுகோளை அருளும். அவளுடைய தொல்லை இப்பொழுதே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக உயிர்த்தெழுதலினால் நிறுத்தப்படுவதாக. ஆமென். சகோதரியே அது நிறுத்தப்படவேண்டும், அப்படியே நிறுத்தப்படவேண்டுமே! 294 [ஒரு சகோதரி பிரான்ஹாமோடு பேசுகிறார்—ஆசி.] நீங்கள் நற்செய்தியில் இதை மீண்டும் மீண்டும் கூற விரும்புகிறீர்களா? [“ஆம்.”] 295 தேவனாகிய கர்த்தாவே, இந்த வாலிப ஸ்திரீ இங்கே நிற்கும்பொழுது, எந்த சுயநல நோக்கங்களுமில்லாதிருக்கிறாள். அவள் தன்னுடைய சகோதரனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள், அவனுடைய இரத்தத்தில் தொற்று இருக்கிறது. நான் அவளுக்கு அவளுடைய வேண்டுகோளை தூதனால் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையினால்; ஒரு சில வாரங்களுக்கு முன்பு, என்னுடைய அறையில் கொடுக்கப்பட்ட, இயேசுகிறிஸ்துவின் தரிசனத்தினால்; நான் இந்தப் பெண்ணுக்கு அவளுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். ஆமென். 296 அது நடந்தாக வேண்டும். நீங்கள் இங்கே அருகில் வசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “மெம்பிஸ், டென்னஸீ” என்று கூறுகிறாள்.—ஆசி.] மெம்பிஸ், டென்னஸீ. எனக்கு ஒரு கடிதம் எழுது. நீ—நீ—நீ உன்னுடைய வேண்டுகோளைப் பெற்றுக்கொள்வாய். 297 சகோதரன் கிரிம்ஸ்லி. [அந்த சகோதரன் சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகிறார்—ஆசி.] சகோதரன் கிரிம்ஸ்லி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 298 கர்த்தாவே, இந்த சகோதரன் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்பதையும், அவர் வெட்டப்பட்ட குழியிலிருந்து வந்ததையும் நாங்கள் நினைவுகூர முடியும். கர்த்தாவே, அவர் உம்முடைய ஆவியை அதிகமாக விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதை அவருக்கு அளிக்கிறேன். அவர் உம்மை பின்தொடர முயற்சித்துள்ள அவருடைய பணிகளைப் பாரும், ஆகையால் தூதனால் மற்றும் ஒரு தரிசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவினால் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு—ஒரு கட்டளையின் வல்லமையினால், நான் சகோதரன் கிரிம்ஸ்லிக்கு அவருடைய வாஞ்சையை அளிக்கிறேன். அவரை முழு விசுவாசத்தினால் நிரப்பும், மற்றும் ஒரு நெருங்கின சஞ்சரிப்பை அவர் பெற்றுக்கொள்வாராக. 299 தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தமாக, போய் சுகமாயிருங்கள் என்று நான் உங்களிடத்தில் கூறியிருந்தால் என்னவாகும்? நான் அந்த அணில்களையும் மற்றும் அவைகளைக் குறித்தும் கூறினதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, மேலும் அது உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், அவர் இந்த “மலையைக்” குறித்து நான் கூறியதை அவர் எனக்கு தருகிறார்…?…உங்களுக்கு மற்றெந்த ஒன்றும் இருக்காது. உங்களுக்கு மற்றெந்த ஒன்றும் இருக்காது. இனி வியாதியே இருக்காது, நீங்கள் இருவரும் சுகமாக இருப்பீர்கள். 300 அவள் கேட்கிற இந்த வேண்டுகோளை, நான் அவளுக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறேன். ஆமென். 301 பிதாவாகிய தேவனே, எங்களுடைய சகோதரிக்கு, இதை, அவளுடைய வேண்டுகோளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அருளும். ஆமென். சரி, சகோதரியே போய், அதை விசுவாசியுங்கள். 302 பிதாவே, இந்த ஸ்திரீ கடந்து செல்கையில், நீர் அவளுக்கு அவளுடைய வேண்டுகோளை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 303 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த ஸ்திரீக்கு அவளுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். ஆமென். அதை சந்தேகப்படாதே. 304 [ஒரு சகோதரி சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகிறாள்—ஆசி.] நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம்.”] சாட்சிப்பகரப்பட்டு…?…இயேசு கிறிஸ்துவின் ஒரு கட்டளையின் மூலமாக அருளப்பட்ட வல்லமையின் மூலமாக, நான் உங்களுக்கு உங்களுடைய வேண்டுகோளை அளிக்கிறேன். போங்கள், மேலும்—மேலும் தேவன் உங்களோடு இருப்பார். 305 சகோதரன் பிரெட், உங்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது? [சகோதரன் சாத்மேன் சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகிறார்—ஆசி.] சகோதரன் ஃப்ரெடி சாத்மேன், நான் உங்களுடைய சரீரத்திலுள்ள அந்த விஷத்தை கடித்து கொள்கிறேன். அது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களை விட்டுச் செல்வதாக. ஆமென். 306 சகோதரன் காலின்ஸ். [சகோதரன் காலின்ஸ் சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகிறார்—ஆசி.] 307 கர்த்தாவே, இந்த விலையேறப்பெற்ற சகோதரன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தேடுகிறார். கர்த்தாவே, எனக்குள்ள எல்லாவற்றோடும், என்னுடைய சகோதரன் காலின்ஸின் மீது இந்த ஆசீர்வாதங்களை நான் கூறுகிறேன். இதை அருளும். பரிசுத்த ஆவியானவர் அவர் மீது வருவாராக, அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவாராக! ஆமென். 308 சகோதரன் காலின்ஸ், நீங்கள் அதைக் பெற்றுக்கொள்ள வேண்டும். அது வந்தாக வேண்டும். தேவன் நம்மை மாத்திரமே சோதிக்கிறார். 309 கர்த்தாவே, அவருடைய வேண்டுகோளை அருளும். அவர் உம்மை சேவிப்பாராக, மற்றும் அவருடைய குடும்பத்தினரும், அவர்களுடைய முழு இதயங்களோடு உம்மை சேவிப்பார்களாக. 310 தேவனே, எங்களுடைய சகோதரிக்கு அவளுடைய வேண்டுகோளை அருளும். அவள் கேட்டுக்கொண்டுள்ள எல்லாவற்றையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, அவள் அதைப் பெற்றுக் கொள்வாளாக. ஆமென். 311 கர்த்தாவே, இந்த சகோதரனுக்கு அவருடைய சபைக்கு உதவி செய்ய பெலத்தைத் தாரும். இது அருளப்படுவதாக. நான் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, இந்த பெலத்தைத் அளிக்கிறேன். ஆமென். 312 [ஒரு சகோதரி சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகிறாள்—ஆசி.] சகோதரியே, நீ பெற்றுள்ள அந்தக் காரியம் ஒரு பயங்கரமான, படபடப்புத்தன்மையாயுள்ளது. நான் உனக்குக் கூறுவது உண்மை என்று நீ விசுவாசிக்கிறாயா? [“ஆம், நான் விசுவாசிக்கிறேன்.”] நான்—நான் உன்னிடத்தில் கூறினது உண்மை என்று இப்பொழுது, நீ விசுவாசிக்கிறாயா? [“ஆம்.”] அப்படியானால் நான் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தின் மூலமாக, உன்னுடைய சுகமளித்தலை உனக்கு அளிக்கிறேன். நான் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பது போல அவ்வளவு நிச்சயமாக, உன்னுடைய படபடப்புத்தன்மை உன்னிடத்திலிருந்து போய்விட்டது. 313 [ஒரு சகோதரன் சகோதரன் பிரான்ஹாமோடு பேசுகிறார்—ஆசி.]…?…அது உங்களுக்கு மேலே நிற்கிறது. 314 தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய விலையேறப்பெற்ற சிறிய சகோதரன் இங்கிருக்கிறார், அவருடைய ஆவியின் ஆழம் ஆழத்தை நோக்கி ஆழம் கூப்பிடுவதுபோல கூப்பிடுகிறது. அவருக்கு பரிசுத்த ஆவி தேவைப்படுகிறது. கர்த்தாவே, அவரால் முடிந்த ஒவ்வொரு வகையிலும், அவர் உம்முடைய ஆராதனையை மதித்துள்ளார். பரிசுத்த ஆவியின் வல்லமையினால், அது என்னுடைய சகோதரன் மீது வருவதாக, அவர் தேவனுடைய வல்லமையினாலும், கிருபையினாலும், பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்படுவாராக. நான் அவரை ஒப்புக்கொடுக்கையில்…அவரை ஏற்றுக்கொள்ளும்.